கடன் தொல்லை மற்றும் எதிரிகள் தொல்லை நீங்க விஜயதசமி வழிபாடு

vijayalakshmi-temple
- Advertisement -

அக்காலம் தொட்டு, இக்காலம் வரை பெரும்பாலான மனிதர்களை வாட்டும் முக்கிய பிரச்சனைகளாக இருப்பது கடன் பிரச்சனை மற்றும் எதிரிகள் தொல்லை தான். இந்த இரு பிரச்சனைகளில் பெரும்பாலும் எவருமே சிக்க விரும்பாவிட்டாலும், நமது கர்மபலன் காரணமாக மேற்சொன்ன இரண்டு பிரச்சனைகளையும் நாம் வாழ்வில் சந்திக்க வேண்டிய சூழ்நிலை, நம்மில் அநேகருக்கு ஏற்படுகின்றது. அன்றாட வாழ்க்கையையே போராட்டமாக மாற்றும் ஆற்றல் வாய்ந்த கடன் பிரச்சனை மற்றும் எதிரிகளின் தொல்லைகளை போக்க விஜயதசமி தினத்தன்று செய்யவேண்டிய ஒரு எளிய பரிகாரம் குறித்து இங்கே நாம் தெரிந்து கொள்ளலாம்.

நம் வருமானத்திற்கு ஏற்ற செலவுகளை செய்து வாழ்ந்தால் பெரும்பாலும், நமக்கு கடன் வாங்கும் சூழல் ஏற்படாது. எனினும், சில நேரங்களில் கட்டாயம் கடன் வாங்கும் சூழல் ஏற்பட்டுவிடுகின்றது. அப்படி கடனை வாங்கிய பிறகு, அந்த கடன் தொகையை வட்டியும் முதலுமாக திரும்ப அடைப்பதிலேயே நாம் நமது மன நிம்மதி, உடல்நலம், சேமிப்பு போன்ற பலவற்றை இழக்கின்றோம்.

- Advertisement -

அதேபோன்று நாம் யாரையும் எதிரிகளாக நினைக்காமல் வாழ்ந்தாலும், சமயங்களில் நம்மை தேடி சில நபர்களின் ரூபத்தில் பிரச்சனைகள் வந்து விடுகின்றன. இத்தகையவர்களை நமக்கு எதிராளிகள் என நாம் கருதுகின்றோம். பெரும்பாலும் இத்தகைய எதிராளிகள் நமக்கு தொடர்பில்லாத அந்நிய நபர்களாக இருந்தாலும், சில சந்தர்ப்பங்களில் நமது நெருங்கிய உறவினர்களே நமக்கு நேரடி அல்லது மறைமுக எதிரிகளாக மாறி விடுகின்றனர். இத்தகைய கடன் மற்றும் எதிரிகளால் ஏற்படும் பிரச்சனைகள் தீர அம்பாளை வழிபடுவதற்கு உரிய ஒரு சிறந்த நாள் தான் “விஜயதசமி” தினமாகும்.

“விஜயம்” என்கிற சமஸ்கிருத சொல்லுக்கு “வெற்றி” என்பது பொருள். பெண்கள் மனிதர்களின் வாழ்க்கைக்கும், ஆன்மீகத்திற்கும் அடிப்படையாக இருப்பவர்கள். இத்தகைய பெண்களின் ஆற்றலை தெய்வீக சக்தியாக பாவித்து வணங்கும் சிறப்பு மிக்க ஒரு விழா தான் நவராத்திரி விழா. நவராத்திரி விழாவின் பத்தாவது நாளாக வருகின்ற “தசமி” தினம், பக்தர்களுக்கு அவர்களின் வாழ்வில் வெற்றியை கொடுக்கும் “விஜய லட்சுமி” தேவியை வணங்கும், “விஜயதசமி” எனும் விழா கொண்டாடப்படுகின்றது. இந்த விஜயதசமி தினத்தன்று நாம் தொடங்குகின்ற எத்தகைய செயல்களும் மிக சிறப்பான வெற்றியை பெறும்.

- Advertisement -

விஜயதசமி தினத்தன்று காலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு, உணவு ஏதும் உட்கொள்ளாமல் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கின்ற சிவன் கோயில்களில் வன்னி மரம் இருந்தால், அந்த வன்னி மரத்திற்கு உங்கள் கைகளால் ஒரு செம்பு பாத்திரத்தில் நீர் ஊற்ற வேண்டும்.

பிறகு, சில வெற்றிலைப் பாக்குகள் மற்றும் சில வாழைப்பழங்களை, வன்னி மரத்திற்கு முன்பாக நைவேத்தியமாக வைத்து, ஊதுபத்தி கொளுத்தி, கற்பூரம் ஏற்றி ஆரத்தி காட்டி, பின்பு அம்மரத்தை 54 அல்லது 108 எண்ணிக்கையில் வலம் வந்து, அம் மரத்திற்கு முன்பாக மனதார உங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற கடன் பிரச்சனைகள் அல்லது எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்க வேண்டிக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: 12 ராசிக்கும் பெருமாள் மந்திரம்! புரட்டாசி மாதம் முடிவதற்குள் பெருமாளை நினைத்து இந்த 1 வரி மந்திரத்தை உச்சரித்தால் கடன், வறுமை நீங்கி செல்வ கடாட்சம் பெருகும்.

நைவேத்தியமாக வைத்த வெற்றிலை, பாக்கு, வாழை பழங்களை மரத்திற்கு முன்பாகவே வைத்து விட வேண்டும். வீட்டிற்கு எடுத்து வரக்கூடாது. மேற்சொன்ன முறையில் விஜயதசமி தினத்தன்று வன்னி மர வழிபாடு செய்பவர்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற எத்தகைய கடன் தொடர்பான பிரச்சனைகளும் மற்றும் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகளும் அம்பாளின் அருளால் மிக விரைவில் தீரும்.

- Advertisement -