எத்தனை தடவை மணி பிளான்ட் வாங்கி வைத்தாலும் வளரவே மாட்டேன் என்கிறதா? அதிர்ஷ்டம் தரும் மணி பிளான்ட் காடு மாதிரி வளர என்ன செய்ய வேண்டும்?

money-plant-fertilizer
- Advertisement -

மணி பிளான்ட் அதிர்ஷ்டம் தரும் என்பது பலருடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. இது சீன தேசத்து நம்பிக்கையாக இருந்தாலும் மற்ற பிற நாடுகளும் இதை ஏற்றுக் கொண்டு அதை வளர்த்து வருகிறார்கள். மணி பிளான்ட் அதிர்ஷ்டம் தருமோ, இல்லையோ நம்முடைய கண்களுக்கு குளிர்ச்சியான வண்ணங்களை கொடுக்கிறது. அது மட்டும் அல்லாமல் தினமும் இதை பார்ப்பதால் மனம் ஒரு விதமான சாந்தம் கொள்கிறது என்று கூறப்படுகிறது. அப்படியான அதிர்ஷ்டம் நிறைந்த இந்த மணி பிளான்ட் செடி சிலருடைய வீடுகளில் காடு போல சூப்பராக வளர்ந்திருக்கும் ஆனால் சிலருக்கு வாங்கி வைத்த நான்கு நாட்கள் நன்கு வளரும், அதன் பிறகு அப்படியே நின்று விடும். இப்படி மணி பிளான்ட் வளராமல் போவதற்கு என்ன காரணம்? அதை வளர செய்ய என்ன செய்யணும்? என்பதைத் தான் இந்த தோட்ட குறிப்பு பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

மணி பிளான்ட் செடிகளை வளர்ப்பவர்கள் அதை கண்டிப்பாக பிளாஸ்டிக் பாட்டில்களில் வளர்க்க வேண்டாம். எல்லா செடிகளை போலவும் மணி பிளான்ட் செடிகளில் இருக்கக்கூடிய நோய் தாக்கப்பட்ட இலைகள் அல்லது தண்டுகளை அடிக்கடி வெட்டி விட வேண்டும். அது மட்டும் அல்லாமல் தினமும் அதற்கு தண்ணீரை சுத்தமாக மாற்றி விட வேண்டும். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சூரிய ஒளி கொஞ்சமாவது அதன் மீது பட வேண்டும்.

- Advertisement -

மணி பிளான்ட் தண்ணீரில் வளர்வதை விட மண்ணில் வேகமாக வளர்கிறது எனவே தண்ணீரில் வளர்க்க முடியாதவர்கள் அதை மண்ணில் வளர்த்துப் பாருங்கள். மேலும் தினமும் அதற்கு தண்ணீர் தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றுங்கள். அதற்கு ஊட்டச்சத்து உரங்களை லிக்விட் வடிவத்தில் மட்டுமே கொடுக்க வேண்டும். மணி பிளான்ட்டை பொறுத்தவரை திரவ உரங்களே அதற்கு சிறந்தது.

மணி பிளான்டின் வேர்கள் நன்கு ஊடுருவி செல்லக்கூடிய தன்மை கொண்டுள்ளது. எனவே அதை குறுகிய இடத்தில் நீங்கள் அடக்க நினைத்தால் அது வளராமல் போவதற்கு வாய்ப்பு உண்டு. குறுகிய இடங்களில் அதற்கு தேவையான கால்சியம், மெக்னீசியம், குளோரைடு போன்ற நியூட்ரிஷியன்கள் கிடைக்காமல் போகலாம். எனவே திரவ வடிவத்தில் நீங்கள் இந்த உரங்களை அதற்கு கொடுத்து வந்தால் நன்கு வளரும்.

- Advertisement -

வேர் விட்ட பிறகு இரண்டிலிருந்து மூன்று வாரத்திற்கு பிறகு நீங்கள் இந்த திரவ உணவுகளை கொடுத்து வரலாம். ஐந்து முட்டையின் ஓட்டை எடுத்து நன்கு காய வைத்துக் கொள்ளுங்கள். பின் அதை பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அரை லிட்டர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி பாலித்தின் கவர் போட்டு நன்கு மூடி வைத்து விடுங்கள். ஐந்திலிருந்து ஆறு நாட்கள் வரை அதை எதுவும் செய்யாமல் தொடாமல் அப்படியே விட்டு விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
இனிமே ரேஷன் கோதுமைய சலிச்சு, மீதமான தவிடை கூட வீணாக்காதீங்க, அத வைச்சு பூக்காத மல்லி செடியை முழம், முழம்மா பூக்க வைக்கலாம் தெரியும்மா?

அதன் பிறகு நீங்கள் இந்த தண்ணீருடன் 50 சதவீதம் அளவிற்கு சாதாரணமான தண்ணீர் சேர்த்து உரமாக உங்களுடைய மணி பிளான்ட் செடிகளுக்கு கொடுத்து வாருங்கள். முட்டை ஓடு மட்டும் அல்லாமல் இதே முறையில் நீங்கள் வாழைப்பழ தோல், சர்க்கரை சேர்க்காத டீ தூள், மாட்டுச் சாணம், கடல்பாசி மற்றும் கிச்சன் வேஸ்ட் எதுவாக இருந்தாலும் இதே முறையில் நீங்கள் உரமாக தயாரித்து லிக்விட் வடிவத்தில் கொடுத்து பாருங்கள், நன்கு செழிப்பாக உங்களுடைய மணி பிளான்ட்டும் சூப்பராக வளரும்.

- Advertisement -