வீட்டில் இருக்கவே கூடாத செடிகள் என்னென்ன? இந்த செடி எல்லாம் உங்க வீட்டில் இருந்தா நிம்மதியே இருக்காதாம் தெரிஞ்சுக்கோங்க!

maruthani-vasthu
- Advertisement -

எல்லோருடைய வீட்டிலும் விதவிதமான செடிகளை வளர்த்து அழகு பார்ப்பது உண்டு ஆனால் இவைகளுக்கும் உயிர் உண்டு என்பதால் இவைகளால் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல்களும் வெளியிடப்படுகின்றன. எனவே எந்த வகையான செடிகள் வீட்டில் வளர்ப்பது நன்மை தரும்? என்ற வாஸ்து சாஸ்திரங்கள் உண்டு. அது போல எந்த வகையான செடிகள் தீமை தரும்? என்கிற சாஸ்திரங்களும் உண்டு. அந்த வகையில் இந்த செடிகளை கண்டிப்பாக நம்முடைய வீட்டில் வளர்ப்பது அவ்வளவு நல்லதல்ல! இந்த செடிகள் நிம்மதியை கெடுக்க கூடியவை என்று சொல்லப்படுகிறது. அப்படியான செடிகள் என்னென்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

பொதுவாக வாஸ்து சாஸ்திரங்களில் மட்டும் அல்லாமல் ஆன்மீகத்திலும் மருதாணி செடி வீட்டில் இருந்தால் அதிர்ஷ்டம் என்று கூறப்படுவது உண்டு. முட்கள் நிறைந்து இருக்கும் செடிகள் வீட்டில் இருக்கக் கூடாது என்று கூறப்படுவது உண்டு. அந்த வகையில் ரோஜா செடியில் கூட முட்கள் உண்டு எனினும் ரோஜா செடியை தாராளமாக வீட்டில் வளர்க்கலாம். இது மன நிம்மதியை கொடுக்கும். அது போல மருதாணியிலும் முட்கள் உண்டு. இப்படி எல்லா முட்கள் இருக்கும் செடிகளையும் புறக்கணித்து விட முடியாது. அந்த வகையில் மருதாணி செடியில் மகாலட்சுமி இருப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. ஆனாலும் இந்த செடி பட்டு போய் வீட்டில் இருந்தால் அது நமக்கு நிம்மதியை கெடுக்கக் கூடிய துர்க்கேவதைகள் வாசம் செய்யும் இடமாக மாறிவிடுமாம்.

- Advertisement -

மருதாணி செடி உங்கள் வீட்டில் இருந்தால் அது காய்ந்து போய் இருக்கக் கூடாது. கண்டிப்பாக காய்ந்த மருதாணி செடி வீட்டில் இருந்தால் அந்த வீட்டில் நிம்மதி குறைவு இருக்கும். குடும்பத்தில் சண்டைகளும், சச்சரவுகளும், வியாதிகளும் கூட அதிகரிக்க துவங்கும். இப்படியான ஒரு பட்டுப் போன மருதாணி செடியை கண்டிப்பாக வீட்டில் இருந்தால் அகற்றி விடுங்கள், வைத்துக் கொள்ள வேண்டாம்.

மருதாணி செடி மட்டுமல்லாமல் எந்த ஒரு செடியையும் வீட்டில் காய்ந்து போய் வைத்து இருக்கக் கூடாது. எந்த ஒரு பூச்செடியாக இருந்தாலும் காய்ந்த இலைகளை அவ்வப்போது நாம் வெட்டி விடுவது உண்டு. இது அந்த செடிகளுக்கு மட்டுமல்ல, அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கும் நன்மைகளை கொடுக்கும் என்கிறது வாஸ்து சாஸ்திரம் எனவே காய்ந்த இலைகள், சருகுகள் போன்றவை இருந்தால் அதை உடனடியாக அப்புறப்படுத்தி விடுங்கள். செடியிலேயே விட்டு வைக்க வேண்டாம். உயிருள்ள ஒரு செடியில், உயிரற்ற ஒரு இலையோ, சருகோ இருப்பது நல்லதல்ல என்கிறது சாஸ்திரங்கள் எனவே உங்களால் முடிந்த பொழுதெல்லாம் இவைகளை வெட்டி அகற்றி விடுங்கள்.

- Advertisement -

குறிப்பாக காய்ந்து பட்டு போன செடிகளை வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டாம். சிலர் ஆசை ஆசையாக செடிகள் வாங்கி வைத்திருப்பார்கள் ஆனால் அது வளராமல் அப்படியே பட்டு போய்விடும். அதை அப்புறப்படுத்த கூட நேரமில்லாமல் அப்படியே வருட கணக்கில் கிடக்கும். இந்த மாதிரியான செடிகளில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகரித்து காணப்படும் எனவே இவை இவற்றை வீட்டில் வைக்கக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

அதே போல புளிய மரம் அல்லது புளியஞ்செடியை கண்டிப்பாக வீட்டில் நடவே கூடாது. புளியஞ்செடி வீட்டில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் ஒரு செடியாக இருக்கிறது என்று வாஸ்து சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது எனவே புளியமரம், புளியஞ்செடி போன்றவற்றை தெரியாமல் கூட வீட்டிற்குள் நட்டு வைத்து விடாதீர்கள், இது நல்லதல்ல. அது போல சுவர்களில் வளரக்கூடிய செடி வகைகளையும் அவ்வப்பொழுது நீங்கள் வேருடன் பிடுங்கி விட வேண்டும். இதுவும் நம்முடைய குடும்பத்தில் பிரச்சனைகளையும், நிம்மதியின்மையையும் ஏற்படுத்தும்.

- Advertisement -