அட வெள்ளை துணியை பளிச்சுன்னு துவைக்கிறது இவ்வளவு ஈஸியா? இத்தனை நாள் இது தெரியாம கை வலிக்க துவைச்சோமே. இனி கஷ்டமே படாம வெள்ளை துணியை பளிச்சுன்னு மாத்திடலாம்.

washing tips
- Advertisement -

எல்லா துணிகளை வாஷிங்மெஷினில் போட்டு துவைத்தாலும் கூட இந்த வெள்ளை துணிகளை எப்படியும் கைகளில் தான் சோப்பு போட்டு துவைக்க வேண்டும். அப்படியே துவைத்தாலும் கூட சில மாதங்களிலே வெள்ளை துணி பழுப்பு நிறத்தில் மாறி விடும். அதிலும் இந்த காலர், அக்குள் பகுதிகள் எல்லாம் கேட்கவே தேவை இல்லை தேய்க்க அத்தனை சிரம்பட வேண்டியிருக்கும். இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் சிரமமே இல்லாமல் வெள்ளை துணிகளை பளிச்சென்று மாற்றுவது எப்படி என்பதை தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

வெள்ளை துணிகளை பளிச்சென்று மாற்ற:
இதற்கு முதலில் வெதுவெதுப்பான தண்ணீர் அறை பக்கெட் எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு தண்ணீர் வெதுவெதுப்பாக இருக்க வேண்டியது அவசியம். அத்துடன் கொஞ்சம் கல் உப்பு மற்றும் நீங்கள் தலைக்கு உபயோகப்படுத்தும் எந்த ஷாம்பாக இருந்தாலும் சரி அதில் ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் போடும் துணியின் அளவிற்கு ஏற்றார் போல ஷாம்பின் அளவை சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் நம் வீட்டில் டாய்லெட் சுத்தம் செய்ய பயன்படுத்தும் ஹார்ப்பிக் ஒரு மூடி சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த தண்ணீரில் வெள்ளைத் துணிகளை அரை மணி நேரம் ஊற விடுங்கள். அதன் பிறகு இந்த துணிகளை எடுத்து நாம் பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் ஸ்கிரப்பரை வைத்து லேசாக ஒரு முறை தேய்த்துக் கொடுங்கள். ஒரு வேளை உங்களின் வெள்ளை துணி மிகவும் அழுக்காக இருந்தால் அந்த இடத்தில் மட்டும் லேசாக கொஞ்சம் ஷாம்புவை சேர்த்து தேய்த்துக் கொடுங்கள். இப்படி தேய்க்கும் போது துணிகளில் உள்ள கறைகள் அனைத்தும் நீங்கி வெள்ளை துணி பளிச்சென்று மாறி விடும்.

இதே முறையை வீட்டில் அதிக அழுக்குப் படிந்த துணிகளை கூட துவைக்க பயன்படுத்தி கொள்ளலாம். வெள்ளைத் துணியை தவிர்த்து மற்ற துணிகளை துவைக்கும் போது ஹார்பிக் பதிலாக வெள்ளை நிறத்தில் இருக்கும் டேஸ்டை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த முறையில் நீங்கள் துணி துவைக்கும் போது அதிக அழுத்தம் கொடுத்து தேய்க்க வேண்டும் என்ற அவசியம் இருக்காது.

இதையும் படிக்கலாமே: வீட்டில் பிசுபிசுப்பான ஜன்னலை சுத்தம் செய்வது இவ்வளவு ஈஸியா? அட்டகாசமான இந்த 10 ஹோம் டிப்ஸ் நீங்களும் தெரிஞ்சுக்கோங்க ஆச்சரியப்படுவீங்க!

இந்த எளிமையான முறையை நீங்களும் தெரிந்து வைத்துக் கொண்டால் குழந்தைகளின் பள்ளி சீருடை முதல் மற்ற வெள்ளை நிறத் துணைகளை எல்லாம் கொஞ்சம் கூட சிரமம் இல்லாமல் பளிச்சென்று துவைத்து விடலாம். அது மட்டும் இன்றி வெள்ளை துணிகள் நீண்ட நாட்களுக்கு பழுப்பு நிறத்தில் மாறாமல் வெள்ளை நிறமாகவே இருக்கும். இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -