குபேர சம்பத்துக்களை எளிதில் பெற உதவும் பெருமாள் காயத்ரி மந்திரம்

perumal

இந்த உலகில் வாழும் ஜீவ ராசிகள் அனைத்தையும் காக்கும் கடவுளாக பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கிறார் பகவான் விஷ்ணு. அவருக்குரிய காயத்ரி மந்திரத்தை நாம் ஜெபிப்பதன் பலனாக நாம் செய்யும் தொழில் விருத்தி அடையும், லாபம் பெருகும், வீட்டில் பண பற்றாக்குறை நீங்கும் அதோடு வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம். இதோ அந்த அற்புதமான விஷ்ணு காயத்ரி மந்திரம்.

om manthiram

விஷ்ணு காயத்ரி மந்திரம்:
ஓம் நிரஞ்சனாய வித்மஹே
நிராபாஸாய தீமஹி
தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்

perumal

பொதுப்பொருள்:
ஸ்ரீனிவாச பெருமாளே எனக்கு சிறப்பான அறிவை தந்து என் உள்ளத்தில் உள்ள இருளை நீக்கி என் மனதை தெளிவு படுத்த உங்களை நான் மனதார வேண்டுகிறேன்.

vishnu

- Advertisement -

இந்த மந்திரத்தை தினம்தோறும் 108 முறை ஜெபிப்பதன் பலனாக நம் வாழ்வில் சகல செல்வங்களையும் பெற்று பெரு வாழ்வு வாழலாம்.

விஷ்ணு வழிபாடு

ஒரு மனிதன் தனது வாழ்வில் மிகுதியான செல்வங்களை ஈட்டவும், சுகபோகங்களை அனுபவிக்கும் நவகிரகங்களில் புதன் மற்றும் சுக்கிர பகவானின் அருட்கடாட்சம் முழுமையாக பெற வேண்டியிருக்கிறது. மகா விஷ்ணு எனப்படும் பெருமாள் இந்த இரண்டு கிரகங்களின் அம்சமாக விளங்குபவர் ஆவார். விஷ்ணு வழிபாடு செய்ய நினைப்பவர்கள் தங்கள் உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றிலும் தூய்மை காத்து வழிபாடு செய்வதால் விரும்பிய பலன்களை அடைய முடியும். மேலும் பெருமாள் கோயில்களில் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றுவது, திருமஞ்சணம் செய்தல், வஸ்திரம் சாற்றுதல் போன்ற பரிகார வழிபாடுகள் செய்வதால் நமது வாழ்வில் மங்களங்கள் அனைத்தும் உண்டாகும் என்பதே ஆன்மீகப் பெரியோர்களின் வாக்காக இருக்கிறது.

Perumal

விஷ்ணு வழிபாட்டிற்குரிய தினங்கள்

வருடத்தில் எல்லா தினங்களும் விஷ்ணு வழிபாட்டிற்குரிய தினங்களாக இருக்கிறது. ஆனபோதிலும் வாரந்தோறும் வருகின்ற புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வீட்டில் பெருமாளுக்கு வாசமிக்க மலர்கள் சாற்றி ஏதேனும் இனிப்பு உணவுகளை நைவேத்தியம் வைத்து, பெருமாள் மந்திரங்கள் துதித்து வழிபடுவது பலன்களை விரைவாக கொடுக்க வல்லதாகும். பௌர்ணமி தினங்களில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பானதாகும்.

Lord Perumal

பெருமாளுக்கு விரதம் மற்றும் வழிபாடு செய்வதற்கு உகந்த மாதமாக புரட்டாசி மாதம் இருக்கிறது. இந்த புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு விரதமிருந்து வழிபாடு செய்பவர்களின் வாழ்வில் மேன்மையான பலன்கள் ஏற்படுவதை காணலாம். பொதுவாக பெருமாளுக்கு விரதமிருக்கும் போதும், பூஜைகள், வழிபாடுகள் செய்யும் போதும், பூஜை செய்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் புலால் உணவு, போதை வஸ்துக்களை அறவே தவிர்த்து விரதம் மேற்கொள்வது நல்லது.

perumal

விஷ்ணு வழிபாடு பலன்கள்

விஷ்ணு செல்வத்திற்குரிய சுக்கிர பகவானின் அம்சம் நிறைந்தவர் என்பதால் பெருமாளுக்கு விரதங்கள் பூஜைகள் வழிபாடுகள் செய்பவர்களுக்கும், விஷ்ணு காயத்ரிமந்திரம் துதிப்பவர்களுக்கும் செல்வ சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரம் ஆகியவற்றில் நஷ்ட நிலை நீங்கி, லாபங்கள் பெருகும். சொந்த வீடு, வாகனம் போன்ற யோகங்கள் அமையும். வறுமை நிலையை நீங்கும். வாங்கிய கடன்களை திருப்பி செலுத்தும் அமைப்பு உருவாகும். வெளிநாடு சென்று செல்வம் சேர்க்கும் அதிர்ஷ்டம் உண்டாகும். நல்ல உணவு, புத்தாடைகள், வாசனை திரவியங்கள் போன்ற சுகபோக பொருட்களின் சேர்க்கை உண்டாகும். ஆண்களும், பெண்களும் மனதிற்கேற்ற வாழ்க்கை துணை அமைய பெறுவார்கள். வாழ்க்கைத் துணையால் தனலாபம் ஏற்படும் யோகமும் சிலருக்கு உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
அனைத்திலும் வெற்றி பெற உதவும் காரிய சித்தி சுலோகம்

இது போன்று மேலும் பல காயத்திரி மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

English overview:
Here we have Vishnu gayatri mantra in Tamil. It is also called as Gayathiri manthiram in Tamil or Manthiram in Tamil.

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் மற்றும் மந்திரங்களை உடனுக்குடன் பெற எங்களுடைய தெய்வீகம் மொபைல் APP-ஐ டவுன்லோட் செய்யுங்கள்.