பூஜை அறையில் விளக்கில் ஊற்றிய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தலாமா? கூடாதா?

vilakku-oil
- Advertisement -

பூஜை அறையில் நீங்கள் தினந்தோறும் விளக்கு ஏற்றுவது குடும்பத்தில் சுபிட்சம் நிலைக்க செய்யும் ஒரு விஷயமாகும். தினமும் ஏற்ற முடியாதவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஏற்றுவது வழக்கம். இப்படி நீங்கள் விளக்கு ஏற்றும் பொழுது காமாட்சி அம்மன் விளக்கு அல்லது குத்து விளக்கை பயன்படுத்துவீர்கள். அதில் ஊற்றப்படும் எண்ணெய் எப்படி ஊற்ற வேண்டும்? மீதமாகும் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தலாமா? பயன்படுத்தக் கூடாதா? என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

deepam

பூஜை அறையில் ஏற்றப்படும் விளக்கில் எப்பொழுதும் குறைவாக எண்ணெயை ஊற்றக் கூடாது. விளக்கு நிறைய தழும்ப எண்ணெயை ஊற்ற வேண்டும். குத்து விளக்கு, காமாட்சி அம்மன் விளக்கு எதுவாக இருப்பினும் நீங்கள் பிரதானமாக ஏற்றும் முக்கிய விளக்கில் எண்ணெயை குறைவாக ஊற்றக் கூடாது. விளக்கை வாரம் ஒரு முறையாவது கட்டாயம் பளிச்சென சுத்தம் செய்து வைத்து விட வேண்டும்.

- Advertisement -

சுத்தம் செய்த பின்பு நீங்கள் ஏற்றும் முதல் எண்ணெய் புதிய எண்ணெயாக இருக்க வேண்டும். விளக்கு நிறைய எண்ணெய் ஊற்றி புதிய திரி இட்டு தீபமேற்ற வேண்டும். நீங்கள் ஏற்றும் திரியானது இரட்டை திரியாக இருப்பது செல்வ மழை பொழியச் செய்யும். இரண்டு திரிகளை ஒன்றாக இணைத்து திரித்து எண்ணெயில் நன்கு தோய்த்து முனைப்பகுதியை முறுக்கி விட்டு மேலே தூக்கியபடி செய்து விட்டால் போதும், எண்ணெய் வழியாது, தீபமும் நின்று சுடர்விட்டு எரியும்.

kamatchi vilakku

இப்படி ஏற்றும் விளக்கை தானாக அணையும்படி செய்யக் கூடாது எனவே பூஜை நிறைவடைந்த பின்பு சிறிது நேரம் கழித்து நாமாகவே அதனை முறையாக மலர் கொண்டு குளிர்வித்து விட வேண்டும். துணை விளக்காக ஏற்றப்படும் மற்ற அகல் விளக்குகள் அல்லது இதர விளக்குகளை அதுவே அணையும் வரை காத்திருக்கலாம். அதில் எந்த தவறும் இல்லை ஆனால் முக்கியமாக ஏற்றப்படும் காமாட்சி அம்மன் விளக்கை தானாக அணையும் வரை காத்திருக்கக் கூடாது.

- Advertisement -

இப்படி முறையாக அணைக்கப்படும் விளக்கில் மீதம் இருக்கும் எண்ணெயை நீங்கள் அப்படியே விட்டுவிட்டால் பச்சை நிறமாக மாறி விடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே மீதமாக இருக்கும் எண்ணெயை அதற்கென ஒரு டப்பாவில் ஊற்றி வைத்து விடுங்கள். பிறகு வெள்ளை துணியை கொண்டு சுத்தமாக துடைத்து வைத்து விடுங்கள். மறுநாள் ஏற்றும் பொழுது அதே எண்ணெயை தாராளமாக நாம் பயன்படுத்தலாம், அதில் எந்த விதமான தோஷங்களும் இல்லை.

kamatchi-vilakku

எண்ணெயை கீழே ஊற்றக்கூடாது, வீணாக்கக்கூடாது எனவே இந்த எண்ணெயை மீண்டும் ஊற்றி புதிய எண்ணெயுடன் கலந்து மறுநாள் நீங்கள் தீபம் ஏற்றிக் கொள்ளலாம். இப்படி செய்யும் பொழுது விளக்கேற்றும் எண்ணெய் பெருமளவு வீணடிக்கப்படுவது தடுக்கப்படும். அதே போல தீபத்தில் இருக்கும் திரியை தினமும் கட்டாயம் புதிதாக மாற்றி விட வேண்டும். ஒரு முறை எரிந்து விட்ட திரியை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. அந்தத் திரியை தனியாக ஒரு டப்பாவில் எடுத்து வைத்து வாருங்கள். நீங்கள் வாரம் ஒருமுறை தூபம் போடும் பொழுது திரியையும் சேர்த்து எரித்து விடலாம். இதனால் வீட்டில் இருக்கும் துர் சக்திகள் அனைத்தும் ஓடிவிடும். விளக்கு எண்ணெய் மற்றும் திரி இந்த இரண்டையும் எக்காரணம் கொண்டும் மற்றவர்களுடைய கால்களில் மிதிபடும் படி குப்பையில் எறியக்கூடாது. எனவே அதற்கு பதிலாக இந்த விஷயங்களை செய்து பயன்பெறலாம்.

- Advertisement -