எவ்வளவு வெயிலில் மேக்கப் போட்டு சென்றாலும், உங்களுடைய முகம் வியர்த்து கொட்டாமல் அப்படியே ப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல ஃப்ரெஷ்ஷாக இருக்க இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க.

face3
- Advertisement -

இந்த வெயிலில் என்னதான் சோப்பு போட்டு முகத்தை கழுவினாலும் சரி, விலை உயர்ந்த ஃபேஸ் வாஷ் போட்டு முகத்தை கழுவினாலும் சரி, ஒரு சில நிமிடங்களில் நம்முடைய முகம் வியர்த்து வடிய தொடங்கிவிடுகிறது. குளித்து முடித்து முகத்தில் மேக்கப் போட்டு வெளியே சென்றாலும் முகத்தில் எண்ணெய் வடிய தான் செய்கிறது. என்னதான் செய்வது. வெயிலிலும் எப்போதும் ஜில்லென்று குளிர்ச்சியாக பிரஷ்ஷாக இருக்க இயற்கையான முறையில் நம் வீட்டிலேயே ஒரு குளியல் பொடி எப்படி தயாரிப்பது, என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவைப்பட்டால் இந்த பொடியை உடல் முழுவதும் பூசி ஸ்கரப் செய்து குளித்து கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் முகத்திற்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டாலும் அது அவரவர் விருப்பம். சரி நேரத்தைக் கடத்தாமல் சட்டென இந்த ரெமிடியை பார்த்து விடுவோம்.

- Advertisement -

ஒரு சிறிய டம்ளர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த பொருட்களை அளந்து எடுத்தால் சரியாக இருக்கும். பாச்சைப்பயறு – 1 கப், கடலைப்பருப்பு – 1/2 கப், வெந்தயம் – 1 ஸ்பூன், காய்ந்த ஆரஞ்சு பழத்தோல் – 1 கப், காய்ந்த ரோஜா இதழ்கள் – 1 கப், இந்த பொருட்களை எல்லாம் மிக்ஸியில் போட்டு அரைத்து சலித்து எடுத்துக் கொண்டாலும் சரி, அப்படி இல்லையென்றால் ரைஸ் மில்லில் கொடுத்து நைசாக அரைத்து எடுத்துக் கொண்டாலும் சரிதான்.

இந்தப் பவுடரை ஒரு பாட்டிலில் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தேவையான அளவு இந்தப் பொடியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதோடு கொஞ்சமாக ரோஸ் வாட்டர் அல்லது தண்ணீர் ஊற்றி கலந்து அந்த பொடியை அப்படியே முகத்தில் பேக் போல போட்டு, 5 நிமிடங்கள் விட்டு விட்டு அதன் பின்பு ஸ்கரப் செய்து சோப்பு போடாமல் முகத்தை கழுவிக் கொள்ள வேண்டும். அதன் பின்பு முகத்தை துடைத்துவிட்டு ஐஸ் கியூபை எடுத்து, ஒரு காட்டன் கைக்குட்டையில் வைத்து மடித்து, உங்களுடைய முகத்தில் லேசாக ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின்பு நீங்கள் வெயிலில் வெளியே செல்வதாக இருந்தால் முகத்திற்கு மேக்கப் போட்டு வெளியே சென்று பாருங்கள். உங்களுடைய முகத்தில் வியர்த்தது கொட்டுவது குறைவாக இருக்கும்.

- Advertisement -

இதை உங்களுடைய உடல் முழுவதும் தேய்த்துக் குளித்தாலும் தவறு கிடையாது. சோப்பு போட்டு முதலில் குளித்துவிட்டு அதன் பின்பு இந்த பொடியை உடல் முழுவதும் தேய்த்து ஸ்கிரப் செய்து, அதன் பின்பு குளித்து வர உடல் முழுவதும் இருக்கக்கூடிய வியர்வை கூட கொஞ்சம் கட்டுப்பாட்டிற்கு வரும். அப்படியே வியர்த்து வடிந்தாலும் வியர்வையின் மூலம் கெட்ட வாடை வீசாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

இந்த பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வர உங்களுடைய சரும அழகும் கூடிக்கொண்டே செல்லும். சீக்கிரத்தில் தோல் சுருக்கம் வராது. வயதான தோற்றத்தைத் தள்ளிப் போடவும் இந்த பேக் பயனுள்ளதாக இருக்கும். வெயில் காலத்தில் நம்முடைய உடம்பில் அதிகமாக வியர்வை வெளியேறுவதால் நீர் சத்து குறைந்துவிடும். அடிக்கடி தண்ணீரை குடித்துக் கொண்டே இருங்கள். கூடுமானவரை பிரிட்ஜ் தண்ணீரை தவிர்த்துவிடுங்கள். பானைத் தண்ணீரை குடித்து பழகுங்கள். உடல் ஆரோக்கியத்திற்கு சரும அழகிற்கு இது மிக மிக நல்லது.

நேரடியாக சூரிய ஒளி நம்மீது படும்படி வெளியே செல்வதாக இருந்தால் கட்டாயமாக உங்களுடைய சருமத்திற்கு ஏற்ற சன்டேன் க்ரீம் பயன்படுத்தவேண்டும். அடிக்கும் வெயிலுக்கு சன்டேன் இல்லாமல் வெளியே செல்லும் போது நம்முடைய சருமத்தில் நிறைய பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய சரும அழகின் மேல் உங்களுக்கு ஆசை இருந்தால் மேற்கண்ட குறிப்புகளை பின்பற்றி பலன் அடையலாம்.

- Advertisement -