இத்தாலியின் வாட்டிகன் நகரம் சிவ லிங்கம் போல் அமைந்தது எப்படி ? – ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்

vatikan-ciry-2

சிவலிங்கத்திற்கும் வாட்டிகன் நகரத்திற்கும் என்ன தொடர்பு இருக்குனு கேக்க தோன்றுகிறதா? ஆம் உள்ளதே என்பதே பதில். உலகில் உள்ள அத்துனை மதங்களும், இறைவழிபாட்டு முறையும், நாகரீகங்களும், தமிழரின் பண்பாட்டு முறைகளில் இருந்து திரிந்தவை தான் என்பதற்கும் இதுவும் ஒரு சான்று. இன்றைய அளவில் நமக்கு போதிக்கப்படும் இந்து மதம் என்பதே பல சமயங்களை ஒன்றிணைத்து அழைக்கபடுவது தான் என்பது வரலாற்று உண்மை.

Vatican-City

நாகரீகம் என்ற சொல்லும் கூட “நாகர்களின் ஈகம்” அதாவது நாகர்களின் வாழ்வியல் முறை என்பதையே குறிக்கிறது என்று கூறப்படுகிறது. தமிழர்களை நாகர்கள் என்று குறிப்பிடும் வழக்கம் பழங்காலங்களில் இருந்து வந்தது. இதற்கு சான்று உங்களுக்கு நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் கிடைக்கும். ஆந்திர மக்கள் இன்றளவும் தமிழர்களை நாகர் என்றே அழைகின்றனர்.

சரி நாம் வாடிகன் நகரத்தை பற்றிய செய்திக்கு வருவோம்!

கீழே உள்ள படத்தை பாருங்கள். லிங்கத்தின் வடிவத்திற்கும் வாடிகன் நகரத்தின் வடிவத்திற்கும் உள்ள ஒற்றுமை உங்களுக்கு தெரியும். அதன் நடைபாதை விரைக்குறியை போல் காட்சியளிக்கும். வாடிகன் நகரத்தின் பியாஸா சான் பியட்ரோவின் அமைப்பை உற்று பார்க்கையில் மூன்று பட்டையும் (சிவபெருமான் நெற்றியில் இடப்படும் மூன்று கோடுகள்) பொட்டும் போல் தெரியும்.

vatikan

- Advertisement -

வாடிகன் – பேரில் என்ன உள்ளது? ‘வாடிகா’ என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து தான் வாடிகன் அதன் பெயரை பெற்றது. அதற்கு வேத பண்பாட்டு மையம் என பொருளாகும். கிறிஸ்துவ மதம் தலையெடுப்பதற்கு முன்பாக வாடிகன் ஒரு (வேத) மத மையமாக திகழ்ந்தது என அந்த வார்த்தைகள் நமக்கு விளங்க வைக்கிறது.

வாடிகனில் நகரில் நடந்த ஒரு  தொல்பொருள் ஆராய்ச்சியின் போது வாடிகன் நகரத்தில் ஒரு சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. அந்த சிவலிங்கத்தை வாடிகன் நகரத்திலுள்ள க்ரெகாரியன் எட்ருஸ்கன் அருங்காட்சியில் வைத்துள்ளனர்.

vatican

கதோலிக் வாடிகன், காபா, ஏன் தாஜ்மஹால் கூட ஒரு காலத்தில் சிவபெருமானுக்கான கோவில்களாக திகழ்ந்தது என கூறப்படுகிறது. ஆமன் என்ற வார்த்தையும் கூட ஓம் என்ற உலகளாவிய அண்டத்திற்குரிய ஒலியை குறிக்கும் வார்த்தையில் இருந்து தான் எடுக்கப்பட்டது என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.