சுவாமி கும்பிடும் போது பூஜை அறையில் இந்த பொருட்களை எல்லாம் ஒருபோதும் இப்படி வைக்கவே கூடாது. வீட்டிற்கு இதனால் கூட தீராத கஷ்டங்கள் வரலாம்.

poojai-room
- Advertisement -

எல்லோரது வீட்டிலும் பூஜை அறையில் இறைவனுக்கு பூஜை செய்கின்றோம். பூஜை செய்யும் போது வெற்றிலை பாக்கு பழம் தேங்காய் இவைகளை இறைவனுக்காக படைத்துதான் வழிபாடும் செய்கின்றோம். ஆனால் இந்த‌ பொருட்களையெல்லாம் இறைவனுக்கு படைக்கும்போது அதை சாஸ்திர சம்பிரதாய முறைப்படி வைத்தது தான் வழிபாடு செய்கின்றோமா என்று யாருக்குமே தெரியாது. வெற்றிலை பாக்கு தேங்காய் இவைகளை இறைவனுக்கு எப்படி படைக்க வேண்டும். எப்படி படைக்கக் கூடாது என்பதை பற்றிய சாஸ்திரம் கூறும் அறிவுரைகளை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

vetrilai pakku

வெற்றிலை பாக்கை இறைவனுக்கு படைக்கும் போது எப்போதுமே வெற்றிலையின் நுனி பகுதி தெற்கு பக்கம் பார்த்தவாறு இருக்கக்கூடாது என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இனிமேல் உங்கள் வீட்டு பூஜை அறையில் வெற்றிலை பாக்கு இறைவனுக்குப் படைப்பதாக இருந்தால் இந்த ஒரு விஷயத்தை மட்டும் கவனித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக தேங்காயை உடைத்து இறைவனுக்கு படைக்கும்போது தேங்காயில் இருக்கும் கண் மூடி சுவாமிக்கு வலது பக்கம் தான் எப்போதுமே இருக்க வேண்டும். கண் இல்லாத அடி மூடியானது சுவாமிக்கு இடது பக்கம் இருக்க வேண்டும்.

poojai

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். ‘சுவாமிக்கு வலதுபக்கம் கண் உள்ள மூடி இருக்க வேண்டும். சுவாமிக்கு இடது பக்கத்தில் அடி மூடியானது இருக்க வேண்டும்’. அதுவே நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து பார்த்தால், உங்களுடைய இடது பக்கம் கண் உள்ள தேங்காய் மூடி இருக்க வேண்டும். உங்களுடைய வலது பக்கம் கண் இல்லாத அடி மூடி இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

அடுத்தபடியாக இறைவனுக்கு பஞ்ச பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி வைக்கும்போது, அந்த தண்ணீர் பஞ்ச பாத்திரத்தில் நிரம்ப இருக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் தண்ணீரை பஞ்ச பாத்திரத்தில் குறைவாக வைத்து சுவாமிக்கு பூஜை செய்ய வேண்டாம்.

panja-pathiram

தினமும் உங்களுடைய வீட்டில் தீபம் ஏற்றுவதற்கு முன்பு பஞ்ச பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை கீழே கொட்டிவிட்டு, அதில் புதியதாக தண்ணீரை நிரப்பி தான் பூஜை அறையில் தீபம் ஏற்றவேண்டும். அதுதான் நம்முடைய குடும்பத்திற்கு நல்லதும் கூட. இதையும் மறக்காமல் செய்து விடுங்கள்.

panjami-devi

இவ்வாறாக சாஸ்திரங்கள் சொல்லும் சின்ன சின்ன விஷயங்களை உங்களுடைய வீட்டில் கடைபிடித்து வந்தாலே போதும். குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்கள் படிப்படியாக குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -