இந்த 2 பொருட்களை சேர்த்து வீட்டில் தீபம் ஏற்றினால் வெற்றி மேல் வெற்றி வந்து குவியும். தோல்வியே துவண்டு போகும்.

deepam

தோல்வியை கண்டு என்றுமே நாம் அஞ்சக்கூடாது. தோல்வி தான் நம்மிடம் போராடிப் போராடி தோற்றுப் போக வேண்டும். அதன் பின்பு, வெற்றி நம்மை தேடி வந்து குவிய தொடங்கி விடும். முதலில், இதற்கு உங்களிடம் விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் இருக்க வேண்டும். உங்கள் வீட்டை பிடித்திருக்கும் தரித்திரத்தை, உங்களை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கும் தோல்வியையும் விரட்டி அடிக்க வேண்டும் என்றால், வீட்டில் ஆன்மீக ரீதியாக என்ன வழிபாட்டை செய்யலாம் என்பதைப் பற்றிய ஒரு சிறப்பான வழிபாட்டை தான், இன்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். காரிய வெற்றிக்கு, ஐஸ்வர்ய வருகைக்காக ஏற்ற கூடிய சிறப்பான தீபங்களில் இதுவும் ஒன்று. உங்களுடைய முயற்சியை வெற்றியாக மாற்ற, உறுதுணையாக இந்த தீபம் செயல்படும்.

indhirani

இந்திரலோகத்திலேயே ஒரு முறை ஐஸ்வரியத்திற்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டபோது, இந்திராணி இந்த இந்த பூஜையை, இந்திரலோகத்தில் செய்ததாக வரலாறு சொல்கிறது. இந்திரலோகத்திற்க்கு இழுந்து செல்வத்தை மீட்டு தர, இந்திராணி செய்த அந்த பூஜையை, நம்முடைய வீட்டில் இந்த கால சூழ்நிலைக்கு ஏற்ப சுலபமான முறையில் எப்படி செய்யலாம் என்பதைப் பார்த்துவிடுவோம்.

ஒரு சிறிய கலசத்திற்குள் பணத்தை ஈர்க்கக்கூடிய வாசனை மிகுந்த பொருட்களை எல்லாம் சேர்த்து, அதன் மேலே வலம்புரி சங்கை நிறுத்தி, அந்த வலம்புரி சங்கில் ஐஸ்வர்ய தீபத்தை இந்திராணி, இந்திரலோகத்தில் ஏற்றியதாக சாஸ்திரம் சொல்லுகிறது. ஆனால் இன்றைய சூழ்நிலையில் நம் எல்லோராலும் கலசத்தின் மேலே சங்கை பிரதிஷ்டை செய்து, உள்ளே தீபம் போடுவது என்பது சாத்தியமில்லை.

deepam8

உங்களுடைய வீட்டில் இருக்கும் சிறிய பித்தளை சொம்பை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் உள்ளே நிரம்ப தண்ணீரை ஊற்றி விட்டு, கொஞ்சமாக கிராம்பு, ஏலக்காய், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை போட்டு விடவேண்டும். அதன் மேலே ஒரு தட்டை வைத்து மூடி விடுங்கள். அதற்கு மேலே ஒரு மண் அகல் தீபத்தை வைத்து, அதில் தேங்காய் எண்ணெயையும், நெய்யையும் சம அளவில் கலந்து தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

காரிய சித்திக்கு தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றவேண்டும். ஐஸ்வர்யம் நிலைத்து நிற்க நெய்தீபம் ஏற்ற வேண்டும். இந்த இரண்டு பொருளையும் சம விகிதத்தில் கலந்து, தீபம் ஏற்றினால் நிச்சயமாக உங்களுக்கு தோல்வி என்ற ஒன்று இருக்காது. வீட்டில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் படிப்படியாக குறையத் தொடங்கும். எக்காரணத்தைக் கொண்டும் இப்படி மற்ற எண்ணெய்களை கலந்த கலவையை காமாட்சியம்மன் விளக்கில் மட்டும் ஊற்றி ஏற்றாதீர்கள். காமாட்சி அம்மன் விளக்கு சுத்தமான நல்லெண்ணெய் அல்லது நெய் மட்டும்தான் ஊற்றி ஏற்ற வேண்டும்.

deepam

வாரம்தோறும் வரும் வெள்ளிக்கிழமைகளில் இந்த தீபத்தை ஏற்றினால் கூட போதும். தீராத கஷ்டத்தில் இருப்பவர்கள், தீராத பண கஷ்டத்தில் இருப்பவர்கள், உடனடியாக நல்ல பலனை பெற வேண்டும் என்றால் இதை முயற்சி செய்து பார்க்கலாம். நிச்சயமாக நல்ல பலன் தெரியும்.

vilakku deepam

உங்களால் கலச சொம்பில் மீது இந்த தீபத்தை ஏற்ற நேரமில்லை எனும் பட்சத்தில் கூட, சிறிய மண் அகல் விளக்கில் வெறும் தேங்காய் எண்ணெயையும், நெய்யையும் சம அளவில் கலந்து, ஒரு திரி போட்டுத் தீபம் ஏற்றி வந்தால் கூட வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இடுப்பில் அல்லது காலில் கருப்பு கயிறு கட்ட போறீங்களா? அப்படின்னா இதை தெரிஞ்கிட்டு அப்புறமா கட்டிக்கோங்க!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.