விநாயகர் சதுர்த்தி அன்று எவ்வாறு வீட்டில் பூஜை செய்து பிள்ளையாரை வணங்க வேண்டும்?

vinayagar
- Advertisement -

ஆவணி மாதம் வளர்பிறை நாளில் வரும் சதுர்த்தி தினத்தன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் ஆவணி 25 ஆம் நாள் 10-09-2021 வெள்ளிக்கிழமை சித்திரை நட்சத்திரத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருக்கிறது. இந்துக்களின் தெய்வங்களும், அதற்கான வழிபாடுகளும் கணக்கிலடங்காதவை. எனினும் இந்த விநாயகர் சதுர்த்தி வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. பல லட்சம் மக்கள் விநாயகர் சதுர்த்தியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். இவ்வாறு சிறப்புமிக்க விநாயகர் சதுர்த்தி நன்னாளில் எவ்வாறு பூஜை செய்து விநாயகரை வணங்குவது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

vinayagar1

யானை முகம் கொண்ட விநாயகரை பிறப்பு பற்றி பல புராணங்களில் விரிவாக கூறப்பட்டுள்ளது. கடவுள்களுக்குள் எல்லாம் முதன்மைக் கடவுளாக பார்க்கப்படுபவர் விநாயகர். அனைத்துக் கோவில்களிலும் ஆசான மூர்த்தியாக அமர்ந்து தன்னை முதலில் வணங்கிச் செல்லும் பக்தர்களுக்கு நலம் சேர்க்கும் கணபதியை அனைத்து சுப காரியங்களிலும் முதலில் வைத்து வணங்குகின்றோம். “விக்னம்” என்றால் தீர்வு என்று பொருள். எந்த ஒரு குழப்பத்தையும், பிரச்சனையையும் தீர்த்து வைப்பராக விநாயகர் இருப்பதால் தான் விக்னேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

- Advertisement -

விநாயகர் சதுர்த்தி வழிபாடு:
விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டிலுள்ள பெண்கள் காலையில் எழுந்து குளித்துவிட்டு, வீட்டைத் தூய்மை செய்து, அரிசி மாவு கோலமிட வேண்டும். பின்பு பூஜை அறையில் மனைப் பலகையை வைத்து அதன் மீது மஞ்சள், குங்குமத்தால் ஓம் என்று எழுத வேண்டும். பின்னர் ஒரு தலைவாழையினை மனையின் மீது வைத்து அதன் மீது அரிசியைப் பரப்பி மோதிர விரலால் பிள்ளையார் சுழி இட வேண்டும்.

valai

பின்னர் நம் வீட்டு பிள்ளைகள் மூலம் வலஞ்சுழி முகமான மண் பிள்ளையாரை வாங்கிவரச் செய்து மனையின் மீது வைக்க வேண்டும். பின்னர் மனையின் இருபுறங்களிலும் குத்துவிளக்கை ஏற்றி வைத்து, விநாயகருக்கு படைப்பதற்கான அபிஷேகப் பொருட்களையும், நைவேத்திய பொருட்களையும் தயாராக வைக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் பிள்ளையாருக்கு வெள்ளை நிற துண்டினை கட்டி, மஞ்சள் குங்குமப் பொட்டு வைத்து, பூ மாலை மற்றும் அருகம்புல் மாலை அணிவிக்க வேண்டும். அதன்பின் குன்றிமணியால் கண்களை திறந்து, தொப்பையின் மீது காசு வைக்க வேண்டும். பின்னர் பிள்ளையார் குடை வைத்து விளக்குகளை ஏற்றி பூஜையைத் தொடங்க வேண்டும்.

vinayagar2

பிள்ளையாருக்கு நைவேத்தியமாக மலர்கள், பழங்கள், போதகங்கள், கொழுக்கட்டை, சுண்டல், வடை இவை அனைத்தையும் இருபத்தியோரு எண்ணிக்கையில் வைத்து வநாயகரை வணங்குவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். இவ்வாறு இந்த எண்ணிக்கையில் செய்ய முடியாவிட்டாலும் நம்மால் இயன்றவரை எளிமையாக சிறிய அளவில் வைத்தும் வழிபடலாம்.

பின்னர் பிள்ளையாருக்கு வெற்றிலைப்பாக்கு வைத்து, தேங்காய் உடைத்து, தீப தூப ஆராதனை காண்பித்து, அர்ச்சனை செய்ய வேண்டும். இவ்வாறு காலை, மாலை என இருவேளையும் விநாயகருக்கு பூஜை செய்து வர வேண்டும். மூன்று நாட்கள் தொடர்ந்து விநாயகருக்கு நைவேத்யம் படைத்து, பூஜை செய்து இறுதிநாளான மூன்றாம் நாள் விநாயகரை எடுத்துச் சென்று, விநாயகருக்கு கற்பூர ஆராதனை காண்பித்து அதன்பின் கடலில் கரைப்பது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அவ்வாறு கடலில் கரைக்க முடியாதவர்கள் ஆறு, ஏரி, குளம் போன்றவற்றிலும் அல்லது ஏதேனும் கோவில்களிலும் வைத்து விடலாம்.

vinayagar3

விநாயகர் சதுர்த்தியன்று விநாயகரை பூஜித்து அனைத்து வரங்களையும் பெற்று வளமுடன் வாழ வாழ்த்தி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கின்றோம்.

- Advertisement -