பணம் எவ்வளவு வந்தாலும் கையில் தங்கவில்லை என்றால், வீட்டில் நீங்கள் பணத்தை வைக்கக் கூடாத இடத்தில் வைத்திருக்கலாம்! வீட்டில் பணம் வைக்க கூடாத இடம் என்ன?

home-cash
- Advertisement -

வீட்டில் நாம் பணம் வைக்கும் இடம் சரியான இடமாக இல்லாவிடில் கையில் எவ்வளவுதான் பணம் புழங்கிக் கொண்டு இருந்தாலும், அது வந்த வழியில் சென்று கொண்டே இருக்கும். ஒரு வழியில் பணம் வந்தால், இன்னொரு வழியில் பணம் செலவாகிக் கொண்டே இருக்கும். பணம் வீட்டில் எந்த இடத்தில் எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்கக் கூடாது? என்ன செய்யக் கூடாது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

ஒரு வீட்டில் எப்பொழுதும் பணத்திற்கு ஒரு மதிப்பு இருக்க வேண்டும். கண்ட இடங்களில் பணத்தை போட்டு வைப்பது, அடுத்தவர்களுடைய கண்பார்வை படும்படியாக பணத்தை போட்டு வைப்பது போன்ற விஷயங்களை செய்பவர்கள் இல்லத்தில் எவ்வளவு தான் பணம், காசு சம்பாதிக்கும் சூழ்நிலை இருந்தாலும், அது வந்த வழியில் சென்று கொண்டே இருக்கும், உங்களிடம் நிலையாக நிற்காது. யாராவது ஒருவர் வீட்டிற்கு வருகிறார்கள் அல்லது உங்கள் குடும்பத்திற்கு சம்பந்தமில்லாத நபர் உங்கள் வீட்டில் அமர்ந்து கொண்டு இருக்கிறார் என்றால் அவர்கள் கண்முன்னே நீங்கள் பணத்தை வெளிப்படையாக எடுக்கவும் கூடாது. அவர்கள் முன்னிலையில் பணத்தை எண்ணிக் கொண்டு இருக்கவும் கூடாது.

- Advertisement -

இயல்பாகவே ஒருவர் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தால், அவர்களிடம் நிறைய பணம் இருக்கிறது என்று நாம் நினைப்பதுண்டு! இவ்வாறு நினைப்பதால் திருஷ்டி ஏற்படுகிறது. இதனால் உங்கள் கையில் இருக்கும் பணம் தங்காமல் செலவாகிவிடும். நாம் சம்பாதிக்கும் பணமானது எப்பொழுதும் நமக்கு தேவைப்படும் படியான செலவினை கொடுக்க வேண்டும். மருத்துவமனைக்காக செலவிடுவது அல்லது ஏதாவது பழுது போய் அந்த பொருட்களை மீண்டும் மீண்டும் வாங்குவது என்று வீணாக ஏதாவது ஒரு வழியில் செலவாகி கொண்டு இருந்தால் அங்கு லட்சுமி கடாட்சம் இல்லை என்று அர்த்தம் ஆகும்.

பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்தாலும் அந்த பணம் உங்களுக்கு செலவாகிறதா? என்பதில் தான் லட்சுமியின் அம்சம் நிறைந்திருக்கிறது. வீண் விரயம் ஆகாமல், உங்களுக்கு என நீங்கள் சொந்தமாக, உங்கள் குடும்பத்திற்காக செலவு செய்யும் பொழுது அந்த பணத்தில் லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்திருக்கும். இத்தகைய பணத்தை எப்பொழுதும் வீட்டில் வடக்கு திசையை பார்த்து வைப்பது சிறப்பு! செல்வத்திற்கு அதிபதியாக இருக்கும் குபேர வாசல் நிறைந்திருக்கும் திசை ‘வடக்கு’ திசையாகும், எனவே வடக்கு திசையை பார்த்து பணத்தை எடுக்கும்படி நீங்கள் வைத்திருக்க வேண்டும்.

- Advertisement -

பொதுவாக உங்கள் வீட்டில் பீரோவில் லாக்கர் பகுதி பணம் வைப்பதற்காக தனியாக கொடுக்கப்பட்டிருக்கும். இது உங்களுடைய மார்புக்கு நேராக இருக்கிறது. மார்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறார். உங்கள் மார்பு பகுதியை விட குறைவான உயரத்தில் நீங்கள் பணத்தை வைத்தால் அது கண்டிப்பாக தங்குவதில்லை. உங்களுக்கே தெரியாமல் அது வீண் விரயம் ஆகிவிடும். பணம் வைக்கும் லாக்கர் அல்லது சிறிய பர்ஸ் என்று எதுவாக இருந்தாலும் அது உங்கள் உயரத்துக்கு இணையாக வைக்க வேண்டும். குனிந்து எடுக்கும்படி பணத்தை வைக்க கூடாது.

பணத்தை பூஜை அறை மற்றும் படுக்கை அறையில் வடக்கு திசையை பார்த்து வைத்துக் கொள்ளலாம். வரவேற்பறையில் அனைவரும் பார்க்கும்படியான ஒரு இடத்தில் பணத்தை வைப்பது சரியல்ல! தனதான்யங்கள் நிறைந்திருக்கும் சமையலறையில் இல்லத்தரசிகள் பணத்தை வைத்திருப்பார்கள். தான்யலட்சுமி இருக்கும் இடத்தில், மஹாலக்ஷ்மியை வைப்பது நல்ல ஒரு விஷயம் தான். அதனால் தான் இல்லத்தரசிகளிடம் பணத்தை கொடுத்து வைத்தால், அது கொஞ்சம் கொஞ்சமாக உயருமே தவிர, நிச்சயம் குறைந்து போவதில்லை.

- Advertisement -