செல்வம் உங்கள் வீட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைய இது தான் காரணமா? தெரிந்து கொள்ளுங்கள்!

gold-lakshmi
- Advertisement -

செல்வம் என்பது நிலையானது அல்ல என்றாலும் ஒவ்வொருவரிடமும் இன்னொருவரிடம் அது நிச்சயம் சிறிது காலம் தங்கி விட்டு தான் செல்லும். செல்வம், சொத்துக்கள், நகைகள், பணம் இது அத்தனையும் இன்று உங்களிடம் இருந்தால் நாளை வேறு ஒருவரிடத்தில் இருக்கும். இப்படி நிலையில்லாத செல்வம் வீட்டில் நிலை பெற, நாம் சில சாஸ்திர, சம்பிரதாயங்களை கடைபிடிப்பது முறையாகும். வீட்டில் இருக்கும் செல்வமானது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டே செல்கிறது என்றால் அதற்கு என்ன காரணமாக இருக்கும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

gold-pot

செல்வம் குறைவதற்கு மிக முக்கிய காரணம் நம் வீட்டில் இருக்கும் பக்தி குறைபாடு என்றும் கூறலாம். கோடான கோடி செல்வங்களை வைத்திருப்பவர்களுடைய எண்ணம் எப்பொழுதும் லட்சுமி கடாட்சத்துடன் இருப்பதை நாம் கவனித்து பார்த்து இருந்தால் புரிந்திருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற குணமும் இவர்களிடம் இருக்கும். ஒரு உறவு உங்களை விட்டு செல்லும் பொழுது இன்னொரு உறவு உங்களை தேடி வருவது தான் இந்த பிரபஞ்சத்தின் கோட்பாடாக இருக்கும். அதே போல தான் ஒரு பொருள் நம்மை விட்டு சென்றால் இன்னொரு பொருள் நம்மை தேடி வரும் என்பதும் இந்த பிரபஞ்சத்தின் நியதி.

- Advertisement -

புதிதாக ஒரு டிவி வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். பழைய டி‌வி நன்றாகத் தான் இருக்கும், ஆனாலும் அதை விட நன்றாக இருக்கும் இன்னொரு பெரிய டிவியை வாங்குவீர்கள். அப்பொழுது நன்றாக வேலை செய்து கொண்டிருந்த அந்த பழைய டிவி திடீரென ரிப்பேர் ஆகி விடும். டிவி மட்டுமல்ல வீட்டிலிருக்கும் எந்த ஒரு பொருளையும் நீங்கள் நன்றாக இருக்கும் பொழுது அதற்கு பதிலாக இன்னொரு பொருளை வாங்கினாலும் இதே நிலைமை தான்.

sunlight-home

அதற்கு காரணம் அதை மூலையில் போட்டு வைப்பது மட்டுமல்ல, ஒன்று வந்தால் இன்னொன்று சென்று தான் ஆக வேண்டும் என்கிற அடிப்படை கோட்பாடு முழுமையடைய தான் இப்படி நடக்கிறது. இது பலரும் அனுபவபூர்வமாக உணர்ந்து இருப்பீர்கள். எனவே எந்த ஒரு பொருளையும் நன்றாக இருக்கும் பொழுது அதனை வேண்டாம் என்று உதாசீனப்படுத்திவிட்டு இன்னொரு பொருளை நீங்கள் வாங்கினால் உங்கள் வீட்டில் இருக்கும் செல்வமானது குறைந்து கொண்டே இருக்கும்.

- Advertisement -

உங்களுக்கே தெரியாமல் அது கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். எப்பொழுதும் மனிதனுக்கு ஒன்றைவிட ஒன்று பெட்டராக தான் தெரியும். அதற்காக இருப்பதை இழந்தால் வருவதும் போய்விடும் அபாயம் உண்டு என்பதை மனதில் வைத்துக் கொண்டு செயல்பட வேண்டும். ‘ஓல்ட் இஸ் கோல்ட்’ என்பது பழமொழி! பழைய விஷயங்கள் தான் எப்பொழுதும் நமக்கு நிலையானதாக இருக்கும். புதிதாக வந்த ஒன்றிற்காக பழையதை எப்பொழுதும் மறந்து விடக்கூடாது. அப்படி நீங்கள் பழையதை புறக்கணிக்கும் பொழுது, புதிதாக வந்த ஒன்றும் உங்களை விட்டுப் போய் விடும்.

mahalakshmi3

அந்த பழையதும் உங்களை விட்டு சென்றுவிடும். ஒன்றுமே இல்லாமல் நீங்கள் நடுத்தெருவில் நிற்க வேண்டியது தான். இது செல்வத்திற்கும் பொருந்தும். உங்களிடம் புதிதாக ஒரு பொருள் வந்தால் இன்னொரு பொருள் தேவையானதாக இருந்தாலும் அது உங்களை விட்டு சென்றுவிடும். எனவே ஒவ்வொரு விஷயத்திலும் எச்சரிக்கையுடன் நாம் சிந்தித்து செயல்பட்டால், நம்முடைய செல்வமானது மென்மேலும் பெருகுமே தவிர குறைவதில்லை.

- Advertisement -