சுரைக்காய் வைத்து இப்படி சுவையான அடை தோசையை ஒரு முறை செய்து பாருங்கள். இதன் சுவைக்கு அடிமையாகி விடுவீர்கள்

adai
- Advertisement -

எப்பொழுதும் செய்யவும் காலை உணவுகளான இட்லி, தோசை பொங்கல், சப்பாத்தி பூரிக்கு இவற்றை தவிர்த்து சற்று வித்தியாசமான சுவையில் காலை உணவுகளை சமைத்துக் கொடுத்தால், அனைவரும் விருப்பமாக சாப்பிட்டு, அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். ஆனால் வேலை சீக்கிரமாக முடிய வேண்டும் என்று அரிசி மாவு அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு, ஒரு வாரம் முழுவதும் தோசை ஊற்றி வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிடுகின்றோம். என்றாவது ஒருநாள் சற்று வித்தியாசமான உணவுகளை செய்வதாக இருந்தாலும் அன்றைய தினம் பல வேலைகளுக்கு நடுவே இவற்றை செய்வது கடினமாக மாறிவிடுகிறது. எனினும் வாரத்திற்கு ஒரு முறையாவது கிடைக்கின்ற நேரத்தில் சுவைமிக்க, உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய உணவு வகைகளை தட்டாமல் செய்து பாருங்கள். அப்படி உடம்பிற்கு ஆரோக்கியம் தரும் சுரைக்காய் அடையை எப்படி செய்ய வேண்டும் என்பது பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
சுரைக்காய் – 1, இட்லி அரிசி – ஒரு கப், துவரம்பருப்பு – கால் கப், கடலைப்பருப்பு – கால் கப், வரமிளகாய் – 7, இஞ்சி சிறிய துண்டு – 1, சீரகம் – ஒரு ஸ்பூன், சோம்பு – ஒரு ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 5 ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் இட்லி அரிசியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அதனை இரண்டு முறை தண்ணீர் ஊற்றி சுத்தமாக கழுவி, மறுபடியும் அதில் தண்ணீர் சேர்த்து ஊற வைக்க வேண்டும். பின்னர் கால் கப் கடலைப் பருப்பு மற்றும் துவரம் பருப்பையும் நன்றாக கழுவி, இட்லி அரிசியுடன் அதனையும் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் இவற்றுடன் 7 வரமிளகாய் சேர்த்து ஊற வைக்க வேண்டும். அதன் பின் ஒரு சுரைக்காய் எடுத்து அதன் மேல் உள்ள தோலை சுத்தமாக சீவி, சுரைக்காயை பொடியாக நறுக்கி, ஒரு சிலரில் சேர்க்க வேண்டும். பிறகு அதனுடன் ஒரு ஸ்பூன் சோம்பு மற்றும் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இதே மிக்ஸி ஜாரில் ஊற வைத்துள்ள அரிசியில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி, அவற்றை இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் சிறிய துண்டு இஞ்சி சேர்க்க வேண்டும். பிறகு இதனை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இந்த அடை மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து, அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளித்து, அதனுடன் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். பிறகு கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி, இவற்றை அடை மாவுடன் சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு அடுப்பின் மீது ஒரு தோசைக்கல் வைத்து, அதில் கலந்து வைத்துள்ள மாவிலிருந்து ஒவ்வொரு கரண்டி மாவு எடுத்து, தோசை ஊற்றி சாப்பிட்டால் போதும். சுவையான, மிகவும் சத்தான சுரைக்காய் தோசை தயாராகிவிடும்.

- Advertisement -