விபத்துகள் நேராமல் இருக்க வழிபாடு

anjaneyar valipadu
- Advertisement -

ஒவ்வொரு ஊருக்கும் அதன் எல்லை பகுதியில் காவல் தெய்வம் என்று இருக்கும். இந்த காவல் தெய்வத்தை வழிபடுவதன் மூலம் விபத்துகள் எதுவும் ஏற்படாது என்று கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது காவல் தெய்வத்தை வழிபட்டு விட்டு கிளம்புவதன் மூலம் அந்த பயணங்களில் எந்தவித தடைகளும் ஏற்படாமல் எந்த நோக்கத்திற்காக பயணத்தை மேற்கொள்கிறோமோ அந்த நோக்கம் வெற்றியடையும் என்றும் கூறப்படுகிறது.

இன்றைய காலத்தில் இந்த காவல் தெய்வத்தை அனைவரும் மறந்துவிட்டார்கள். அதோடு மட்டுமல்லாமல் காவல் தெய்வ கோவில் எங்கு இருக்கிறது என்பதே பலருக்கும் தெரியாது. கிராமப்புறமாக இருந்த வரைக்கும் பராமரிப்பில் இருந்த காவல் தெய்வ கோவில்கள் இன்று நகரமாக மாற ஆரம்பித்ததும் காணாமல் போய்விட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எந்த தெய்வத்தை நாம் வழிபடுவதன் மூலம் நம்முடைய பயணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீரும், விபத்துகள் எதுவும் ஏற்படாது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

காவல் தெய்வத்தால் ஏற்படக்கூடிய அனைத்து விதமான நன்மைகளையும், பலன்களையும் தருபவர் தான் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயரை நாம் முறையாக வழிபடும் பொழுது அவர் நமக்கு வழி துணையாக வந்து நம்மை காத்தருள்வார் என்று கூறப்படுகிறது. வண்டி வாகனங்களில் தொடர் விபத்துகள் ஏற்படுகிறது என்று வருத்தப்படுபவர்களும் சரி, வண்டி வாகனங்களில் எந்தவித விபத்துகளும் ஏற்படக்கூடாது என்று நினைப்பவர்களும் சரி ஆஞ்சநேயரை எப்படி வழிபட வேண்டும் என்று பார்ப்போம்.

சனிக்கிழமை என்று ஆஞ்சநேயர் கோயிலுக்கு வண்டியை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். அவருக்கு இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து துளசி மாலையை சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். பிறகு அவருக்கு அணிவித்த மாலை வாங்கி வந்து நம்முடைய வண்டியில் மாட்டி விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் ஆஞ்சநேயரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைத்து பயணங்களில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் தீரும்.

- Advertisement -

மேலும் ஒரு முக்கோண வடிவில் இருக்கக்கூடிய காவித்துணியை எடுத்து அதற்கு நடுவில் செந்தூரத்தால் ராம் என்று எழுதி அந்த துணியை ஆஞ்சநேயரின் பாதத்தில் வைத்து வழிபட்டு விட்டு நம்முடைய வண்டி வாகனத்தில் கொடி போல கட்டுவதன் மூலமும் ஆஞ்சநேயரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

இந்த முறையை சனிக்கிழமைகளில் மட்டும் செய்யாமல் வெளியூர் பயணங்கள் அல்லது நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதற்கு முன்பாக ஆஞ்சநேயரை வழிபட்டு விட்டு அவரிடம் இருந்து ஏதாவது ஒரு பொருளை பிரசாதமாக வாங்கி நம்முடன் வைத்துக்கொண்டு செல்வதன் மூலம் ஆஞ்சநேயரே நமக்கு பயண துணையாக இருந்து நம்மை காத்து ரசிப்பார்.

- Advertisement -

ராம நாமம் உச்சரிக்கும் இடத்தில் ஆஞ்சநேயர் இருப்பார் என்ற ஒரு கூற்று இன்றளவும் நிலவி வருகிறது. அதனால் நாம் வெளியூர் பயணங்களை மேற்கொள்ளும் போது ராம் ராம் என்று சொல்லிக் கொண்டு பயணத்தை தொடங்க நம்முடைய பயணத்திற்கு வழி துணையாக ஆஞ்சநேயர் வருவார். பயணங்கள் வெற்றியடைந்த பிறகு ஆஞ்சநேயருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: எதிர்மறை ஆற்றல்களும் தரித்திரமும் நீங்க

இந்த எளிமையான வழிமுறைகளை பின்பற்றி நம்முடைய பயணத்தை பாதுகாப்பான பயணமாகவும் அதே சமயம் வண்டி வாகனங்களில் எந்த வித விபத்துகளும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

- Advertisement -