மீனாட்சி அம்மன் சிலையில் 1 வாரமாக தவமிருக்கும் பச்சைக்கிளி! இதைப் பார்த்து பரவசம் அடைந்து வரும் பக்தர்கள்

meenatchi-parrot2
- Advertisement -

மீனாட்சி அம்மன் என்று கூறும் பொழுதே நமக்கு முதலில் நினைவில் வருவது அந்த திருஉருவ சிலையுடன் கூடிய கிளியும் தான். அம்மன் தனது திருப்பொற் கரத்தில் ஏந்திய கிளிக்கு தனி மவுசு தான். பக்தர்கள் மீனாட்சி அம்மனை வணங்கும் பொழுது, அந்த கிளியையும் சேர்த்து தான் வணங்குவார்கள். மீனாட்சி அம்மன் திருக்கரத்தில் இருக்கும் அந்த கிளிக்கு பல்வேறு கதைகளும் உண்டு. நாம் மீனாட்சி அம்மனை வேண்டி வணங்கும் வேண்டுதல்கள் அனைத்தும் அம்மன் மறந்தாலும், கிளி நியாபகம் வைத்துக் கொண்டு திரும்பத் திரும்ப அம்மனிடம் எடுத்துக்கூறி நமக்காக பரிந்துரை செய்யுமாம்.

இத்தகைய புகழ் வாய்ந்த மீனாட்சி அம்மன் சன்னிதியில் ஒரு வாரத்திற்கும் மேலாக உண்மையான கிளி ஒன்று தவம் இருக்கிறதாம்! கதை பற்றிய தகவல்களையும், காணொளியையும் நீங்களும் காண இப்பதிவை தொடர்ந்து படியுங்கள். மீனாட்சி மதுரையை ஆண்ட பொழுது, அடிபட்ட கிளி ஒன்று பறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. அதனால் உணவு கூட சாப்பிட முடியது பசியால் வாடியதாம். தன் நிலையை எண்ணி மீனாட்சியிடம் அழுது கொண்டிருந்த கிளிக்கு அடைக்கலம் கொடுக்கவே உமையவள், எப்பொழுதும் தன்னுடனேயே இருக்குமாறு வைத்துக் கொண்டதாக புராண வரலாறுகள் குறிப்பிடுகிறது.

- Advertisement -

அசரீரி வாக்கின்படி மதுரையை ஆண்டு வந்த மலையத்துவஜன் மன்னன் மீனாட்சியை ஆண் பிள்ளை போல் அனைத்து கலைகளிலும் வல்லவராக வளர்த்தார். அனைத்து திசைகளிலும் படைகளுடன் போர்தொடுக்க சென்ற மீனாட்சி இறுதியாக கைலாயம் அடைகிறார். மீனாட்சிக்கு மொத்தம் மூன்று தனங்கள் உண்டு. தன் மணவாளனை காணும் பொழுது ஒரு தனம் மறைந்து விடுவதாக கூறப்பட்டுள்ளது.

கைலாயத்திற்கு போர்தொடுக்க சென்ற மீனாட்சியின் முன் எம்பெருமான் சிவன் தோன்றியதும் மீனாட்சி கையிலிருந்த வாளை கீழே போட்டுவிட்டு வெட்கப்பட ஆரம்பித்து விட்டாள். அவளது மூன்றாம் தனமும் மறைந்து போனது. அனைத்தும் அறிந்த எம்பெருமான் சிவன், மீனாட்சிக்கு தான் யார்? என்பதை புரிய வைக்கிறார். இவ்வகையில் தான் மீனாட்சி சுந்தரேஸ்வரராக மதுரையில் நின்று இன்றும் அருள் பாலிக்கின்றனர். பக்தர்களின் குறை தீர்க்கும் தாயாகவே மீனாட்சி இன்று வரை இருந்து வருகின்றார்.

- Advertisement -

இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருத்தங்கல் என்கிற ஊரில் கருநெல்லி நாதர் ஆலயம் ஒன்று உள்ளது. அங்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதியில் இருக்கும் மீனாட்சி சிலையின் மேல் சுமார் ஒரு வார காலமாக உண்மையான கிளி ஒன்று அம்மனின் வலது புற தோள் மேல் நின்று கொண்டிருக்கிறது. இது காண்போரை அதிர்ச்சி அளிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. மற்ற அம்மனை காட்டிலும், மீனாட்சி அம்மன் சிலையில் கிளி அமர்ந்திருப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல என்பது தானே உண்மை!

மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகங்கள், அலங்காரங்கள் முடிந்ததும் எங்கிருந்து வரும் என்றே தெரியாதாம்! அந்த பச்சைக்கிளி சரியாக அம்மன் மேல் வந்து அமர்ந்து கொள்ளுமாம்! பொதுவாக கிளி என்பது தெரியாதவர்கள் இடத்தில் இருந்து சற்று தள்ளியே இருக்கும். ஆனால் அங்கு அம்மனுக்கு நடைபெறும் எந்த ஒரு பூஜை செயலிலும் அக்கிளி அசராமல் அமர்ந்திருப்பதை பார்க்கும் பொழுது அனைவரையும் பரவசப்படுத்துகிறது என்று அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். இதனை காண பல்வேறு இடங்களில் இருந்தும் அக்கோவிலுக்கு பக்தர்கள் படை எடுத்து வருகின்றனர்.

- Advertisement -