தர்பூசணி பழத்தை சாப்பிட்டால் மட்டும் போதுமா? இது தெரிஞ்சா தோல கூட தூக்கிப் போட மாட்டீங்க!

water-melon-face-frutti
- Advertisement -

தற்போது வெயில் காலம் தொடங்கி விட்ட நிலையில் தர்பூசணி சீசன் களைகட்ட தொடங்கி விட்டது. தர்பூசணி சீசன் தொடங்கியதும் எல்லோருடைய வீட்டிலும் அதை வைத்து சாலட் செய்வதும், ஜூஸ் போடுவதும் சகஜமாகி விட்டது. கோடைக் காலத்தில் உடல் வெப்பத்தை குறைக்க தர்பூசணியை விட சிறந்த தேர்வு எதுவும் இருக்க முடியாது என்று கூறலாம். அந்த அளவிற்கு மகத்துவம் வாய்ந்த தர்பூசணி பழத்தை சாப்பிட்டால் மட்டும் போதாது! இந்த விஷயத்தை தெரிந்து கொண்டால் இனி தர்பூசணியின் தோலை கூட வீணாக்க மாட்டீர்கள்! அது என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

watermelon

தர்பூசணியில் இருக்கும் அதிகப்படியான விட்டமின்கள் மற்றும் மினரல்கள் கோடை காலத்திற்கு மிகவும் நல்லது செய்யும். குறிப்பாக விட்டமின் சி மற்றும் விட்டமின் ஏ சத்துக்கள் கணிசமாக தர்பூசணி பழத்தில் இருப்பதால் உடல் சூட்டை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் இதில் இருக்கும் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் தசை மற்றும் தோல்களுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

- Advertisement -

எனவே தர்பூசணி பழத்தை சாப்பிடுவதோடு மட்டும் விட்டுவிடாமல் தர்பூசணி சாற்றை முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு உலரவிட்டு பின் முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவினால் முகத்தில் இருக்கும் தோல் சுருக்கங்கள் நீங்கி முகம் தெளிவடையும். தோலில் இருக்கும் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறும். தர்பூசணி துண்டுகளை எடுத்து முகத்திற்கு முன்னும் பின்னுமாக சுற்றி மசாஜ் செய்தால் முகத்தில் இருக்கும் மாசு, மருக்கள், அழுக்குகள் அனைத்தும் நீங்கும்.

water-melon-for-face

நாம் கேக் செய்ய அல்லது ஐஸ் கிரீம் செய்ய பயன்படுத்தும் டுட்டி ஃப்ரூட்டி தர்பூசணியின் தோலை வைத்து செய்யலாம். தர்பூசணியின் முன்புறம் உள்ள பச்சை நிற கடினமான தோலை அகற்றி விட வேண்டும். அதே போல உட்புறத்தில் இருக்கும் தசைப் பகுதிகளையும் நீக்கி விட்டு தோலை மட்டும் எடுத்து குட்டி குட்டியாக ஃப்ரூட்டி போல சதுரமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

சதுரமாக நறுக்கிய இந்த தர்பூசணி தோல் துண்டுகளை சுத்தமான தண்ணீரில் போட்டு அடுப்பில் வைத்து ஒரு கொதி கொதிக்க விட வேண்டும். பின்னர் நன்கு வடிகட்டி ஆற வைத்து பின் தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் ஒரு பங்கு சர்க்கரைக்கு, கால் பங்கு தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் வரை கொதிக்க விட வேண்டும். இந்த சர்க்கரை பாகுவில் வேக வைத்த தர்பூசணி பல தோல் துண்டுகளை போட்டு 5 நிமிடம் வரை அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடுங்கள்.

tutty-frutti

பின்னர் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தனித்தனியாக நிறமூட்டிகள் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு, மஞ்சள், சிகப்பு வர்ண நிறங்களில் இருக்கும் ஃபுட் கலர்களை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு டிஷ்யூ பேப்பரில் போட்டு சிறிது நேரம் கழித்து பார்த்தால் அதில் இருக்கும் ஈரத்தன்மை உறிஞ்சப்பட்டு உலர்வாக இருக்கும். இதை ஒரு காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் போதும். நீங்கள் ஐஸ்கிரீம், கேக் போன்ற டெஸர்ட் வகைகளை செய்யும் பொழுது சுலபமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -