வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது பெண்கள் செய்யக்கூடாத தவறுகள் மற்றும் விளக்கு ஏற்றுவதற்கான சரியான முறைகள்

vilakku
- Advertisement -

பெண்கள் தினமும் தங்களின் பூஜை அறையில் காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றுவது மிகவும் இயல்பான ஒரு விஷயம் தான். இவ்வாறு தொடர்ந்து தீபம் ஏற்றி வந்தாலும் அந்த தீபத்தை நாம் முறையாகஏற்றுகிறோமமா? இறைவனை சரியாகவழிபடுகிறோமமா? என்ற சந்தேகம் மனதில் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அவ்வாறு காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றும் பொழுது நாம் செய்யக்கூடிய சிறு சிறு தவறுகளை என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும். அது போல விளக்கு ஏற்றுவதற்கான சரியான முறையையும் அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் ஒரு வீட்டின் காமாட்சி அம்மன் விளக்கு என்பது அந்த வீட்டிற்கு லட்சுமி தேவியயின் அம்சத்தைக் கொண்டு வருவதற்கான ஒரு முக்கியமான பூஜை பொருள் ஆகும். எனவே எவ்வாறு முறையாக காமாட்சியம்மன் விளக்கில் தீபமேற்ற வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

poojai

நமது வேதங்களிலும் புராணங்களிலும் விளக்கு ஏற்றுவதற்கான பலன்களையும் அதற்கான வழிமுறைகளையும் தெளிவாக குறித்து வைத்துள்ளனர். இருப்பினும் நமது முன்னோர்கள் வழி வழியாக நமக்கு சொல்லித் தந்த விஷயங்களை பின்பற்றியே இன்றளவிலும் பலரது குடும்பங்களிலும் விளக்கேற்றி பூஜை செய்து வருகிறோம். அவ்வாறு ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்றவாறு தனிப்பட்ட விதிமுறைகளை கடைபிடித்து வருகிறோம்.

- Advertisement -

காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றும் முறை:
முதலில் காமாட்சி அம்மன் விளக்கை கிழக்கு மற்றும் வடக்கு திசையில் மட்டுமே ஏற்ற வேண்டும். இதில் கிழக்கு திசையில் விளக்கு ஏற்றுவது மிகவும் நன்மையை அளிக்கக் கூடியது. எந்தவித காரணத்திற்காகவும் மேற்கு மற்றும் தெற்கு திசையில் காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றக்கூடாது. இவ்வாறு செய்வது கர்ம காரியங்களின் பொழுது மட்டுமே நடைபெறும்.

வீட்டில் ஏற்றப்படும் தீபத்தில் நல்லெண்ணெய் அல்லது பசும் நெய் சேர்த்து தீபம் ஏற்றலாம். ஆனால் இவை இரண்டு எண்ணெய்களையும் தனித்தனியாக வைத்து தீபம் ஏற்றலாமமே தவிர ஒன்றாகக் கலந்து தீபம் ஏற்றக்கூடாது.

- Advertisement -

kamatchi vilakku

அவ்வாறு விளக்கில் போடப்படும் திரி பருத்தியினாலானபஞ்சசு திரியாக இருக்க வேண்டும். அல்லது தாமரைத் தண்டு திரியாக இருக்கவேண்டும். தாமரை தண்டு திரியில் விளக்கு ஏற்றுவது மிகவும் விசேஷ பலனைத் தரவல்லது.

சிலருக்கு எவ்வித எண்ணிக்கையில் விளக்கு ஏற்ற வேண்டும் என்ற சந்தேகம் இருக்கும். நமது வீட்டில் ஒரே ஒரு தீபம் மட்டுமே ஏற்றி வைத்து பூஜை செய்தாலே போதுமானதாகும். ஆனால் ஒரு சிலர் இரண்டிற்கு மேற்பட்ட தீபங்களை ஏற்றி வைப்பார்கள். அவ்வாறு செய்யும் பொழுது அவை ஒற்றைப்படையில் இருக்க வேண்டும்.

agal-vilakku

அதுபோல விளக்கினுள் ஒரு திரி மற்றும் இரண்டு திரி என எத்தனை எண்ணிக்கையில் போட வேண்டும் என்ற சந்தேகமும் இருக்கும். விளக்கு அணைந்து விடாமல் நின்று எறிவதற்கு ஏற்றவாறு எத்தனை எண்ணிக்கையில் வேண்டுமானாலும் திரிகளை போடலாம். இதற்கு விதிமுறைகள் எதுவும் கிடையாது.

thamarai-thandu-thiri

அவ்வாறு ஒரு சிலர் கூட்டு எண்ணெய் சேர்த்து விளக்கு ஏற்றுவார்கள். ஆனால் கூட்டு எண்ணெயை கோவிலில் மட்டுமே பயன்படுத்தி தீபம் ஏற்ற வேண்டும். ஏனென்றால் வீட்டில் வழிபடும் அனைத்து சுவாமிகளும் சாந்தமான தெய்வங்கள். ஆனால் கோவிலில் உக்கிரமான தெய்வங்கள், சாந்தமான தெய்வங்கள் என அனைத்து கடவுள்களும் சேர்ந்து இருக்கிறார்கள். எனவே இந்த கூட்டு எண்ணெயை கோவிலில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

- Advertisement -