வீட்டில் கிடுகிடுவென தங்கம் சேர தங்க நகைகளுடன் வைக்க வேண்டிய பொருள் என்ன? நகையுடன் இதை வைத்தால் மேலும் மேலும் நகைகள் பெருகுமாம்!

mahalakshmi-selvam-gold-coins
- Advertisement -

தங்கம் விற்கும் விலைக்கு தங்க நகை வாங்குவது என்பது இன்று மிகவும் சிரமமான சூழ்நிலையாக இருக்கிறது. தங்கம் என்பது ஆடம்பரமாக மட்டுமல்லாமல் அது ஒரு முதலீடாகவும் இன்று மாறி வருகிறது. தங்கத்தை அந்தஸ்துக்காக வாங்குபவர்கள் ஒருபுறம் இருந்தாலும், தங்கத்தை மகளின் திருமணத்திற்காக வாங்கும் பெற்றோர்களும் இருக்கத் தான் செய்கின்றனர். இப்படியிருக்க உங்களுடைய வீட்டில் கிடுகிடுவென தங்கம் சேர்ந்து கொண்டு செல்வதற்கு தங்கத்துடன் வைக்க வேண்டிய பொருள் என்ன? என்பதைத் தான் ஆன்மிக பதிவாக இனி தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

தங்க நகை இருக்கும் இடத்தில் மகாலட்சுமியும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. மற்ற நகைகளை காட்டிலும் தங்க நகைகளுக்கு அதிக வரவேற்பு இருப்பதும் இதற்காகத் தான். மஞ்சள் நிறத்தில் தகதகவென மின்னும் இந்த மங்களகரமான தங்க நகைகள் ஒரு வீட்டில் குண்டு மணி ஆவது வைத்திருக்க, மகாலக்ஷ்மியின் அருளை பெற்று கொள்ளலாம். இப்படி நீங்கள் வைத்திருக்கும் தங்க நகைகள் மேலும் மேலும் பெருகிக் கொண்டே செல்வதற்கு இந்த ஒரு பொருளை வெள்ளிக்கிழமையில் பூஜையறையில் வைத்து நகையுடன் சேர்த்து வைக்க வேண்டும்.

- Advertisement -

தங்க நகைகள் வைக்கும் இடத்தில் எப்பொழுதும் மணம் மிகுந்த வாசனைப் பொருட்களை, அதுவும் மகாலட்சுமிக்கு பிடித்தமான பொருட்களை வைக்க வேண்டும். ஒரு சிலர் தங்க நகைகளை ஒரே பெட்டியில் போட்டு அடைத்து வைத்திருப்பார்கள். ஒரு நகையை இன்னொரு நகையுடன் சேர்த்து எப்பொழுதும் வைக்கக் கூடாது. நகை வாங்க கடைக்கு சென்றாலும் தனித் தனியாகத் தான் நகைகளை பெட்டியில் போட்டு அடைத்து கொடுப்பது உண்டு.

சிறு குண்டுமணி நகையாக இருந்தாலும், மிகப்பெரிய ஆபரணமாக இருந்தாலும் அந்த நகையைத் தனியாக ஒரு பெட்டியில் பிரத்தியேகமாக போட்டு அதற்கென ஒரு பர்ஸையும் கொடுப்பார்கள். நகை தனியாக இருக்கும் பொழுது தான் அதற்கு மதிப்பும், மரியாதையும் அதிகம். வீட்டிற்கு கொண்டு வந்து விட்டாலும் நகைகளை அந்தந்த பெட்டிகளில் போட்டு தனியாக வைத்திருப்பது விசேஷமானது.

- Advertisement -

ஒரு நகையுடன் இன்னொரு நகை சேரும் பொழுது அங்கு நகைக்கு உரிய பக்தி குறைகிறது. நகை மகாலட்சுமியின் அம்சமாக, செல்வமாக விளங்குவதால் அதற்குரிய இடங்களில் வைக்க வேண்டும். கண்ட இடங்களில் கண்டபடி போட்டு வைக்கவும் கூடாது. பீரோவில் வைப்பதாக இருந்தால் நல்ல சுத்தமான பட்டுத் துணியை விரித்து அதில் பன்னீர் தெளித்து காய வைத்து நகையை வைக்கலாம். உங்களிடம் ஓரிரு நகைகள் தான் இருக்கிறது என்றாலும் நீங்கள் வெள்ளிக்கிழமையில் பூஜை செய்யும் பொழுது அந்த நகையை பூஜையில் வைத்து வழிபட வேண்டும். அப்பொழுது தங்கம் மேலும் மேலும் சேர்வதற்கு நிறையவே சாத்தியக்கூறுகள் உண்டு.

பூஜையில் வைக்கும் பொழுது ஒரு கலசத்தில் தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து போட்டு வைக்க வேண்டும். பூஜை முடிந்த பின்பு எடுத்து அணிந்து கொள்ளலாம். பீரோவில் வைப்பவர்கள் அதனுடன் ஒரு சிறு பட்டுத்துணியில் கிராம்பு, சோம்பு, ஏலக்காய், பச்சை கற்பூரம், மஞ்சள், குங்குமம், சாதாரண கற்பூரம் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து நாலைந்து துளசி இலைகளை போட்டு சிறு முடிப்பாக முடிந்து தங்க நகைக்கு அருகே வைத்து விட வேண்டும். இதிலிருந்து வெளிவரும் தெய்வீக மணம் கமழும் வாசம் மகாலட்சுமியை நகையின் பக்கம் ஈர்க்கும். இதனால் உங்கள் வீட்டில் மேலும் மேலும் நகை சேரும் என்பது ஐதீகம்.

- Advertisement -