முகத்தை நிரந்தரமாக வெள்ளையாக வைக்கும் வெட்டிவேர். முகத்தில் இருந்த முகப்பருவின் தடம் தெரியாமல் அழிக்க வெட்டிவேரை எப்படி பயன்படுத்தலாம்.

face-tonner
- Advertisement -

முகத்தில் எந்த ஒரு கருப்பு தழும்பும் இல்லாமல், கண்ணுக்குக் கீழே கருவளையம் இல்லாமல், பார்ப்பதற்குப் பொலிவாக இருக்க வேண்டும் என்றால் என்ன செய்வது. மிக மிக சுலபமான முறையில் நாட்டு மருந்து கடையில் கிடைக்கக்கூடிய இந்த 2 பொருட்களை பயன்படுத்தினாலே போதும். முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்கும். முகத்தில் இருக்கும் முகப்பரு கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கும். உங்களுக்கு முகப்பரு வந்து அந்த இடத்தில் நீண்ட நாட்களாக தழும்பு இருந்தால் அந்தத் தழும்பு ஒரு சில நாட்களிலேயே காணாமல் போய்விடும். பார்ப்பதற்கு உங்களுடைய சருமம் மேக்கப் போடாமலேயே வெள்ளையாக மாறிவிடும். இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்த போக்கும் மலிவான, இயற்கையான அந்த 2 பொருள் என்ன உங்களுக்கு தெரிந்து கொள்ள ஆசையாக இருக்குதா. வாங்க ரெமடிக்குள்ள போகலாம்.

இதில் நாம் பயன்படுத்த போகும் முதல் பொருள் வெட்டிவேர். இரண்டாவது பொருள் ஆவாரம்பூ. இந்த இரண்டு பொருட்களுமே நாட்டு மருந்து கடைகளில் நமக்கு கிடைக்கும். உலர்ந்த ஆவாரம்பூ நாட்டு மருந்து கடைகளில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். ஆவாரம்பூ வீட்டின் அருகில் செடிகளில் ஃப்ரெஷ் ஆகவே கிடைக்கும் என்றால் அந்த பூவையும் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

ஒரு பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அந்த பாத்திரத்தை அடுப்பில் வையுங்கள். அதில் வெட்டிவேர் 5, ஆவாரம்பூ 10, இந்த இரண்டு பொருட்களையும் போட்டு தண்ணீரை நன்றாக கொதிக்க வையுங்கள். தண்ணீர் நன்றாக சுண்டி 1/2 டம்ளர் அளவு வரவேண்டும். வெட்டிவேர் ஆவாரம்பூ சாறு அனைத்தும் தண்ணீரில் இறங்கியிருக்கும். அடுப்பை அணைத்து விடுங்கள். (வெட்டிவேர் ஒரு கட்டாக கிடைக்கும் அதிலிருந்து ஒரு 5 வேரை எடுத்து நம்முடைய ரெமிடிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.)

இந்த தண்ணீர் நன்றாக ஆறிய பின்பு ஒரு வடிகட்டி மூலம் வடிகட்டி கொள்ளுங்கள். நமக்கு தேவையான ஆவாரம்பூ வெட்டிவேர் சாறு தயாராகிவிட்டது. இதை ஒரு டோனர் பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள். அவ்வளவு தான். அப்படியே பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக்கொண்டால் ஏழு நாட்கள் வரை இதை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

உங்களுடைய முகத்தை நன்றாக கழுவி விட்டு துடைத்துவிட்டு, இந்த தண்ணீரை அப்படியே உங்களுடைய முகத்தில் ஸ்பிரே செய்து கொள்ளுங்கள். கழுத்து பக்கத்திலும் ஸ்பிரே செய்து கொள்ளலாம். தேவைப்பட்டால் உடல் முழுவதும் ஸ்ப்ரே செய்து கொள்ளலாம். அது அவரவர் விருப்பம். உங்களுடைய உடம்பும், முக நிறத்திற்கு ஏற்ப வெள்ளையாக மாறும். கழுத்தில் இருக்கும் கருமை நிறம் நீங்கும். இதை காலையில் ஒரு முறை, மாலையில் ஒரு முறை பயன்படுத்துவது மிகவும் நல்லது.

நீங்கள் வீட்டில் இருக்கும் நபராக இருந்தால் மூன்றிலிருந்து நான்கு முறை கூட இந்த ஸ்ப்ரேவை உங்களுடைய முகத்தில் அடித்து அப்படியே விட்டு விடலாம். இந்த ஸ்ப்ரேவில் உள்ள தண்ணீர் அப்படியே உங்களுடைய முகத்தில் பட்டு, உங்களுடைய முகம் உறிஞ்சிக்கொள்ளும். எண்ணெய் வடிவது படிப்படியாக குறையும். உங்கள் முகம் பார்ப்பதற்கு எப்போதுமே ஃப்ரெஷ்ஷாக இருக்கும். மூன்று மாதங்கள் தொடர்ந்து இதைப் பயன்படுத்தி வர முகப்பரு, முகப்பரு இருந்த இடத்திலிருந்த தழும்புகளும் குறைவதை காணமுடியும். 13 வயதிற்கு மேல் இருக்கும் ஆண் பெண் இருபாலரும் இந்த டிப்ஸை ட்ரை பண்ணலாம். உங்களுக்கு இந்த டிப்ஸ் பிடித்திருந்தால் உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -