இந்த சம்மருக்கு, இந்த குறிப்புகள் எல்லாமே இல்லத்தரசிகளுக்கு தேவைப்படும். பார்த்து பார்த்து உங்களுக்காக பக்குவமாக சொல்லப்பட்டுள்ள 10 குறிப்புகள்.

milk
- Advertisement -

வெயில் காலம் வந்துவிட்டது என்றாலே, நம்முடைய வீட்டில் சமையல் அறையில் நிறைய பொருட்கள் வீணாக தொடங்கிவிடும். வெயிலின் சூட்டுக்கு தாக்குபிடிக்காமல் சில பொருட்கள் சீக்கிரம் கெட்டுப் போய்விடும். அப்படி இந்த வெயில் காலத்தில் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை எல்லாம் கெட்டுப் போகாமல் பாதுகாப்பதற்கு ஒரு சில குறிப்புகளையும், இதோடு சேர்த்து இன்னும் சில பயனுள்ள வீட்டு குறிப்பு களையும் தான் இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ள போகின்றோம்.

குறிப்பு 1:
வெயில் காலத்தில் அடிக்கடி கெட்டுப் போகக்கூடிய பொருட்களில் முதல் வரிசையில் நிற்பது பால். அதிலும் பசும்பாலாக இருந்தால் அது உடனடியாக கெட்டுப் போய்விடும். நெல்மணிகள் கொஞ்சம் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதிலிருந்து ஒரு நெல்லை எடுத்து 1/2 லிட்டர் அளவு பாலில் போட்டு வைத்தால், அந்த பால் நீண்ட நேரத்திற்கு கெட்டுப் போகாமல் இருக்கும். காய்ச்சாத ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடிய பாலில் கூட இந்த நெல்மணிகளை போட்டு வையுங்கள். சில சமயம் வெயில் காலத்தில் காய்ச்சாத பால் கூட ஃப்ரிட்ஜில் இருந்தால் கெட்டுப் போகும் அல்லவா.

- Advertisement -

குறிப்பு 2:
இந்த பால் வாங்கி 3 நாட்கள் ஆகிவிட்டது. இதை காய்ச்சினால் கெட்டுப்போக கூடாது என்றால், அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றி காய்ச்சி பாருங்கள் அந்த பால் கெட்டுப் போகாமல் காய்ந்து வர நிறைய வாய்ப்புகள் உள்ளது.

குறிப்பு 3:
அடுத்தது தயிர், மாவு. இந்த இரண்டுமே வெயில் காலத்திற்கு தாங்காது. பிரிட்ஜில் வைத்தால் கூட சீக்கிரம் புளித்து விடும். இந்த தயிரிலும் மாவிலும் நான்கைந்து தேங்காய் பத்தைகளை போட்டு வையுங்கள். சின்ன சின்ன சில்லுகளாக வெட்டிய தேங்காய் பத்தைகளை போட்டு வைத்தால், தயிரும் மாவும் எளிதில் புளிக்காமல் இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 4:
முழுசாக நம் வீட்டில் வைத்திருக்கும் தேங்காய். அடிக்கும் வெயிலில் விரிசல் விட்டு தண்ணீர் கசிந்து சீக்கிரமே கெட்டுப் போகும். உங்களுடைய வீட்டில் முழு தேங்காய் இருந்தால் அதை நின்றபடி, குடுமி பக்கம் மேலே இருக்கும் படி, பிரிட்ஜ் ஸ்டோர் செய்து வையுங்கள். தேங்காய் சீக்கிரம் கெட்டுப் போகாது.

குறிப்பு 5:
ஒரு அகலமான பாத்திரத்தில் கொஞ்சம் வெல்லம் போட்டு அதில் சிறிதளவு தண்ணீரை ஊற்றி, இரண்டு ஏலக்காய்களை போட்டு, நன்றாக கொதிக்க வையுங்கள். வெல்லம் கரையும் அளவுக்கு கொதிக்க விட்டால் போதும். பாகு எடுக்க வேண்டும் என்ற அவசியம் இருக்காது. வெல்லம் தண்ணீரில் கரைந்தவுடன் இதை வடிகட்டி நன்றாக ஆற வைத்து, அப்படியே பிரிட்ஜில் ஸ்டோர் செய்தால் ஒரு மாசம் கெட்டுப் போகாது. நீங்கள் எந்த ஜூஸ் குடித்தாலும் சரி சர்க்கரைக்கு பதிலாக இந்த வெல்லக் கரைசலில் இருந்து தேவையான அளவு ஊற்றி கலந்து குடித்தால் உடலுக்கு ஆரோக்கியம்.

- Advertisement -

குறிப்பு 6:
இல்லைங்க உங்களுக்கு சர்க்கரை தான் பிடிக்குமா. சர்க்கரையை மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக பொடி செய்து டப்பாவில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். லெமன் ஜூஸ் ஆக இருந்தாலும் அதில் இந்த சர்க்கரை தூளை போட்டவுடன் கரைந்து விடும். உடனடியாக ஜூஸ் தயார் செய்துவிடலாம்.

குறிப்பு 7:
கூடுமானை வரை உணவில் வெள்ளை சர்க்கரையை சேர்த்துக் கொள்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு வெள்ளை நிறத்தில் சர்க்கரை வேண்டும் என்றால், கொஞ்சம் கல்கண்டு வாங்கி வந்து நன்றாக இடித்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். சர்க்கரைக்கு பதில் இதைக் கூட வெயில் காலத்திற்கு ஜூஸ் போட நீங்கள் பயன்படுத்தலாம். ரொம்ப ரொம்ப நல்லது.

குறிப்பு 8:
பாதாம் பிசின், சப்ஜா சீட் இவைகளை தண்ணீரில் போட்டு ஊற வைத்து எப்போதுமே ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். எப்போது எல்லாம் ஜூஸ் போடுறீங்களோ, அதுல இந்த இரண்டு பொருட்களையும் கலந்து குடிக்கும் போது நம்முடைய உடம்பு எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.

குறிப்பு 9:
இதில் எதுவுமே உங்களுக்கு விருப்பமில்லை என்றால் வெறும் பச்சை தண்ணீரில் வெட்டிவேரை போட்டுவிட்டு, அந்த தண்ணீரை குடித்து வாருங்கள். வெயிலில் உங்களுடைய உடம்பு ரொம்ப ரொம்ப குளிர்ச்சியாக இருக்கும். முந்தைய நாள் இரவே குடிக்கின்ற தண்ணீரில் சிறிதளவு வெட்டிவேரை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி போட்டு வைத்து விடுங்கள். மறுநாள் முழுவதும் அந்த தண்ணீரை குடித்தால் நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும். தாகமும் எளிதில் அடங்கும்.

குறிப்பு 10:
உங்களுடைய வீட்டில் எப்போதுமே நீங்கள் சின்ன வெங்காயம் வாங்கும் பழக்கம் இல்லை என்றாலும் பரவாயில்லை. இந்த வெயில் காலத்தில் அதிகமாக சின்ன வெங்காயத்தை வாங்கி சமையலில் சேர்த்துக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயம் உடலுக்கு குளிர்ச்சி தன்மையை தக்க வைக்கும். உங்களுக்கு சின்ன வெங்காயத்தை காலையில் உரிக்க நேரமில்லை என்றால் இரவு வெங்காயங்களை உரித்து ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு மூடி பிரிட்ஜில் ஸ்டொர் செய்து வைத்துக் கொள்ளலாம். மறுநாள் காலைக்கு இதை எடுத்து பயன்படுத்தலாம்.

இதையும் படிக்கலாமே: என்ன தான் படிப்பு இருந்தாலும் வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியவில்லையா? உங்கள் கை எழுத்தை இப்படி மாற்றி பாருங்கள் உங்கள் தலை எழுதும் தானாக மாறி வாழ்கை சிறப்பான முன்னேற்றத்தை நோக்கி நகரும்.

குறிப்பு 11:
அதேபோல பணங் கற்கண்டும் வெயில் காலத்திற்கு உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லதுங்க. பனங்கற்கண்டு அப்படியே பாலில் போட்டால் கரையாது என்ற பிரச்சனை எல்லோருக்கும் இருக்கும். பனங்கற்கண்டு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். சுட சுட பாலில் இந்த பனங்கற்கண்டை போட்டு குடித்தால் உடல் உஷ்ணம் குறையும்.

- Advertisement -