வெய்யில் காலத்தில் வீட்டை இப்படி துடைத்தால், வீடும் புத்துணர்ச்சியாக இருக்கும். வீட்டில் இருப்பவர்களும் நாள் முழுவதும் ஃப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல ஜில்லுனு இருப்பீங்க.

mop
- Advertisement -

வெயில் காலத்தில் நம்முடைய வீட்டுக்குள் சின்ன சின்ன பூச்சிகளின் தொந்தரவு அதிகமாக இருக்கும். உதாரணத்திற்கு இந்த மாம்பழ வாசனைக்கு, ஈ நிறைய வீட்டிற்குள் வந்து தங்கிவிடும். எறும்புகள் சாரை சாரையாக குளிர்ச்சியான இடங்களில் வீட்டிற்குள் படையெடுக்கும். குறிப்பாக குழந்தைகள் இருக்கும் வீட்டில் இந்த சின்ன சின்ன பூச்சி பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டும் என்றால், வெயில் காலத்தில் வீட்டை கூடுதல் கவனம் எடுத்து சுத்தம் செய்ய வேண்டும்.

வெயில் காலத்தில் வீடு புத்துணர்ச்சியாக இருக்க வீட்டை எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய ஒரு பயனுள்ள வீட்டு குறைப்பு, இதோடு வெயில் காலத்தில் நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக வியர்வை துர்நாற்றம் வீசாமல் இருக்க எப்படி குளிக்கலாம் என்பதை பற்றிய இன்னொரு பயனுள்ள குறிப்பையும் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

வெயில் காலத்திற்கு தேவையான பயனுள்ள வீட்டு குறிப்பு:
முதலில் வீடு துடைக்க சூப்பரான டிப்ஸ் ஒற்றை பார்த்து விடுவோம். வெதுவெதுப்பான தண்ணீரை முதலில் வீடு துடைக்க தேவையான அளவு ஒரு டப்பில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 5 லிருந்து 6 புதினா இலைகளை நன்றாக கசக்கி நசுக்கி போட்டு விடுங்கள். பிறகு வேப்ப இலை 1 கைப்பிடி அளவு, சூடம் சுவாமிக்கு கற்பூரம் ஏற்றுவோம் அல்லவா. அந்த கற்பூரத்தை நசுக்கி இதோடு போட்டு நன்றாக கலந்து விடுங்கள். 2 சிட்டிகை மஞ்சள் பொடி, 1 கைப்பிடி கல் உப்பு, இதோடு வீடு துடைக்க கூடிய லிக்விட் ஒரு மூடி ஊற்றி நன்றாக கலந்து விடுங்கள்.

ஒரு 15 லிருந்து 20 நிமிடம் இந்த பொருட்கள் எல்லாம் அந்த தண்ணீரிலேயே ஊறிய பிறகு, மேலே மிதக்கும் அந்த இலைகளை மட்டும் தனியாக எடுத்து தூர போட்டு விடுங்கள். பின்பு இந்த தண்ணீரை பயன்படுத்தி உங்களுடைய வீட்டை துடைத்து பாருங்கள். உங்களுடைய வீடு வெயில் காலத்தில் நல்ல நறுமணத்தோடு, புத்துணர்ச்சியோடு இருக்கும். இதிலிருந்து வரும் புதினா வாசம் வெயிலில் கூட அப்படி ஒரு மனநிறைவை கொடுக்கும்.

- Advertisement -

இதில் இருக்கும் வேப்பிலை கல் உப்பு, கற்பூரம், மஞ்சள் தூள் எல்லாம் கிருமி நாசினியாக செயல்படும். வாரத்தில் இரண்டு நாட்கள் கட்டாயம் இப்படி மாப் போட வேண்டும். மாப்பை ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும், நன்றாக வெயிலில் காய வைத்து விட்டு, காய்ந்த மாப்பை தான் தண்ணீரில் நனைத்து பயன்படுத்த வேண்டுமே தவிர, ஈர மாப்பைக் கொண்டு திரும்பத் திரும்ப வீட்டை சுத்தம் செய்தால் அதில் இருக்கும் கிருமி மீண்டும் மீண்டும் வீட்டில் பரவ செய்யும். அதையும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

சரிங்க, வீட்டை சுத்தம் செய்து விட்டோம். ஆனால் இப்படி வேலை செய்து செய்து உடம்பில் துர்நாற்றம் வீசுகிறதே. அதற்கு என்ன செய்வது. இதற்கும் ஒரு வழி உண்டு. எப்போதுமே வெயில் காலத்தில் வெந்நீரில் குளிப்பதை விட, பச்சை தண்ணீரில் குளிப்பது ரொம்ப ரொம்ப நல்லது. குளிப்பதற்கு தேவையான அளவு பச்சை தண்ணீரை பக்கெட்டில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் எலுமிச்சம் பழச்சாறு 2 ஸ்பூன், புதினா இலைகள் 5 லிருந்த 6, கசக்கி போட்டு விட வேண்டும். இதோடு ஒரே 1 தக்காளி பழத்தை போட்டு உங்கள் கையாலேயே கரைத்து விடுங்கள். அந்த விதைகள் எல்லாம் வெளியே வந்து விடட்டும்.

இதையும் படிக்கலாமே: இனி நம்ம கையில் மட்டும் மருதாணி சிவக்கலையே என்ற கவலையே உங்களுக்கு வராது. இப்படி வச்சு பாருங்க இது வரைக்கும் உங்க கை இப்படி சிவந்ததே இல்லைன்னு சொல்ற அளவுக்கு மருதாணி சிவந்து இருக்கும்.

தக்காளி பழம், புதினா இலை, எலுமிச்சப்பழச் சாறு, இந்த மூன்று பொருட்களும் தண்ணீரில் 30 நிமிடங்கள் அப்படியே ஊறட்டும். அதன் பின்பு இந்த தண்ணீரில் குளித்தீர்கள் என்றால், உங்களுடைய உடல் நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கும். வியர்த்தாலும் வியர்வை துர்நாற்றம் வீசாது. தினமும் காலையில் ஒரு வேலை, மாலையில் ஒரு வேலை, இப்படி குளித்து பாருங்கள். வெயில் காலத்தில் கூட ஃப்ரிட்ஜில் வைத்து ஆப்பிள் மாதிரி நீங்க ஜில்லுனு இருப்பீங்க.

- Advertisement -