தலை முழுக்க பொடுகு இருக்கிறதா? இந்த 2 இலை போதும் பொடுகு பிரச்சனை இனி உங்களை நெருங்கவே நெருங்காது!

podugu-dandruff-leaf-ilai
- Advertisement -

பொடுகு பிரச்சனை ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக இன்றைய தலைமுறையினருக்கு அதிகம் காணப்படுகிறது. தலையில் பொக்கு பொக்காக வெள்ளையாக உறிந்து வரக்கூடிய இந்த பொடுகானது பல்வேறு காரணங்களால் நம்முடைய தலைமுடியில் வந்து சேர்கிறது. இது ஒரு தொற்றாகவே இருந்து வருகிறது.

இந்த பிரச்சனை ரொம்ப சுலபமாக நீக்கக்கூடிய தன்மை இந்த 2 மூலிகை இலைகளுக்கு உண்டு. இது சாதாரணமாக எல்லோருடைய வீட்டிலும் கிடைக்க கூடியதுதான். இந்த ரெண்டு இலைகளை வைத்து எப்படி பொடுகு பிரச்சனையை விரட்டி அடிக்க போகிறோம்? அது என்ன இலை? என்பதைத்தான் இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் இனி நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

- Advertisement -

தலைமுடியில் இருக்கக்கூடிய பொடுகு பிரச்சனை வருவதற்கு ஏராளமான காரணங்கள் உண்டு. அதில் முதல் காரணமாக கூறப்படுவது வறட்சியான சருமம்! தலைமுடியிலும் ஈரப்பதம் எப்பொழுதும் இருக்க வேண்டும். சிலர் எண்ணெய் கூட தடவாமல் எப்பொழுதும் வறண்டு போகும்படி தலைமுடியை வைத்திருப்பார்கள். இப்படி இருப்பவர்களுக்கு கண்டிப்பாக பொடுகு பிரச்சனை அதிகமாக காணப்படும்.

தலையை நன்றாக துடைக்காமல் இருந்தாலும், தண்ணீர் அல்லது சோப்பு போன்றவை தங்கி பொடுகு உற்பத்தி ஆவதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டு. அதிகமான எண்ணெய் பசை இருந்தாலும், அழுக்குகள் சேர்ந்து பொடுகு பிரச்சனை உண்டாகும். வியர்வை தலைமுடியில் உற்பத்தியாகும் பொழுது அதனால் கூட பொடுகு பிரச்சனை தொடரும்.

- Advertisement -

நுண்ணுயிர் கிருமிகளாலும், தோல் நோய்களாலும் கூட பொடுகு பிரச்சனை வருகிறது. இரசாயன கலவை அதிகம் உள்ள ஷாம்பு பயன்படுத்துவதால் பொடுகு பிரச்சனை வரலாம். மன அழுத்தம், கவலை உள்ளவர்களுக்கும் பொடுகு வரும் என்று கூறப்படுகிறது. சோப்பு, துண்டு போன்றவற்றை பொடுகு பிரச்சனை இருப்பவர்கள் தனியாகத்தான் பயன்படுத்த வேண்டும். இதனால் மற்றவர்களுக்கும் அது பரவாமல் இருக்கும்.

ஹாஸ்டலில் தங்கியுள்ளவர்கள், பேச்சுலர்ஸ் போன்றவர்கள் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அடுத்தவர்களுடைய பொருட்களை உபயோகிக்கும் பொழுது பிரச்சினை உங்களுக்கும் வர வாய்ப்புகள் உண்டு. நெய், பால், வெண்ணெய் போன்றவற்றை எடுத்துக் கொள்வதால் இதில் இருக்கக்கூடிய கொழுப்புத் தன்மையால் பொடுகு கிருமிகள் நீங்குவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

ஷாம்பு பயன்படுத்தும் பொழுது அதில் சாலிசிலிக் அமிலம் சல்பர் போன்றவை இருக்கிறதா? என்று பாருங்கள். அந்த ஷாம்பு பொடுகு பிரச்சனையை தீர்க்கும். மேலும் இரண்டு இலைகள் அதாவது கொய்யா இலைகள் ஒரு கைப்பிடி அளவிற்கு எடுத்து தண்ணீரில் ஒரு பத்து நிமிடம் ஊற வைத்து, பின்னர் மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அதேபோல ஒரு கைப்பிடி அளவிற்கு கருந்துளசி அல்லது சாதாரண துளசியை எடுத்து கொய்யா இலையுடன் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். அரைத்த இந்த கலவையை ஒரு மெல்லிய துணியில் போட்டு நைசாக வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
இயற்கையாக நம்ம முகம் பிரைட்டாக பளிச்சுன்னு இருக்க கண்ட கண்ட கிரீமையும் வாங்காதீங்க! இதை ட்ரை பண்ணி பாருங்க.

ஒரு பேஸ்ட் கன்சிஸ்டெண்சிக்கு உங்களுக்கு கிடைக்கும். இதை நீங்கள் தலை முழுவதும் தடவி உலர விட்டு விடுங்கள். ஒரு அரை மணி நேரத்தில் நன்கு உலர்ந்து காய்ந்ததும், சாதாரணமாக சீயக்காய் அல்லது மைல்டான ஷாம்பூ ஏதாவது போட்டு தலைக்கு குளித்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான், இது போல தொடர்ந்து வாரம் இரண்டு முறை செய்து வந்தால், பொடுகு பிரச்சனை உங்களை இனி தொடரவே தொடராது.

- Advertisement -