தினமும் விபூதி பூசும் பொழுது இந்த மந்திரத்தை கூறி பூசினால் வேலனே நம்மை தேடி வந்து நம்முடைய வினைகளை தீர்த்து வைப்பான்.

thiruneeru manthiram
- Advertisement -

மந்திரமாவது நீறு என்று திருநீற்றின் பெருமையை எடுத்து உரைக்கிறது இந்த பதிகம். நீரில்லா நெற்றி வெரும் நெற்றி என்று அவ்வையார் கூறியிருக்கிறார். இப்படி திருநீற்றின் மகிமையை எடுத்து பல பேர் கூறி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட திருநீற்றை நாம் தினமும் கடவுளை வணங்கி விட்டு நெற்றியில் வைப்போம். அவ்வாறு வைக்கும் பொழுது எந்த மந்திரத்தை கூறி பூசினால் வேலனே நம்மைத் தேடி வந்து நம் வினைகளை கலைவான் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நம் முன்னோர்கள் நாம் தூங்கி எழும்பொழுது முதல் மறுபடியும் உறங்கச் செல்லும் வரை ஒவ்வொரு செயலை செய்யும் பொழுதும் அதற்கேற்ப மந்திரங்களை கூறி வைத்திருக்கிறார்கள். அந்த மந்திரங்களை நாம் முறையாக உபயோகப்படுத்தினால் நம் வாழ்வில் என்றுமே நிம்மதி நிலைத்திருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இன்றைக்கு இருக்கும் அவசர காலகட்டத்தில் யாரும் இந்த மந்திரங்களை உபயோகப்படுத்துவதில்லை என்பதே உண்மை.

- Advertisement -

மிகவும் எளிமையாக இருக்கக்கூடிய மந்திரங்களை நாம் தினமும் உச்சரித்தோம் என்றால் அந்த மந்திரத்தின் அருளால் அந்த மந்திரத்திற்கு உரிய தெய்வம் நமக்கு நன்மையை செய்வார்கள். அந்த வகையில் இன்று நாம் முருகனுக்குரிய மந்திரத்தை தான் பார்க்கப் போகிறோம். இந்த மந்திரத்தை எவர் ஒருவர் மனதார கூறி தன் நெற்றியில் நீரை பூசுகிறாரோ அதாவது திருநீரை பூசுகிறார்களோ அவர்களுடைய வினைகளை அனைத்தையும் முருகன் சரி செய்து விடுவார் என்பது உறுதி.

இந்த மந்திரத்தை பார்ப்பதற்கு முன்பாக திருநீறு என்பது நாம் அழகுக்காக வைக்கும் ஒரு பொருள் அல்ல என்பதை உணர்ந்து, தெய்வத்தை முழு மனதோடு நம்பி நெற்றியில் பூச வேண்டும். அவ்வாறு திருநீற்றை பூசும்பொழுது திருநீறு எந்த சூழ்நிலையிலும் கீழே அதாவது தரையில் விழுகாத வண்ணம் பூச வேண்டும். அதாவது திருநீரை நாம் மேல் நோக்கி பார்த்தவாறு தான் பேச வேண்டும். அப்பொழுதுதான் திருநீறு கீழே விழுகாது என்று சொல்லப்படுகிறது. திருநீற்றை கோவிலில் இருந்து வாங்கும் திருநீச்சை நாம் நெற்றியில் பூசி விட்டு கோவிலில் ஏதாவது ஒரு தூணில் வைத்து விட்டு வருவதை தவிர்க்க வேண்டும் மீதம் இருக்கும் திருநீற்றை நம் கை கால் தொண்டை போன்ற பகுதிகளில் தடவுவதன் மூலம் நமக்கு நன்மை ஏற்படும். இப்படி திருநீறு பூசும் முறைகள் என்று பல இருக்கின்றன. அவற்றில் குறிப்பாக நாம் இந்த கருத்தை மட்டும் மனதில் நினைத்துக் கொண்டு திருநீறு பூசிக் கொண்டாலே போதும்.

- Advertisement -

“வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்லிட கலங்குமே
செந்தில் நகர் சேவகா என்று திருநீறு அணிந்தோர்க்கு மேவ வாராதே வினை”.

இந்த பாடலின் பொருள் நம்மிடம் ஏற்கனவே வந்த வினையாக இருந்தாலும் அல்லது இனிமேல் வரப்போகும் வினையாக இருந்தாலும் கந்தா என்று கூறினால் அந்த வினைகள் அனைத்தும் கலைந்து ஓடி விடும். அதே சமயம் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவனை நினைத்து நாம் திருநீறு பூசினோம் என்றால் எப்பேர்பட்ட வினையாக இருந்தாலும் அது நம்மை அண்டாது. கையில் திருநீற்றை வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை கூறி முடிக்கும் பொழுது நெற்றியில் பூச வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பெருமாளை நினைத்து இந்த சந்தனத்தை நெற்றியில் வைத்துக் கொண்டால் போதும். பண கஷ்டம் என்பது வரவே வராது. காலத்துக்கும் செல்வந்தராக வாழும் யோகம் கிட்டும்.

இந்த அற்புதமான எளிய மந்திரத்தை நாம் திருநீறு பூசும் ஒவ்வொரு சமயமும் கூறி பூசினால் என்றென்றைக்கும் முருகன் நம்முடன் இருந்து நம் வினைகளை தீர்த்து வைப்பார்.

- Advertisement -