வீட்டில் இந்த நாளில் மட்டும் கட்டாயமாக விளக்கு ஏற்றவே கூடாது. நம் வீட்டில் லட்சுமி கடாட்சத்தை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும்.

vilakku-deepam
- Advertisement -

வீட்டில் தினமும் விளக்கு ஏற்ற வேண்டும். வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் நம்முடைய சாஸ்திரம் சொல்லி இருக்கிறது. அதே சாஸ்திரம் வீட்டில் எந்தெந்த நாட்களில் விளக்கு ஏற்றக்கூடாது என்றும் சொல்லியிருக்கிறது. அது எந்தெந்த நாட்கள் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். நிறைய பேருக்கு விளக்கு ஏற்ற கூடாத நாட்கள் என்றால் என்னவாக இருக்கும் என்ற சந்தேகம் இருக்கும். சில பேருக்கு இந்த விஷயம் தெரிந்திருக்கும். சில பேருக்கு இதில் சந்தேகங்கள் இருக்கும். தெரிந்தவர்களை பற்றி கவலை இல்லை. விஷயம் தெரியாதவர்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

முதலாவதாக சொல்லப்பட்டுள்ள தீட்டு, இறப்பு தீட்டு. நம்முடைய பங்காளிகளுடைய வீட்டில் இறப்பு நேர்ந்து விட்டது என்றால் நிச்சயமாக நம்முடைய வீட்டிலும், காரியம் முடியும் வரை விளக்கு ஏற்றக்கூடாது. (பங்காளிகள் என்றால் ரத்த சம்பந்தப்பட்ட உறவுகள்.) 16 நாள் காரியம் முடிந்த பின்பு தான் நம்முடைய வீட்டை முழுமையாக சுத்தம் செய்துவிட்டு பூஜை ஜாமான்களை சுத்தம் செய்துவிட்டு தலைக்கு குளித்துவிட்டு, பின்பு தான் விளக்கு ஏற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். (பங்காளிகள் வீட்டில் பேச்சுவார்த்தை இல்லை என்றாலும் கூட தீட்டு காலத்தில் நம்முடைய வீட்டில் விளக்கு ஏற்ற கூடாது.)

- Advertisement -

நம்முடைய பங்காளிகள் வீட்டில் இறப்பு நடந்து ஒரு வாரம் முடிந்தது. ஆனால் காரியம் முடியவில்லை. நம்முடைய நண்பர்கள் வீட்டில் ஏதோ ஒரு விசேஷ காரியம் நடக்கிறது. நாம் அந்த நல்ல காரியத்திற்கு செல்லலாமா. நிச்சயமாக செல்லக்கூடாது. ஆனால் நம்முடைய குழந்தைகள் இருக்கிறார்கள். நன்றாக வளர்ந்த குழந்தைகள் அவர்கள் அவர்களை அந்த விசேஷத்திற்கு அனுப்பி வைக்கலாமா என்று கேட்டால் அவர்கள் தாராளமாக அந்த விசேஷத்திற்கு செல்லலாம்.

இப்போது நிறைய இடங்களில் அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை தான் இருக்கின்றது. 100 பேர் குடியிருக்க கூடிய அப்பார்ட்மெண்டில் ஒரு வீட்டில் இறப்பு நடந்து விட்டது என்றால், இறந்தவரை அந்த வீட்டில் இருந்து எடுக்கும் வரை, அந்த அப்பார்ட்மெண்டில் இருக்கக்கூடிய மற்ற வீடுகளிலும் விளக்கு ஏற்றக்கூடாது.

- Advertisement -

நம்முடைய வீதியில், அதாவது நம்முடைய தெருவில் ஒரு இறப்பு நடந்து விட்டது. அவர்களுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் இறந்தவர்களுடைய சடலம் நம் வீதியில் தான் இருக்கிறது. இன்னும் அவரை இறுதி சடங்கு செய்ய எடுத்துச் செல்லவில்லை என்றால் அந்த வீதியில் இருப்பவர்களும் விளக்கு ஏற்றி இறைவழிபாடு செய்யக் கூடாது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. வீதியில் இறப்பு ஏற்பட்டால் கோவில் கூட திறக்க மாட்டார்கள் என்பது நமக்கு தெரியும் அல்லவா. அதே போல் தான் நம் வீட்டிலும் விளக்கு ஏற்றக்கூடாது.

அடுத்தபடியாக குழந்தை பிறந்த தீட்டு. நம்முடைய பங்காளிகள் வீட்டில் குழந்தை பிறந்திருக்கிறது என்றால் அவர்கள் புண்யா தானம் செய்யும் வரை நம்முடைய வீட்டிலும் தீபம் ஏற்றி வழிபாடு செய்யக் கூடாது. குழந்தை பிறந்த தீட்டு என்பது சுப தீட்டு. சில வீடுகளில் ஏழு நாட்கள் தீட்டு இருக்கும். சில வீடுகளில் பத்தாவது நாள் புணியாதனம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

இதையும் படிக்கலாமே: உங்க வீடு தெற்கு பார்த்த வாசலா? உங்களுடைய முன்னேற்றம் தடைப்படாமல் இருக்க கட்டாயம் நிலை வாசலில் இந்த தெய்வம் இருக்க வேண்டும்.

நம்முடைய வீட்டில் சுபதிட்டு அசுபதிடோ வந்து விட்டது. வீட்டில் பத்து நாட்களோ, 16 நாட்களோ விளக்கு ஏற்றாமல் விட்டு விட்டோம். விளக்கு ஏற்றக்கூடிய அந்த முதல் நாள் என்ன செய்ய வேண்டும். வீட்டையும் பூஜை அறையையும் சுத்தம் செய்ய வேண்டும். ஒரு சிறிய பித்தளை பாத்திரத்தில் கொஞ்சமாக கோமியத்தை ஊற்றி, கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி கலந்து, கொஞ்சமாக மஞ்சள் பொடி கலந்து மாயிலையை இந்த தண்ணீரில் நனைத்து வீடு முழுவதும் மூளை முடுக்குகளில் தெளித்து விட வேண்டும். அதே சமயம் வீட்டில் இருப்பவர்களுடைய தலையிலும் இந்த தீர்தத்தை தெளிக்க வேண்டும். இப்படி இந்த தீர்த்தத்தை தெளிக்கும் போது ‘ஓம் நமோ நாராயணா’ என்ற மந்திரத்தை உச்சரித்து கொள்ளுங்கள். பிறகு எப்போதும் போல உங்களுடைய பூஜை அறையில் தீபம் ஏற்றி இறைவழிபாட்டை மேற்கொள்ளலாம் என்ற தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -