செலவே இல்லாத தோட்ட பராமரிப்பு! இந்த 3 பொருட்களை இப்படி கொடுத்தால் எல்லா செடிகளும் பெரிது பெரிதாக பூக்களும், காய், கனிகளும் கொடுக்குமே!

eru-onion-plant
- Advertisement -

எல்லோருடைய வீட்டிலும் கண்டிப்பாக செடி, கொடிகளை வளர்த்து வருவது நல்லது. முன்பெல்லாம் நிறைய இடம் இருக்கும் அதனால் சற்றும் யோசிக்காமல் மரம், செடிகளை வளர்த்து வந்தனர். ஆனால் இப்போது இருப்பதற்கே இடமில்லை! எங்கு செடிகளை வளர்ப்பது? என்று தான் கூறுகின்றனர். மரம், செடி, கொடிகளின் மூலமாக தான் நமக்கு இயற்கையான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. வீட்டிற்குள்ளேயே மரத்தை வளர்ப்பது நம் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பதற்கும் சமமாகும். எனவே இருக்கின்ற இடத்தில் என்ன செடிகளை, மரங்களை வளர்க்க முடியுமோ, அவற்றை வளர்த்து வாருங்கள்.

plant-uram

இதற்கு அதிகம் செலவாகுமே? உரம் வாங்க வேண்டுமே? என்று யோசிக்க வேண்டாம். வீட்டில் இருக்கும் சாதாரண பொருட்களை வைத்தே அதற்கு தினம்தோறும் உரம் கொடுத்து செழிப்பான முறையில் வளர்த்து விடலாம். அந்த வரிசையில் இந்த மூன்று பொருட்களும் உங்கள் செடிகளுக்கு சிறந்த உரமாக இருக்கும். அது என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

- Advertisement -

முதலாவதாக இருப்பது ஆட்டு எரு. செயற்கையாக கிடைக்கும் ரசாயன உரங்களால் ஆபத்து உண்டாகுமே ஒழிய நன்மைகள் எதுவும் நடைபெறப் போவது இல்லை. மாட்டு சாணத்தை விட 2 மடங்கு சாம்பல் சத்து மற்றும் தழைச்சத்து அதிகம் கொண்டுள்ள இந்த ஆட்டு எரு இயற்கையான ஊட்ட சத்துள்ள உரமாக உங்கள் செடி, கொடிகளுக்கு நிச்சயம் இருக்கும் எனவே ஆடு வளர்ப்பவர்களிடம் சொல்லி வைத்தால் ஆட்டு எரு இலவசமாகவே கிடைக்கும். அதனை வாங்கி வந்து வாரம் ஒருமுறை உங்கள் செடிகளுக்கு வேரை சுற்றி கொஞ்சமாக தூவி விடுங்கள்.

goat-eru

ஆட்டு எருவை உரமாக செடிகளுக்கு கொடுத்து வந்தால் மண்ணில் இருக்கும் கரிமப் பொருட்களின் அளவை அதிகரிக்க செய்து மண்ணில் இருக்கும் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள உதவி செய்யும். மேலும் இதில் இருக்கும் போரான், மெக்னீசியம், கோபால்ட், தாமிரம், துத்தநாகம், மாலிப்டினம் போன்றவையும் செடிகள் உடைய வளர்ச்சிக்கு பெருமளவு நன்மைகளை செய்யும்.

- Advertisement -

இரண்டாவதாக செடிகளுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்க நாம் தூக்கி எறியும் முட்டையின் ஓட்டை சேகரித்து காய வைத்து நன்கு பொடி செய்து வைத்துக் கொண்டால் போதும்! வாரம் ஒரு முறை எல்லா செடிகளுக்கும், ஒவ்வொரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு கொடுத்து வந்தால் கூட செடி, கொடிகளுக்கு எந்த விதமான விலையுள்ள உரமும் தேவைப்படாது. அவ்வளவு சூப்பராக பெரிய பெரிய இலைகளையும், அடர்த்தியான நிறத்தையும், பூக்களையும், கனிகளையும், காய்கறிகளையும் விளைவித்து நம்மை ஆச்சரியப்படுத்தும். ரோஜா செடிக்கு மட்டுமல்ல, எல்லா செடிகளுக்கும் கால்சியம் சத்து தேவை. எனவே எல்லா செடிகளுக்கும் முட்டை ஓட்டினை நேரடியாக கொடுப்பதை விட இவ்வாறு தூள் செய்து கொடுப்பது சிறந்த பலனை கொடுக்கும்.

onion

மூன்றாவதாக வெங்காயத்தின் உடைய தோல் அதிலும் சின்ன வெங்காய தோல் மிகவும் நன்மைகளை புரியக்கூடியது. இரண்டு கைப்பிடி அளவிற்கு வெங்காய தோலினை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் நன்கு ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து பின்னர் வடிகட்டி அதனுடன், சாதாரண தண்ணீரை நான்கு மடங்கு அதிகமாக ஊற்றி ஐந்து லிட்டர் ஆக்கி எல்லாச் செடிகளுக்கும் வேரிலிருந்து இலைகள் வரை, எல்லா இடங்களிலும் ஸ்பிரே செய்து வந்தால் போதும். செடிகளுக்கு நல்ல சத்துக்கள் கிடைத்து அதிக அளவிலான பூக்களையும், அதிக அளவிலான காய், கனிகளையும் கொடுக்கும். இந்த இயற்கையாகக் கிடைக்கும் 3 உரங்கள் நிச்சயம் உங்கள் வீட்டு தோட்டத்திற்கு பேருதவி செய்யும் எனவே இவற்றை பயன்படுத்தி பலன் பெறலாமே!

- Advertisement -