விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாடு

perumal
- Advertisement -

எல்லோரும் தங்களுடைய வாழ்வில் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்ற குறிக்கோளை வைத்து தான் உழைத்து வருகின்றோம். ஆனால் சில பேருக்கு பொருளாதார உயர்வு என்பது சீக்கிரத்தில் கிடைத்துவிடும். சில பேர் எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும் பொருளாதாரத்தில் உயர முடியாமல் திக்கித் திணறி வருவார்கள்.

பொருளாதார முன்னேற்றத்தைப் பெற பெருமாள் வழிபாடு நமக்கு கை கொடுக்கும். அதிலேயும் இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் பெருமாளை வழிபாடு செய்தால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. வருடத்தில் நான்கு நாட்கள் மட்டும்தான் இந்த விஷ்ணுபதி புண்ணிய காலம் வரும்.

- Advertisement -

வைகாசி 1, ஆவணி 1, கார்த்திகை 1, மாசி 1. நாளை பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி வைகாசி 1 ஆம் நாள். இந்த நாளை நாம் தவறு விடலாமா. நாளைய தினம் பெருமாள் கோவிலுக்கு சென்று எப்படி வழிபாடு செய்வது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்வோமா.

மாசி 1 விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாடு

நாளைய தினம் அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்த மத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையில் பெருமாளை நினைத்து விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். உங்கள் வீட்டு பக்கத்தில் எந்த பெருமாள் கோவில் இருந்தாலும் சரி, இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். காலை 10 மணிக்கு முன்பாக அந்த பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து முடித்து விடுங்கள்.

- Advertisement -

ஏனென்றால் விஷ்ணுபதி புண்ணிய காலம் என்பது காலை 10:00 மணி வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். முடியாதவர்கள் காலை 10:30 மணிக்குள்ளாவது இந்த வழிபாட்டை முடித்து விடுங்கள். கோவிலுக்கு சென்று இரண்டு மண் அகல் விளக்குகளில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். தாயாருக்கும் பெருமாளுக்கும் உங்களால் முடிந்த  பூஜை பொருட்கள் வாங்கி சென்றாலும் சிறப்பு தான்.

முடிந்தால் துளசி இலை, மல்லிகை பூவை வாங்கி செல்லுங்கள். இந்த இரண்டும் தாயாருக்கும் பெருமாளுக்கும் ரொம்ப ரொம்ப சிறப்பு வாய்ந்த விஷயம். இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான் பெருமாளையும் மகாலட்சுமியையும் சேவித்து விட்டு பெருமாள் கோவிலை நாளை நீங்கள் 27 முறை வலம் வர வேண்டும்.

- Advertisement -

மனதார பெருமாளிடம் உங்களுடைய வேண்டுதலை வையுங்கள் பொருளாதார நிலை மேம்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளவும். கடன் சுமை குறைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளவும். நீங்கள் பெருமாளிடம் கேட்ட வரத்தை கொடுக்க கூடிய சக்தி இந்த நாளுக்கு இருக்கிறது கவனம் வச்சுக்கோங்க.

பூவை உதிரி புஷ்பங்களை கொண்டு சென்றால், ஒரு முறை சுற்றி வரும்போது கொடிமரத்தடியில் ஒரு பூவை வைத்து விடுங்கள். இன்னொரு முறை சுற்றி வரும் போது இன்னொரு பூவை வைப்பீங்க. கையில் இருக்கும் 27 பூவும் தீரும்போது 27 சுற்று முடிந்து விட்டது என்ற கணக்கு. எண்ணிக்கையில் எந்த குழப்பமும் இல்லாமல் கோவிலை வலம் வர இது ஒரு சின்ன ஐடியா.

இதையும் படிக்கலாமே: எதிரிகள் விலக பரிகாரம்

இந்த முறைப்படி பெருமாளை நாளைய தினம் வழிபாடு செய்பவர்களுக்கு கடன் சுமை குறையும் பொன் பொருளை பெரும்பாலும் மகாலட்சுமியும் உங்களுக்கு வழங்குவார்கள். இது ரொம்ப ரொம்ப எளிமையான வழிபாடு தான். அந்த காலத்திலேயே மன்னர்கள் செய்த சூட்சமமான வழிபாட்டு முறைகளில் இதுவும் ஒன்று. நாளைய தினம் வாய்ப்பு கிடைத்தவர்கள் இந்த வழிபாட்டு முறையை பின்பற்றி பலன் பெறலாம் என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -