வெற்றியைத் தரும், வெற்றிலையின் மேல், இந்த தீபத்தை ஏற்றி பாருங்கள்! ஒரு முறை இந்த தீபத்தை ஏற்றியவர்கள் வாழ்வில் தோல்வி என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

deepam2
- Advertisement -

வாழ்க்கையில் அடுத்தடுத்து தோல்விகளை, குறிப்பாக தொடர் தோல்விகளை சந்தித்து வருபவர்களுக்கு, தொடர் வெற்றியை குவிக்கும் வழிபாட்டு முறையை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நிறைய பேருக்கு இந்த தீபத்தை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. ஜலதீபம், குபேர தீபம், வெற்றி தீபம், செல்வத்தைப் தரக்கூடிய அதிர்ஷ்ட தீபம், எப்படி வேண்டுமென்றாலும் இந்த தீபத்திற்கு பெயரை வைத்துக் கொள்ளலாம். ஆகமொத்தத்தில் வெற்றி உங்கள் பக்கம் இருக்க, தரித்திரம் உங்கள் பக்கம் வராமல் இருக்க வெற்றி தரக் கூடிய, வெற்றிலையை வைத்து இந்த ஜல தீபத்தை எப்படி ஏற்ற வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு.

agal-vetrilai

முதலில் காம்பு நுனி உடையாத 2 வெற்றிலையை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் வெற்றிலையை நன்றாக கழுவி துடைத்து சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். தாராளமாக இந்த தீபத்தை பூஜை அறையில் வைத்து ஏற்றலாம். இந்த தீபம் ஏற்றுவதற்கு கண்ணாடி கிண்ணம் என்று சொல்லப்படும் கண்ணாடி பவுலை பயன்படுத்தலாம். அப்படி இல்லை என்றால் மண் அகல் விளக்கிலும் இந்த தீபத்தை ஏற்றலாம்.

- Advertisement -

முதலில் ஒரு தாம்பூலத் தட்டை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் மேல் ஒரு வெற்றிலையை வைக்கவேண்டும். வெற்றிலையின் மேல், மண் அகல் விளக்கு, அந்த விளக்கிற்க்கு மஞ்சள் குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும். அந்த மண் அகல் விளக்கில், முக்கால் பாகம் சுத்தமான தண்ணீரை ஊற்றி, அதன் பின்பு, மீதியுள்ள கால் பாதத்திற்கு, அந்தத் தண்ணீரில் கட்டாயம் நல்லெண்ணெய் தான் ஊற்றவேண்டும். பஞ்சதீப எண்ணெய் எல்லாம் வேண்டாம். தண்ணீரும் எண்ணெயும் கலந்து இருக்கும் அந்த கலவையோடு ஒரு சிட்டிகை மஞ்சள், ஒரு சிட்டிகை குங்குமம், ஒரு சிட்டிகை பச்சை குங்குமம், இருந்து அதில் போட்டு இந்த தீபத்தை ஏற்றினால் மிகவும் நல்லது. குபேர பகவானை நினைத்து அந்த பச்சை குங்குமத்தை அந்த தண்ணீரில் போட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

vetrilai-deepam

உங்கள் வீட்டில் இருக்கும் எந்த திரியாக இருந்தாலும் பரவாயில்லை. முடிந்தவரை பஞ்சுத்திரியில் இந்த தீபத்தை ஏற்றுவது பலனை இரட்டிப்பாக கொடுக்கும். முதலில் அந்த திரிகளை இரண்டு திரைகளாக திரித்து நல்லெண்ணையில் நனைத்து விட்டு, அதன்பின்பு ஜலத்தில் போட வேண்டும். அப்போதுதான் தீபம் பிரகாசமாக ஒளிரும். இந்த தீபம் எத்தனை பிரகாசமாக ஒளிர்கிறதோ, அத்தனை அளவு உங்களது வாழ்க்கையும் எதிர்காலத்தில் பிரகாசமாக மின்னும் என்பதில் சந்தேகமே கிடையாது.

- Advertisement -

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், உங்களுடைய பூஜை அறையில் இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, அதன் பின்பு விளக்குகளை அணைத்து விடுங்கள். இந்த தீப ஒளி, ஒளிரும் வெளிச்சத்தில் குபேர பகவானை மனதார நினைத்து வீட்டில் இருக்கக்கூடிய பணக்கஷ்டம் தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டால் எப்படிப்பட்ட பணக் கஷ்டமும் கூடிய விரைவில் தீர்ந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அதாவது இருள் சூழ்ந்த உங்களது வாழ்க்கையில் வெளிச்சம் வந்துவிட்டது என்ற நினைப்போடு வேண்டுதலை வையுங்கள்.

deepam

எக்காரணத்தைக் கொண்டும் இந்த தீபத்தை பூஜையறையை தவிர்த்து மற்ற இடங்களில் ஏற்ற வேண்டாம். வாசலிலோ அல்லது வரவேற்பறையில் இந்த தீபம் ஏற்றக்கூடாது. உங்கள் வீட்டு பூஜை அறை வரவேற்பறையில் இருந்தால் அது பரவாயில்லை. ஆனால் சுவாமி படம் இல்லாத மற்ற இடங்களில் இந்த தீபத்தை ஏற்றுவதை தவிர்த்துக்கொள்வது நல்லது. வெற்றிலையை வைத்து ஏற்றக்கூடிய வெற்றி தரும் இந்த தீபம் பூஜை அறையில் மட்டுமே ஏற்றப்பட வேண்டும்.

- Advertisement -

deepam1

வீட்டில் வறுமை நீங்க வேண்டும். வீட்டில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீர வேண்டும். என்று இந்த தீபத்தை வியாழக்கிழமை அன்று ஏற்றினால் குபேரரின் அருளாசியைப் பெற முடியும். வீட்டில் இருக்கக்கூடிய சண்டை சச்சரவு நீங்க வேண்டும். மன அமைதி பெற வேண்டும் சந்தோஷம் அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தீபத்தை வெள்ளிக்கிழமை அன்று ஏற்றலாம். திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்கள், இப்படியாக சுப நிகழ்ச்சிகள் நடக்க வேண்டும் என்றால் செவ்வாய்க்கிழமை இந்த தீபத்தை ஏற்றுவது நல்ல பலனைக் கொடுக்கும்.

mahalashmi3

வியாழக்கிழமை அன்று குபேரரை வேண்டும் போது மட்டும் பச்சை குங்குமத்தை தீபத்தில் போடலாம். மற்ற நேரங்களில் பச்சை குங்குமத்தை மட்டும் தவிர்த்துக் கொண்டு, மற்ற விஷயங்களை அப்படியே பின்பற்றி கொள்ளுங்கள். இப்படியாக ஒரு முறை இந்த தீபத்தை ஏற்றும்போதே உங்கள் வாழ்வில் பிரகாச மான எதிர்காலம் இருப்பதை உங்களால் கட்டாயம் உணர முடியும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
கையில் காசு பணம் இல்லை என்ற கஷ்டமே, காலத்திற்கும் வராது! சேமிப்பு உயர்ந்து கொண்டே செல்ல, நாளை, இஷ்ட தெய்வத்தை வேண்டி இந்த ஒரு முடிச்சை மட்டும் முடிந்து வைத்தால்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -