வைட்டமின் பி 3 சத்துகள் உடலுக்கு ஏற்படுத்தும் நன்மைகள் என்ன தெரியுமா?

vitamin-b3

பல வகையான ஊட்டச் சத்துக்களில் முக்கியமானது வைட்டமின் சத்து. வைட்டமின் சத்துக்கள் பல வகைகள் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒரு வைட்டமின் சத்தாக வைட்டமின் பி 3 ஊட்டச்சத்து இருக்கின்றது. இந்த வைட்டமின் பி 3 ஊட்டச்சத்தை நியாசின் என்றும் அழைப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அத்தியாவசிய தேவையாக இந்த வைட்டமின் பி 3 ஊட்டச்சத்து. அத்தகைய வைட்டமின் பி 3 ஊட்டச்சத்து அதிகம் உட்கொள்வதால் நமக்கு உண்டாகும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

vitamin b3

வைட்டமின் பி 3 பயன்கள்

இதய நோய்கள்
இயற்கையான உணவு வகைகளில் வைட்டமின் பி – 3 சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. அவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவது குறைகிறது. ஆராய்ச்சிகளின் படி வைட்டமின் பி – 3 சத்துகளை தினசரி உணவுகளிலிருந்து எடுத்துக்கொள்வதால் இதயம் சீராக செயலாற்ற உதவுகிறது. மேலும் வைட்டமின் பி – 3 சத்து கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் அதிகம் சேராமல் தடுத்து இதயத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் காக்கிறது.

ஆர்த்தரைடீஸ்

ஆர்த்தரைடீஸ் என்பது உடலில் மூட்டு பகுதிகளான முழங்கை, முழங்கால் மற்றும் இதர எலும்பு மூட்டுகளில் மிகுந்த வலியை ஏற்படுத்தக்கூடிய ஒரு நோயாக இருக்கிறது. இந்த நோய் வயதானவர்களிடம் அதிகம் ஏற்படுகிறது. ரத்தத்தில் அதிக அளவு யூரிக் அமிலம் உருவாகி, அவை இந்த மூட்டுப் பகுதிகளில் படிந்து விடுவதால் மேற்கண்ட ஆர்த்தரைடீஸ் பிரச்சினை ஏற்படுகிறது. வைட்டமின் பி – 3 சத்துகளை தொடர்ந்து சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் யூரிக் அமிலங்கள் குறைந்து, ஆர்த்தரைடீஸ் நோய் பாதிப்பு நீங்கி, மூட்டுக்களில் வலி ஏற்படுவது குறைவதாக மருத்துவ ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது.

vitamin b3

- Advertisement -

நீரிழிவு நோய் கட்டுப்பட

மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய மிகக் கொடுமையான வியாதிகளில் நீரிழிவு வியாதியும் ஒன்று. இந்த பாதிப்பிற்குள்ளான அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் உயராமலும் அதே நேரத்தில் அதிக அதிகம் குறையாமலும் சரியான அளவில் காக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. இதில் டைப் 1 நீரிழவு நோயானது நமது உடலின் கணையத்தில் உற்பத்தியாகும் இன்சுலின் செல்களை நமது உடலின் செல்களே அழிப்பது ஆகும். நியாசின் எனப்படும் வைட்டமின் பி 3 சத்து இத்தகைய நிலை ஏற்படாமல் காத்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீரான விகிதத்தில் இருக்க உதவுகிறது.

மூளை திறன் அதிகரிக்க

மனிதனின் அத்தனை விதமான செயல்களுக்கும் அடிப்படை உறுப்பாக மூளை இருக்கிறது. மூளையின் செயல்திறன் அதிகரிப்பதோடு, கூர்மையான ஞாபக திறனும் மேம்பட வைட்டமின் சத்துகள் அவசியம். அதிலும் நியாசின் எனப்படும் வைட்டமின் பி 3 சத்துகள் நிறைந்த உணவை சாப்பிடுபவர்களுக்கு மூளைக்கு ரத்தம் பாய்வதை தங்குதடையில்லாமல் பார்த்துக் கொள்வதால் மூளை மிகவும் சுறுசுறுப்பாக செயலாற்றுகிறது. மேலும் இந்த வைட்டமின் பி3 அல்லது நியாசின் ஷிர்ஷோபிர்னியா எனப்படும் மனம் மற்றும் மூளை நலம் சார்ந்த குறைபாடு ஏற்படுவதையும் தடுக்கிறது.

பெல்லாக்ரா

ஒரு சிலருக்கு அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்படுவது, ஞாபக மறதி நிலை மற்றும் தோல் சம்பந்தமான வியாதிகள் ஒன்று சேர்ந்து ஏற்படுவதை பெல்லாக்ரா என அழைக்கின்றனர். இந்தப் பெல்லாக்ரா குறைபாடு உடலில் வைட்டமின் பி 3 எனப்படும் நியாசின் சத்து குறைபாட்டால் ஏற்படுகின்றது. எனவே வைட்டமின் பி 3 சத்துகள் நிறைந்த உணவை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நியாசின் சத்துகளோடு மற்றொரு வைட்டமின் சத்தான தயாமின் சத்துக்கள் கிடைக்க பெற்று மேற்கூறிய குறைபாடுகள் நீங்கி உடலை வலுப்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

கெட்ட கொலஸ்ட்ரால் நீங்க

எல்.டி.எல் எனப்படும் கெட்ட கொழுப்பு வகைகள் நமது ரத்தத்தில் படிவதை தடுக்கும் அரும்பணியை வைட்டமின் பி 3 சத்துகள் செய்வதாக மருத்துவ ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. தினந்தோறும் வைட்டமின் பி 3அல்லது நியாசின் சத்துகளை சாப்பிடும் நபர்களுக்கு அவர்களின் ரத்த நாளங்களில் படிந்தி ருக்கின்ற எல்.டி.எல் கொலஸ்ட்ரால் சத்துகள் வைட்டமின் பி 3 இருக்கும் சிறிய அளவிலான கொழுப்பு சத்தால் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு உடல்நலனை பேணுகிறது.

இதையும் படிக்கலாமே:
ஒமேகா – 3 பயன்கள்

இது போன்று மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Vitamin B3 benefits in Tamil. It is also called as Vitamin B3 payangal in Tamil or Vitamin B3 nanmaigal in Tamil or Vitamin B3 uses in Tamil or Vitamin B3 sathu in Tamil.