உங்கள் வீட்டில் நீங்கள் இப்படித்தான் இருக்கிறீர்கள் என்றால் உங்களுடைய கஷ்டத்தை யாராலும் மாற்றவே முடியாது தெரியுமா?

hair-sink-lakshmi

நாம் வீட்டில் எப்படி இருக்கிறோம் என்பதை பொறுத்தும் நம்முடைய வாழ்க்கை முறை அமைகிறது. எந்த ஒரு வீடு மங்களகரமாகவும், சுத்தமாக இருக்கிறதோ அந்த வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்ய விரும்புகிறாள். அப்படி இல்லாத இடங்களில் மகாலட்சுமிக்கு பதிலாக அவருடைய அக்கா மூதேவி குடி வந்து விடுவாள் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அப்படி நாம் வீட்டில் செய்யும் இந்த சில தவறுகள் தேவையில்லாத பிரச்சினைகளை வீட்டில் உண்டாக்கிவிடும். அவைகள் என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

fight2

தெரிந்தோ தெரியாமலோ ஒரு சிலர் இந்த தவறை செய்து இருக்கலாம். தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் இத்தகைய தவறுகள் எதிர்மறை ஆற்றல்களை ஏற்படுத்தும் என்பதால் நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது. குறிப்பாக பெண்கள் இந்தத் தவறுகளை அடிக்கடி செய்வது உண்டு. அவர்கள் வீட்டில் இப்படி செய்யும் பொழுது அந்த வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே நிறைய சண்டை, சச்சரவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

மகாலட்சுமி 108 பொருட்களில் வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. அப்படியான பொருட்களில் நம் வீட்டில் பயன்படுத்தும் சீப்பும் ஒன்றாகும். அப்படி நாம் பயன்படுத்தும் சீப்பு எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஒரு சிலருடைய வீடுகளில் எல்லாம் அதை சுத்தம் செய்வது என்பதே கிடையாது. வாரம் ஒருமுறை சீப்புகளை சுத்தம் செய்ய வேண்டும். ஒருவர் தலைவாரிய பின்பு சீப்பில் இருக்கும் முடியை உடனே அவர்கள் எடுத்து விட வேண்டும்.

hair-in-comb1

அப்படியே வைத்து விட்டு போவதோ அல்லது மற்றவர் அதை எடுப்பதோ வீட்டில் தரித்திரத்தை ஏற்படுத்தும். இதனால் வீட்டில் தேவையில்லாத சண்டை, சச்சரவுகள் ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. எவ்வளவு அவசரமான சூழ்நிலையாக இருந்தாலும் அவர்கள் வாரிய தலை முடியை அவர்கள் தான் எடுத்து வெளியில் போட வேண்டும். வீட்டிற்குள் தலைமுடி பறந்து கொண்டிருந்தால் அந்த வீட்டில் நிச்சயம் தரித்திரம் ஏற்படும். இதனால் வீட்டில் பண விரயங்கள், பொருள் இழப்புகள் போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்று ஜோதிடம் கூறுகிறது.

தலைமுடி மட்டுமல்ல! நாம் பாத்திரம் கழுவும் விஷயத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த ஒரு வீட்டில் அடிக்கடி பாத்திரம் கழுவுகிறார்களோ அந்த வீட்டில் பணமும் அந்த அளவிற்கு வேகமாக செலவழியும். ஒரு சிலருடைய வீடுகளில் ஒன்றிரண்டு பாத்திரங்கள் விழுந்தால் கூட அதனை உடனே கழுவி வைத்து விடுவார்கள். அது போல சதா தொடர்ந்து பத்து நிமிடத்திற்கு ஒரு முறை தண்ணீரை திறந்துவிட்டு கொண்டிருந்தால் அந்த வீட்டில் நிச்சயம் கடன் தொகை பெருகிக் கொண்டே இருக்கும். ஒரு கடனை அடைக்க இன்னொரு கடனை வாங்குவீர்கள். அதை அடைக்க இன்னொரு கடனை வாங்க வேண்டிய சூழ்நிலை வரும்.

sink-water

ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று தடவை தண்ணீரை திறந்துவிட்டு பாத்திரம் கழுவினால் போதும். சதா தண்ணீரை திறந்துவிட்டு கொண்டிருந்தால் அந்த வீட்டில் தரித்திரம் தாண்டவமாடும். வறுமை ஏற்படும் அபாயம் உண்டு என்கிறது சாஸ்திரம். இது போல சில விஷயங்களை நாம் வீட்டில் தெரிந்தும் தெரியாமலும் செய்து கொண்டிருப்போம். அவற்றை மாற்றிக் கொண்டாலே போதும்! செல்வமானது நிலையாக நிற்கும். இதனால் எந்த ஒரு கஷ்டமும் நம்மை விட்டு எளிதாக விலகிவிடும். முயற்சி செய்து பாருங்கள் பலனை நீங்களே உணர்வீர்கள்.