வீட்டில் விளக்கு வைத்த பின் மறந்தும் கூட இதை செய்து வீடாதீர்கள். இப்படி செய்வதால் மகாலட்சுமி தாயாரை நாமே வீட்டை விட்டு வெளியே அனுப்புவதை போல ஆகி விடும்.

vilakku lady
- Advertisement -

நம்முடைய முன்னோர் காலத்தில் இருந்து தொன்று தொட்டு பின்பற்றி வரும் பழக்க வழக்கங்களில் ஒன்று தான் காலை மாலை வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது. இப்படி தீபம் ஏற்றி வழிபடுவதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்கும் என்பது ஐதீகம். வீட்டில் விளக்கு ஏற்றி வைப்பதால் நிலைத்து இருக்க கூடிய ஐஸ்வர்யத்தை, நாம் தெரியாமல் சிலவற்றை செய்யும் போது அந்த லட்சுமி கடாட்சம் நம்மை விட்டு நீங்கி விடும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அது என்னவென்று இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் விளக்கு வைத்த பின் செய்யக் கூடாதவை:
வீட்டில் விளக்கு வைத்து வழிபடுவது என்பதை பலரும் பல நேரங்களில் செய்வார்கள். ஒரு சிலர் காலையில் பிரம்ம முகூர்த்த வழிபாடு செய்வார்கள். சிலர் மாலை வேளையில் செய்வார்கள். சிலர் இரண்டுக்கும் இடைப்பட்ட நேரத்திலும் வணங்குவார்கள். ஆனால் எப்படி செய்தாலுமே கூட, விளக்கு வைப்பதற்கு முன்பாக குளித்த பின் ஏற்றுவது நல்லது. பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றும் போது குளிக்க முடியாதவர்கள் கை கால்களை மட்டும் அலம்பிய பிறகு ஏற்றலாம். ஆனால் விளக்கை ஏற்றி அதை குளிர்வித்த பிறகு தான் குளிக்க வேண்டும். விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது குளிக்க கூடாது.

- Advertisement -

அதே போல் விளக்கு ஏற்றுவதற்கு முன்பாகவே நாம் தலைவாரி நெற்றிக்கு திலகம் இட்டு, தலையில் பூ வைத்த பின்பு தான் விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்றும் போது வெறும் நெற்றியுடனோ தலைவராமலோ ஏற்றக் கூடாது. விளக்கு ஏற்றுவதே லட்சுமி கடாட்சத்தை பெறத் தான். வீட்டில் இருக்கும் பெண்கள் முதலில் லட்சுமி கடாட்சத்துடன் இருந்தால் தான் அந்த வீட்டிற்கும் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

அதே போல் நம்மில் பெரும்பாலும் செய்யும் தவறு வீட்டில் விளக்கு ஏற்றிய பிறகு சிறிது நேரத்திற்கெல்லாம் வீட்டை கூட்டி பெருக்குவது, இந்த முறையை நீங்கள் காலையில் விளக்கு ஏற்றுவதாக இருந்தாலும் சரி, மாலையில் ஏற்றுவதாக இருந்தாலும் சரி, விளக்கு ஏற்றிய உடனே வீட்டை பெருக்கி குப்பை அள்ளி வெளியே கொட்டுவது வீட்டில் இருக்கும் ஐஸ்வர்யத்தை நாமே வெளியே கொண்டு வீசுவதை போல ஆகும். அதிலும் மாலையில் விளக்கு வைத்த பிறகு வீட்டை கூட்டவே கூடாது.

- Advertisement -

அதே போல் வீட்டில் விளக்கு ஏற்றிய சிறிது நேரம் கழித்து விளக்கை குளிர்வித்த பின்பு தான் கோவிலுக்கு செல்ல வேண்டும். சிலர் வீட்டில் விளக்கு ஏற்றிய உடனே கோவிலுக்கு செல்வார்கள் அல்லது விளக்கு ஏற்றிய உடனே குளிர வைத்து வீட்டை பூட்டிக் கொண்டு வெளியே சென்று விடுவார்கள். இப்படி செல்லும் போது வீட்டில் இருக்கும் மகாலட்சுமி தாயார் நம் வீட்டை விட்டு வெளியேறி விடுவார் என்ற ஐதீகம் உள்ளது.

விளக்கு வைத்த பிறகு வெள்ளை நிற பொருட்களை கடனாக வாங்குவது நாம் பிறருக்கு கொடுப்பது, பணத்தை கடனாக வாங்குவது, விளக்கு வைத்த பிறகு பணத்தை எடுத்துச் சென்று கடையில் பொருள்களை வாங்குவது, இது போன்றவற்றை எல்லாம் நாம் தவிர்த்து வந்தோமானால் நம்மிடம் இருக்கும் லட்சுமி கடாட்சம் நம்மை விட்டு நீங்காமல் இருக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது.

இதையும் படிக்கலாமே: 5 வெள்ளிக்கிழமைகள் கோவிலில் இருந்து இந்த 1 பொருளை வீட்டிற்கு எடுத்து வாருங்கள். கடன் சுமை இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும்.

எப்படி வாழ்ந்தாலும் பிரச்சனைகள் சூழ்ந்து இருக்கும் இந்த காலக்கட்டத்தில் நம்மால் முடிந்த வரை ஒரு சில விஷயங்களை சரியாக செய்தோமேயானால் நமக்கு நாமே துன்பத்தைத் தேடிக் கொள்ளாமல் இருக்கலாம். இந்த பதிவில் உள்ள குறிப்புகள் எல்லாம் இன்று நேற்று வழக்கத்தில் உள்ளது அல்ல. நம் முன்னோர்கள் காலம் முதல் கடைபிடித்து வந்த பழக்கங்களின் ஒன்று தான். இவைகளை நாம் சரியாக பின்பற்றினால் நம்மை சூழ இருக்கும் பிரச்சனைகளில் இருந்து நம்மை காப்பாற்றி கொள்ளலாம் என்ற தகவலோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -