விற்காத நிலம், வீடு, வாகனம், பொருட்கள் அனைத்தும் நீங்கள் நினைத்த விலைக்கே விற்க 1 சொம்பு தண்ணீர் மட்டும் போதுமே!

home-sombu

நம்மிடம் பல வருடங்களாக கூட விற்காத வீடு, மனை, வாகனம் போன்ற சொத்துக்கள் இருக்கலாம். அவைகளை எப்படி நாம் நினைத்த விலைக்கு விற்பது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்போம். பலபேர் வந்து பார்த்து சென்று இருப்பார்கள், ஆனால் இன்னும் விற்றபாடில்லை. அதற்கு என்ன காரணம்? என்றும் உங்களுக்கு தெரிவதில்லை. இப்படி அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உங்களிடம் இருந்து, அதை விற்க முடியாத சூழ்நிலையில் இப்படி ஒரு எளிய பரிகாரத்தை செய்து பாருங்கள்! நிச்சயமாக உங்களுடைய சொத்துக்கள் நீங்கள் நினைத்த விலைக்கே விரைவில் விற்பனையாகி விடும். அதற்கு நாம் என்ன செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

black-soil-land

வீடு, மனை, வாகனம் மட்டுமல்ல உங்களிடம் இருக்கும் அசையும் சொத்துக்கள் எதுவாக இருந்தாலும் விற்க முடியாமல் இருக்கும் பொழுது இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த பிரபஞ்சம் முழுவதும் பஞ்ச பூதங்களால் நிரப்பப்பட்டுள்ளது என்பது நாம் அறிந்த ஒன்று தான். பிரபஞ்ச சக்தியின் இடத்தில் வேறு எந்த சக்தியும் நிலைத்தது இல்லை. பிரபஞ்சத்தின் பேராற்றல் மந்திரங்களை ஈர்க்கும் தன்மை உள்ளது. முறையாக எந்த ஒரு மந்திரத்தையும் நாம் உச்சரிக்கும் பொழுது அதற்குரிய பலன்கள் வியப்பிற்குரியவையாக இருக்கும். அது போல நாம் மனதில் நினைத்த இந்த விஷயத்தை முடித்து காட்டுவதற்கும் சக்தி வாய்ந்த மந்திரம் உண்டு. அதனை முறையாக எப்படி பயன்படுத்துவது?

உங்களிடம் ஒரு நிலம் விற்க முடியாமல் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நிலத்திற்கு செல்லுங்கள். ஒரு சொம்பு நிறைய சுத்தமான தண்ணீரை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அதை கையில் பிடித்துக் கொண்டு 108 முறை கீழ்வரும் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். பின்னர் அந்த தண்ணீரை நிலத்தில் தெளித்தால் போதும். யார் அந்த நிலத்தை வாங்க போகிறார்களோ! அவர்களுக்கு இந்த பிரபஞ்சம் சமிக்ஞையை அனுப்பும். இதனால் உங்களுடைய விற்காத நிலம் விற்பனை ஆகி விடும்.

mantra-thiyanam

மந்திரம்:
‘நரி புரி எரி’

- Advertisement -

இது போல அனைத்து விஷயங்களும் நீங்கள் நினைத்த விலைக்கு விற்பனை செய்ய இந்த தண்ணீரை தெளித்தால் போதுமானது. அது போல மாற்றுமொரு சக்தி வாய்ந்த வழிமுறையும் உள்ளது. தாந்திரீக பரிகாரத்தில் தொட்டா சிணுங்கி இலைக்கு கேட்ட வரத்தை கொடுக்கும் தன்மை உண்டு. இந்த இலையை தண்ணீரில் புளி போல் கரைத்து கொண்டு இந்த தண்ணீரையும் நீங்கள் விற்க இருக்கும் பொருட்களின் மீது தெளிக்கலாம். வீடு, வாகனம் போன்ற விலை உயர்ந்த பொருட்களை நாம் நினைத்த விலைக்கு தவிர்க்க முடியாமல் இருப்போம்.

home

சிலர் வீடு வாடகைக்கு விட முடியாமல் கூட பிரச்சினையில் இருப்பார்கள். அந்த வீடு மூலம் அவர்களுக்கு பணம் வந்து கொண்டே இருக்கும். திடீரென குடியேற ஆளில்லாமல் அதன் மூலம் வரும் வருமானம் தடைபடும். இந்த சமயங்களில் வீட்டில் இந்த தண்ணீரை தெளிக்கலாம். பிரபஞ்சத்தின் மீது நம்பிக்கையோடு எந்த ஒரு விஷயத்தையும் மந்திரங்கள் மூலம் நாம் கேட்கும் பொழுது பிரபஞ்சம் அதை நமக்கு நிறைவேற்றி தரும்.

sembu-sombu

இதற்காகவே நம் ஆச்சாரிய பெருமக்கள் பல்வேறு மந்திர உச்சாடனங்களை கற்றறிந்து வைத்திருந்தனர். இந்த சக்தி வாய்ந்த பரிகாரங்களை செய்யும் பொழுது எப்பேர்ப்பட்ட பிரச்சினைக்குரிய இடமாக இருந்தாலும், பொருளாக இருந்தாலும், வாகனமாக இருந்தாலும் கூட பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு நல்ல முறையில் உங்களுக்கு விற்கப்படும். எனவே நீங்களும் நம்பிக்கையோடு செய்து பயனடையுங்கள்.

இதையும் படிக்கலாமே
108 நாட்கள் இஷ்ட தெய்வத்திடம், வேண்டுதலை இப்படி சொன்னால், எவ்வளவு பெரிய வேண்டுதலாக இருந்தாலும் அது நிறைவேறிவிடும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.