ஒரு காரியத்தை செய்யும் முன்பும் இதை மட்டும் செய்து பாருங்கள் உங்களை வெல்ல எவராலும் முடியவே முடியாது.

pillaiyar-worship
- Advertisement -

எந்த ஒரு விஷயத்திலும் நாம் வெற்றியை காண வேண்டும் என்று தான் எண்ணுகிறோம். செய்யும் செயலில் வெற்றி பெற முழு முதற் கடவுளான விநாயகரின் அருளைப் பெற வேண்டும். விநாயகப் பெருமானின் அருள் இருந்தால் நீங்கள் தொட்டதெல்லாம் ஜெயம் தான். நல்ல காரியங்களை துவங்குவதற்கு முன்னர் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபட்டால் அந்த நல்ல காரியம் தங்கு தடையின்றி சுபமாக முடியும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கை. அந்த வகையில் எந்த செயலையும் செய்யும் முன்பு நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

vinayagar-abishegam

சுபகாரியம் முதல் எல்லா காரியங்களுக்கும் வெற்றியை நமக்கு கொடுக்கக் கூடியவர் வெற்றி விநாயகர் ஆவார். எனவே நீங்கள் எந்த காரியத்தை துவங்கும் முன்பும் உங்களுடைய வீட்டு பூஜை அறையில் கொஞ்சமாக மஞ்சளை தண்ணீரில் கெட்டியாக கரைத்து பிள்ளையாராக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். மஞ்சள் பிள்ளையாரை வேண்டி வணங்கி விட்டு பின்னர் நீங்கள் எந்த காரியத்தைத் துவங்கினாலும் அந்த காரியம் தோல்வியை தழுவுவது இல்லை.

- Advertisement -

சிவசக்தியின் மைந்தனாக விளங்கும் விநாயகரை காலையில் எழுந்தவுடன் அனுதினமும் எந்த ஒரு செயலைத் தொடங்கும் முன்பும் இந்த ஒரு மந்திரத்தை சொல்லி ஜபித்தால் அன்றைய நாள் முழுவதும் உங்களுக்கு வெற்றி தான். அதில் எந்த விதமான மாற்றுக் கருத்தும் இல்லை. விநாயகருக்கு மோதகம் மிகவும் பிடிக்கும் எனவே உங்களால் முடிந்தால் மோதகம் படைத்து வழிபட்டால் இன்னும் கூடுதல் பலன்களை நீங்கள் பெறலாம்.

pidi-kozhukattai1

விநாயகர் சதுர்த்தி அன்று தான் விநாயகருக்கு மோதகம் படைத்து வழிபட வேண்டும் என்பது இல்லை. சதுர்த்தி திதி மற்றும் ஏனைய நாட்களிலும் மோதகம் வைத்து பிள்ளையாரை வழிபட்டால் வேண்டியது எல்லாமே நிறைவேறும். மேலும் கீழ் வரும் இந்த ஸ்லோகத்தை உச்சரித்து மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களையும் நாம் பெறலாம்.

- Advertisement -

ஸ்லோகம்:
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

vinayagar

ஸ்லோகத்தின் பொருள்:
யானை முகத்தை கொண்டவரே! பூத கணங்களால் வணங்கப்பட்டவரே! நாவல் பழம், விளாம் பழம் ஆகியவற்றின் சாற்றை ரசிப்பவரே, உமையவளின் புத்திரனே! துக்கத்தை தீர்ப்பவரே! விக்னேஸ்வரர் ஆகிய நின் பாதங்களை பணிந்து வணங்குகிறேன்! என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள் ஆக இருக்கின்றது. காலையில் எழுந்ததும் முதல் வேலையாக குளித்து முடித்து விட்டு, பூஜை அறைக்கு சென்று அங்குள்ள விநாயகரை தரிசித்து 10 நிமிடம் அமைதியாக தியான நிலையில் அமர்ந்து இந்த ஸ்லோகத்தை சொல்லி விநாயகரை வழிபட்டுவிட்டு நீங்கள் எந்த ஒரு காரியத்தைத் துவங்கினாலும் நிச்சயம் அதில் உங்களுக்கு தோல்வி என்பதே கிடையாது.

broken-coconut

மேலும் விநாயகர் கோவிலுக்கு சென்று அங்குள்ள விநாயகரை தரிசனம் செய்துவிட்டு சிதறு தேங்காய் உடைத்து விட்டு நீங்கள் காரியத்தைத் துவங்கினாலும் ஜெயம் நிச்சயம். விளாம்பழம் மற்றும் நாவல் பழம் என்பதும் கூட பிள்ளையாருக்கு மிகவும் பிடித்தமான பழங்களாகும். எனவே இந்த பழங்களை நைவேத்தியம் செய்து விநாயகரை வழிபட்டால் இன்னல்கள் அகன்று, விக்னங்கள் தீர்ந்து சென்ற இடமெல்லாம் சிறப்பு உண்டாகக் கூடும். பொதுவாக காரிய வெற்றிக்கு விநாயகரை தவிர வேறு எந்த ஒரு கடவுளை வணங்கினாலும் இவ்வளவு சிறப்புகள் இல்லை. எனவே வினாயகரை இந்த வழியில் வழிபாடு செய்து அனைத்திலும் நாமும் வெற்றி பெறலாமே!

- Advertisement -