ஒரே நாளில், உங்கள் முகத்தில் இருக்கும் மருக்கள் உதிர்ந்துவிடும். இப்படி செய்து பாருங்கள்!

maru-wart

சில பேருக்கு முகத்தில் ஒரே ஒரு மரு வர ஆரம்பிக்கும். காலப்போக்கில் அந்த மரு, முகம் முழுவதும் பரவி விடும். முகம் மட்டும் இல்லை. உடலில் எந்த இடத்தில் மருக்கள் வந்தாலும், அது பரவும் தன்மை கொண்டது. ஆகையால் ஆரம்ப கட்டத்திலேயே அதை உதிர வைப்பது நல்லது. மருக்கலை இயற்கையான பொருட்களை வைத்து எப்படி சுலபமான முறையில் நீக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

vetrilai

வாடாமல் செழிப்பாக, பச்சையாக இருக்கும் ஒரு வெற்றிலையை வாங்கிக் கொள்ள வேண்டும். அந்த வெற்றிலையானது காம்போடு இருக்க வேண்டியது மிக அவசியம். அதன் பின்பு வெற்றிலைக்கு போடும் சுண்ணாம்பு. மருக்களை போக்க இந்த இரண்டு பொருட்கள் மட்டுமே போதுமானது.

வெற்றிலையின் காம்பை லேசாக நசுக்கும் பட்சத்தில் அதில் இருந்து சாரு வெளிப்படும். அந்த காம்பை லேசாக நசுக்கி விட்டு, சுண்ணாம்பை தண்ணீரில் பேஸ்ட் போல் கரைத்துக் கொள்ள வேண்டும். வெற்றிலையின் நசுக்கிய காம்பை, இந்த சுண்ணாம்பில் தொட்டு, மரு உள்ள இடத்தில் வைக்க வேண்டும்.

coconut oil 2

இப்படி இந்த சுண்ணாம்பை மருவின் மேல் வைப்பதற்கு முன்பாக, அந்த மருவை சுற்றிலும் தேங்காய் எண்ணை போட்டு விடுங்கள். இப்படி செய்யும்பட்சத்தில் சுண்ணாம்பினால் உங்களது சருமத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும். சில பேருக்கு ஒரே ஒரு முறை இந்த முறையைப் பின்பற்றும் நாளே மரு உதிர்ந்துவிடும்.

- Advertisement -

சில பேருக்கு இரண்டு, மூன்று முறை இந்த முறையை பின்பற்ற வேண்டியதாக இருக்கும். வாரத்திற்கு 3 நாள், இப்படி செய்யலாம். அதாவது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இப்படி செய்யலாம். இரவு நேரங்களில் போட்டு விடுங்கள். மறுநாள் காலை கழுவி விடலாம். பகல் நேரத்திலும், இப்படி செய்து கொள்ளலாம் தவறில்லை. குறைந்தது 6 மணி நேரம் அந்த சுண்ணாம்பு உங்களது பருக்களின் மேல் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

wart-maru

மருக்கள் இருந்த இடத்தில், தழும்பு கூட தெரியாமல் உதிரவைக்க கூடிய சக்தி, இந்த வெற்றிலை காம்பில் உள்ள சாருக்கும், சுண்ணாம்பிற்க்கும் இருக்கிறது. உங்களது சருமமானது மிகவும் மென்மையான சருமமாக இருந்தால், முதலில் சுண்ணாம்பை கை பகுதிகளில் தடவி பாருங்கள். அதிகமான எரிச்சல் இருந்தால், சுண்ணாம்புக்கு பதிலாக, துணி சோப்பு குழைத்துக் கூட பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே
கடலைமாவை எக்காரணத்தைக் கொண்டும் இப்படி மட்டும் பயன்படுத்தாதீர்கள். முகத்தின் அழகு சீக்கிரமே குறைந்து போகும்.

இது போன்ற மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Mugathil maru neenga tips in Tamil. Wart removal in Tamil. Maru poga tips in Tamil. Maru poga enna vali. Maru neenga maruthuvam.