விழியிலே மலர்ந்து உயிரிலே கலந்த – காதல் கவிதை

Love kavithai

விழியிலே மலர்ந்து உயிரிலே கலந்த
பெண்ணென்னும் பொன்னழகே..
மலரிலே புகுந்து தென்றலில் கலந்த
பூமியின் புது நிலவே..

Kadhal kavithai image
Kadhal kavithai image

கற்பனைக்கும் எட்டாத கனி அமுதே ..
என் கண்களில் புதுந்து காதலை தூண்டிய
பெண்ணினத்தின் பேரழகே..

உனை என் கையில் ஏந்தி உலகம் சுற்ற
காலங்கள் கடந்தாலும் காத்திருப்பேன்..
என் இதய பையில் உன்னை வைத்து
இமைகள் மூடாமல் காத்து நிற்பேன்.

love kavithai image
love kavithai image

இரு மனங்கள் இணைந்திடும் நேரத்தை எவராலும் விவரிக்க முடியாது. காதலுக்கு என்றொரு தனி சக்தி இருக்கிறது. அதை உண்மையாக காதலிப்பவர்களால் மட்டுமே உணர முடியும். அந்த சக்திக்கு இணையானது வேறு எதுவுமே இல்லை. காதலை போற்றுவோம். காதலர்களை வாழ வைப்போம்.

இது போன்ற மேலும் பல காதல் கவிதைகள் மற்றும் பல தகவல்களை அறிய தெய்வீகம் பக்கத்தோடு இணைந்திருங்கள்.