- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவண்டி வாகன விபத்தை தடுக்க பரிகாரம்

வண்டி வாகன விபத்தை தடுக்க பரிகாரம்

- Advertisement -

நீங்க பைக் ஓட்டுபவர்களாக இருக்கலாம். ஆட்டோ ஓட்டுபவர்களாக இருக்கலாம். அல்லது வண்டி வாகனம் வைத்து டிராவல்ஸ் தொழில் நடத்துபவர்களாக இருக்கலாம். லாரி டிரைவர், பெரிய பெரிய கனரக வாகனம் ஓட்டுபவர்கள், இப்படி வாகனம் சம்பந்தப்பட்ட எந்த வேலையில் நீங்கள் இருந்தாலும் சரி, இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம்.

வண்டி ஓட்டும் போது அடிக்கடி விபத்து நடக்கிறது என்றால் இந்த பரிகாரம் உங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். எனக்கு இதுவரைக்கும் விபத்து நடக்கவில்லை. இனிமேலும் விபத்து நடக்கக்கூடாது என்பவர்களும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம் தவறு கிடையாது.

- Advertisement -

விபத்தை தடுக்கும் முருகர் வழிபாடு

செவ்வாய்க்கிழமை 5 எலுமிச்சம் பழங்களை எடுத்துக்கொண்டு உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் ஏதோ ஒரு முருகர் கோவிலுக்கு போங்க. முருகனின் பாதங்களில் அந்த எலுமிச்சம் பழத்தை வைத்து, கூடவே உங்கள் வாகன சாவியையும் கொடுத்து, உங்கள் பெயர் சொல்லி அர்ச்சனை செய்து முருகப்பெருமானை மனமுருகி நம்பிக்கையோடு வழிபாடு செய்து கொள்ளுங்கள்.

எலுமிச்சம் பழத்தை மீண்டும் உங்கள் கையில் வாங்கிக் கொள்ளுங்கள். வழக்கம் போல நான்கு எலுமிச்சம் பழங்களை எடுத்து டயருக்கு கீழே வச்சிடுங்க. மீதம் இருக்கும் ஒரு எலுமிச்சம் பழத்தை உங்கள் உள்ளங்கைகளில் வைத்து முருகப்பெருமானை வேண்டி, வண்டி ஓட்டும் போது விபத்து நடக்க கூடாது.

- Advertisement -

நாம வண்டியை ஓட்டுவதால் அடுத்தவர்களுக்கும் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று, மனதார வேண்டிக்கொண்டு அந்த எலுமிச்சம் பழத்தை முருகன் கோவிலுக்கு வெளியே இருக்கும் வேலில் சொருகி விடுங்கள். அவ்வளவுதான். பிறகு வந்து உங்களுடைய வண்டியை எடுக்கலாம். நான்கு எலுமிச்சம் பழத்திற்கு மேலே ஏற்றி இறக்குவோம் அல்லவா.

இது நாம் எல்லோரும் செய்யக்கூடிய பரிகாரம் தான். இதே போல செய்து விடுங்கள். செவ்வாய்க்கிழமை முருகன் கோவிலுக்கு சென்று மேல் சொன்னபடி இந்த எலுமிச்சம் பழ பரிகாரத்தை செய்தால் உங்களைப் பிடித்த துஷ்ட சக்திகள் எல்லாம் உங்களை விட்டு நீங்கிவிடும். உங்கள் வண்டியை விட்டு நீங்கிவிடும். வண்டிக்கும் பிரச்சனை வராது.

இதையும் படிக்கலாமே: பணத்தேவையை பூர்த்தி செய்யும் பரிகாரம்

உங்களுக்கும் பிரச்சனை வராது என்பது நம்பிக்கை. வாரம் தோறும் செவ்வாய் கிழமை மறக்காமல் இதை செஞ்சுருங்க. நீங்கள் உங்கள் சொந்த தேவைக்கு அடிக்கடி இருசக்கர வாகன ஓட்டுபவர்களாக இருந்தாலும், இதை செய்யலாம். இரண்டு சக்கர வாகனமாக இருந்தால், மூன்று எலுமிச்சம் பழங்களை கோவிலுக்கு எடுத்துட்டு போங்க. அவ்வளவுதான், ஆன்மீகம் சார்ந்த இந்த எளிய வழிபாடு நிச்சயம் எல்லோருக்கும் பயன்படும் படி அமையும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்