விநாயகர் சதுர்த்திக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்து தான் அவரின் அருளை பெற வேண்டும் என்று இல்லை. ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் விநாயகரின் பரிபூரண அருளைப் பெற இப்படி வழிபடுட்டாலே போதும்.

vinayagar neem tree pray
- Advertisement -

நம்முடைய வழிபாடு முறைகள் எனஒவ்வொரு இடத்திற்கு இடம் மாறுபடும். ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபடும். ஆனால் பெரும்பாலும் அனைவருக்கும் பொதுவான ஒரு கடவுளாக இருப்பவர் யாரெனில் அவர் விநாயகர் மட்டுமே. ஆகையால் தான் மற்ற அனைத்து பண்டிகளையும் விட இந்த விநாயகர் சதுர்த்தியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்றைய நாளில் நம்முடைய வழிபாட்டு முறைகள் பல உள்ளன ஆனால் இதையெல்லாம் செய்ய முடியாதவர்கள் மிக எளிமையாக வழிபட்டு அவரின் அருளை பெறுவதற்கான ஒரு தகவலை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை எளிமையாக வழிபடும் முறை
பொதுவாக விநாயகர் சதுர்த்தி என்றாலே மண்ணால் ஆன விநாயகரை வீட்டிற்கு கொண்டு வந்து அவருக்கு அபிஷேகம் ஆராதனை செய்து நெய்வேத்தியங்கள் படைத்து அவரை நம் வீட்டில் அமர வழித்து வழி அனுப்பி வைப்பது தான் இதில் முக்கியமான முறை. இன்றைய காலக்கட்டத்திலும் இதைக் கூட செய்ய முடியாத பலரும் இருக்கிறார்கள். அப்படியானவர்களும் அவருடைய அருளை பெறுவதற்கான ஒரு எளிய வழிபாட்டு முறையை தான் இப்போது பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாடு செய்வதற்கு நீங்கள் எந்த ஒரு பொருளையும் பணம் கொடுத்து வாங்க வேண்டியது இல்லை. இது ஒரு விருட்ச மந்திர வழிபாடு என்றே சொல்லலாம். இந்த வழிபாட்டை செய்வதற்கு உங்கள் வீட்டின் அருகில் ஆலமரம், அரசமரம், வன்னி மரம், வேப்பமரம் இந்த ஐந்து மரங்களில் ஏதாவது ஒரு மரத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். நிச்சயம் இவற்றில் ஏதேனும் ஒரு மரம் அருகில் இருக்கும்.

விநாயகர் சதுர்த்தி அன்று உங்களுக்கு எப்பொழுது நேரம் கிடைக்கிறதோ ராகுகாலம் எமகண்டம் இந்த இரண்டு நேரத்தை தவிர்த்து மற்ற நேரத்தில் இந்த மரத்தின் அருகில் சென்று மரத்தை தொட்டு வணங்கிய பிறகு 36 முறை மரத்தை ம் வர வேண்டும் அப்படி மரத்தை சுற்றி வரும் வேளையில் ஓம் கணபதியே நமஹ என்ற இந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டே சுற்ற வேண்டும்.

- Advertisement -

மரத்தை 36 முறை சுற்றுவது மட்டும் தான் கணக்கு இந்த மந்திரத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லலாம். சொல்லும் போதே உங்களுக்குத் தேவையானவற்றை விநாயகரிடம் மனதார வேண்டிக் கொண்டு சுற்றி வாருங்கள். மரத்தை 36 முறை சுற்றி முடித்த பிறகு தொட்டு வணங்கி விட்டு வீட்டிற்கு வந்து விடுங்கள் இவ்வளவு தான் வழிபாடு. இந்த வழிபாட்டை விநாயகர் சதுர்த்தி என்று செய்யலாம். அதே போல் மாதம் மாதம் வரும் சதுர்த்தி தேதியிலும் இதே வழிபாட்டை தொடர்ந்து செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: குடும்பத்தில் உள்ள எப்பேர்ப்பட்ட பிரச்சனைகளும் தீர நிலைவாசலில் இந்த வாஸ்து தீபத்தை ஏற்றினால் போதும். உங்கள் குடும்பத்தின் தலையெழுத்தே மாறி ஊரே வியந்து பார்க்கும் ராஜ வாழ்க்கை வாழலாம்.

செலவில்லாத இந்த மந்திர வழிபாட்டை தொடர்ந்து செய்து வரும் போது உங்களுடைய வாழ்க்கையில் நிச்சயம் நீங்கள் எதிர்பார்க்காத நல்ல மாறுதல்கள் உண்டாகும். உங்கள் வாழ்க்கையில் செல்வ வளங்களை பெற்று சுபிட்சமாக வாழக் கூடிய யோகத்தை விநாயகர் அருளுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து பல நல்ல பலன்களை பெறலாம் என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -