இவர்களை வணங்கி விட்டு நீங்கள் எந்த வேலையை செய்தாலும் அதில் உங்களுக்கு தோல்வியே இருக்காது. வெற்றி மேல் வெற்றிகள் வந்து குவியும்.

pray
- Advertisement -

புதியதாக ஒரு முயற்சியை எடுக்கின்றோம் என்றால், மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்குமே ஆழ்மனதில் ஒரு பயம் இருக்கும். நம்முடைய முயற்சிக்கு வெற்றி கிடைக்குமா என்று. ஒரு விஷயத்தை தொடங்கும் போது எப்போதுமே நம்முடைய மனதில் குழப்பம் இருக்கவே கூடாது. இந்த முறையில் நமக்கு வெற்றி கிடைக்கும். நமக்கு நன்மை மட்டும் தான் வரும் என்ற மன உறுதியோடு செயல்பட வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். எடுத்த உடனேயே இது என்னால் முடியாது. இது எனக்கு செட்டாகாது என்ற வார்த்தையை சொல்லாதீங்க. குழப்பத்தோடு ஒரு வேலையை தொடங்காதீர்கள்.

வெற்றி கிடைக்க முன்னோர்கள் வழிபாடு
உறுதியான முழு நம்பிக்கை தான், ஒரு மனிதனுக்கு வெற்றி மேல் வெற்றியை தேடி தரும். வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொண்டு வந்து சேர்க்கும். மனதில் உறுதி இல்லாதவர்களுக்கு தோல்வி மட்டும் மிஞ்சும். எப்போதும் குழப்பத்தோடு பலவீனத்தோடு இருப்பவர்களுக்கு, தங்களை பலப்படுத்திக் கொள்ள மன உறுதியை அதிகப்படுத்திக் கொள்ள ஒரு ஆன்மீகம் சார்ந்த குறிப்பை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். நீங்கள் புதியதாக எந்த ஒரு வேலையை தொடங்குவதற்கு முன்பும் இந்த வழிபாட்டை செய்தால், உங்களை அறியாமலேயே உங்களுக்குள் மன உறுதியும் தைரியமும் தன்னம்பிக்கையும் வந்துவிடும். பிறகு நீங்கள் எடுக்கக்கூடிய எல்லா காரியத்திலும் வெற்றியை அடைவீர்கள்.

- Advertisement -

நாளைக்கு ஏதோ ஒரு முக்கியமான வேலைக்காக வெளியே செல்ல போகிறீர்கள், காலையிலேயே எழுந்து சத்தம் பத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறை விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, குல தெய்வத்தை முதலில் நன்றாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு உங்களுடைய அன்றாட வேலைகளை முடிக்க வேண்டும். பெண்களாக இருந்தால் சமைப்பது, ஆண்களாக இருந்தால் உங்களுடைய வீட்டு வேலைகள் என்னவோ அதை முடித்துவிட்டு காலை உணவை முடித்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே செல்லக்கூடிய நேரம் வந்துவிட்டது.

உங்கள் வீட்டில் இறந்த முன்னோர்கள் இருப்பார்கள் அல்லவா. அவருடைய திருவுருவப்படம் உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் அல்லவா, அவர்கள் முன்பாக நமஸ்காரம் செய்து கொள்ள வேண்டும். உங்கள் முன்னோர்களின் பெயரைச்சொல்லி, மறைந்த முன்னோர்களில் எத்தனை பெயர்கள் உங்களுக்கு தெரியுமா, அவர்களின் பெயரை நினைவு கூர்ந்து, நமஸ்காரம் வாங்கிக்கொண்டு, அவர்களுடைய ஆசிர்வாதத்தை பெற்று, உங்களுடைய புதிய முயற்சியை தொடங்க வேண்டும்.

- Advertisement -

தினமும் வேலைக்கு செல்லும்போது கூட இவர்களிடம் நீங்கள் ஆசிர்வாதத்தை வாங்கிக் கொண்டு, அதன் பின்பு உங்களுடைய தினசரி வேலையை தொடங்கலாம். அன்றாட வேலை சுறுசுறுப்பாக நடக்கும். தினசரி வாழ்க்கை சந்தோஷமாக நகரும்.

இந்த ஒரு சின்ன வழிபாடு வாழ்க்கையில் உங்களுக்கு நம்ப முடியாத மிகப்பெரிய வெற்றியை கொண்டு வந்து சேர்க்கும். மனதளவில் பலவீனமாக இருப்பவர்களுக்கு மன உறுதியை கொடுக்கும். உதாரணத்திற்கு கடன் வாங்கப் போறீங்க. கடன் கொடுக்க போறீங்க. வரன் பார்க்க போறீங்க. மருத்துவமனைக்கு போறீங்க அல்லது பிள்ளைகளின் படிப்பு விஷயத்திற்காக போறீங்க அப்படின்னா குலதெய்வ வழிபாட்டையும் செய்ய வேண்டும். முன்னோர்கள் திருவுருவ படத்திற்கு முன் நமஸ்காரம் செய்து ஆசிர்வாதத்தையும் பெற வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கோடீஸ்வர யோகத்தை அள்ளி தர கூடிய இந்த நாளை தவறவிடாமல், இன்று மூன்றாம் பிறை தரிசனத்தின் போது மறக்காமல் இதை மட்டும் செய்து விடுங்கள். பணத்தட்டுப்பாடு என்பதே உங்க வாழ்க்கையில் வராது.

நம்முடைய முன்னோர்களும் குலதெய்வமும் வேறு வேறு அல்ல. வழிபாட்டில் சில வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால் நம் குல தெய்வ ரூபத்தில் நம் முன்னோர்களும், நம் முன்னோர்கள் ரூபத்தில் குலதெய்வமும் தான் நம் குடும்பத்தை பாதுகாக்கிறது என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -