மருதாணி இலையை மிக்ஸியில் அரைக்கும் பொழுது இந்த 2 பொருள் சேர்த்து அரைங்க, பித்தம் இருந்தா கூட கை செவப்பா செமையா செவக்கும்!

maruthani-kirambu
- Advertisement -

மருதாணி இலை அரைக்கும் பொழுது சில விஷயங்களை கடைப்பிடித்து அரைத்தால் செக்க செவேல் என ரொம்பவே சிவப்பாக சிவக்கும். குறிப்பாக மருதாணி அரைக்கும் போது பித்தம் இருக்கும் உடம்பு உடையவர்களுக்கு ஆரஞ்சு நிறத்தில் தான் சிவக்கும். எவ்வளவு நேரம் அவர்கள் வைத்திருந்தாலும், சிவப்பாக சிவக்கவே செய்யாது. இத்தகையவர்கள் மிக்ஸியில் அரைக்கும் போது இந்த இரண்டு பொருளை மட்டும் சேர்த்து அரைச்சு பாருங்க, உங்க கை கூட எல்லோர மாதிரியும் சிவப்பா சிவக்கும். அது எப்படின்னு? தெரிஞ்சுக்க தொடர்ந்து இந்த அழகு குறிப்பு பதிவை நோக்கி பயணிப்போம் வாங்க.

செயற்கை மருதாணி பயன்படுத்துவதை காட்டிலும், இயற்கையாக இலையை பறித்து நாம் செய்யும் பொழுது தான் நமக்கு அதில் ஒரு ஆர்வமும், ஈடுபாடும் அதிகரிக்கிறது. மேலும் அதில் ஏராளமான நன்மைகளும் ஒளிந்துள்ளன. மருதாணி அடிக்கடி வைத்துக் கொள்ளும் பொழுது உடல் உஷ்ணத்தில் இருந்து குளிர்ச்சி அடைகிறது. இதனால் பல்வேறு நோய்கள் குணப்படுகிறது.

- Advertisement -

குறிப்பாக பெண்கள் அடிக்கடி மருதாணி அணிந்து கொள்வதால் அவர்களுக்குள் இருக்கும் கோபமும் கட்டுப்படும் என்று கூறப்படுகிறது. எனவே பெண்கள் அடிக்கடி மருதாணி வைத்துக் கொள்ளலாம். ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் மட்டும் மருத்துவர்கள் ஆலோசனை கேட்பது நல்லது.

சரி, இப்பொழுது ஃப்ரஷ் ஆக மருதாணி இலைகளை பறித்து விட்ட பிறகு, அதில் காம்புகள் எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இலையை மட்டும் பறித்தால் தான் வைக்கும் பொழுது சிவப்பாக சிவக்கும். பறித்த இலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதில் ஏராளமான தூசுக்கள் இருக்கும். இலைகளை கொஞ்சம் கொஞ்சமாக பகுதியாக பிரித்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். அப்பொழுது தான் நன்கு நைசாக அரைபடும்.

- Advertisement -

அரைக்கும் பொழுது ஒரு சிறு கோலி குண்டு அளவிற்கு புளியை விதைகள் நாரெல்லாம் நீக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் ரெண்டு கிராம்பு சேர்த்து அரைக்க வேண்டும். புளி, கிராம்பு சேர்த்து மருதாணி அரைக்கும் போது பித்தம் இருக்கும் கைகளுக்கு கூட நன்கு சிவக்கும். இது போல கொஞ்சம் கொஞ்சமா எல்லா மருதாணி இலைகளையும் அரைத்து, பின்பு ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதை உடனடியாக வைத்துக் கொள்ளாமல் ஒரு ஒரு மணி நேரம் அப்படியே ஊற விட்டு விடுங்கள். அதன் நேரம் டார்க் பச்சையிலிருந்து லைட் பச்சையாக மாறிவிடும். பிறகு நீங்கள் கைகளில் இட்டுக் கொண்டால் அருமையாக ரொம்பவே இரத்த சிவப்பாக சூப்பராக சிவக்கும். மருதாணி வைத்துக் கொள்வதற்கு முன்பு கையில் ரெண்டு சொட்டு தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
நீங்க கொள்ளை கொள்ளும் பேரழகு பெட்டகமாக மிளிர, கஸ்தூரி மஞ்சளை இந்தப் பொருளுடன் சேர்த்து பேக் போடுங்க. அப்புறம் உங்க அழகை நீங்களே ரசிப்பீங்க.

மருதாணியை மிக்ஸியில் அரைப்பதற்கு பதிலாக அம்மியில் கூட வைத்து அரைக்கலாம். அம்மி இருந்தால் இதை நீங்கள் செய்தால் இன்னும் சூப்பராக இருக்கும். அம்மியில் அரைக்கும் பொழுது மருதாணி ரொம்பவும் நைசாக இல்லாமல், கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொண்டால் அதன் நிறமே வித்தியாசமாக இருக்கும். டிசைன் டிசைனாக மருதாணி வைக்க மிக்ஸியில் நைசாக அரைத்ததை கோன் வடிவில் பாலிதீன் கவர் தயார் செய்து, அதில் இதை சேர்த்து நீங்கள் எப்பொழுதும் போல கைகளில் மாடர்ன் டிசைன் செய்து கொள்ளலாம்.

- Advertisement -