இறைவனை காண எது எளிய வழி – ஒரு குட்டி கதை

sivan-4

ஒரு காட்டில் முனிவர் ஒருவர் கடுந்தவம் புரிந்துகொண்டிருந்தார். அந்த காட்டில் வழக்கமாக விறகு வெட்டும் இரு ஆசாமிகள் இந்த முனிவர் எப்போதும் தவத்தில் இருப்பதை பார்த்துவிட்டு தங்களுக்குள் எதையோ பேசிக்கொண்டு செல்வர். ஒரு நாள் அவர்கள் இருவரும் விறகு வெட்டிக்கொண்டிருக்கையில் திடீரென ஒருவர் மயங்கி விழுந்துவிடுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்றொருவர் தவமிருக்கும் முனிவரிடம் சென்று தன்னுடைய நண்பன் திடீரெனெ மயங்கி விழுந்துவிட்டான் அவனை காப்பாற்றுங்கள் என கதறுகிறார்.

தவத்தில் இருந்து விழித்த முனிவர், என் தவத்தையே கலைகிறாய் என்றால் உனக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கும் என்று கோவத்தோடு எழுந்து அவனை குருவியாக போகும்படி சபிக்கிறார். உடனே அந்த ஆசாமி குருவியாக மாறுகிறார். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்து வந்த இன்னொருவன் நடந்ததை கண்டு அதிர்ச்சி அடைகிறான். அந்த முனிவரிடம் தன் நண்பனை எப்படியாவது மீண்டும் மனிதனாக மாற்றும்படி வேண்டுகிறான். கோப நிலையில் இருந்து சாந்தம் அடைந்த முனிவர், எனக்கு சாபம் கொடுக்க தெரியுமே தவிர அதில் இருந்து விடுவிக்க தெரியாது ஆகையால் இது குறித்து நான் என் குருநாதரிடம் அறிந்து வருகிறேன் அது வரை நீ இந்த குருவியை பத்திரமாக பார்த்துக்கொள் என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார்.

தன் குருநாதரிடம் சென்று நடந்ததை பற்றி விவரிக்கிறார். குருநாதர் சிறிது நேரம் யோசித்துவிட்டு இந்த சாபத்தில் இருந்து அவன் விடுபட வேண்டும் என்றால் உன் தவ வலிமையை நீ தானமாக கொடுக்க வேண்டி இருக்கும் என்றார். தவ வெளிமையை கொடுப்பதற்கு அவர் மனம் இணங்கவில்லை ஆகையால் வேறு ஏதும் உபாயம் உள்ளதா என கேட்கிறார். கிருஷ்ணாபுரி என்னும் ஊரில் பகலவன் என்று ஒருவன் உள்ளான். அவனிடம் நிறைய புண்ணியம் இருக்கிறது ஆகையால் அந்தபுனியத்தில் சிறுதளவு நீ தானமாக பெற்றால் அதை கொண்டு சாபத்திற்கு விமோச்சனம் தரலாம் என்று கூறுகிறார். அதோடு நீ தேவை இல்லாமல் சினம் கொண்டு இப்படி யாருக்கும் சாபம் அளிக்கவேண்டாம் அது உன் தவப்பயனை குறையச்செய்யும் என்றும் கூறுகிறார்.

munivar

 

- Advertisement -

குருதேவர் சொன்ன அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு கிருஷ்ணாபுரியை நோக்கி பயணம் செய்கிறார் அந்த முனிவர். வழியில் ஒரு அழகிய மங்கையை கண்டு அவள் அழகில் மெய்மறந்து போகிறார். இதை கண்ட அந்த மங்கை, முனிவராக இருந்து கொண்டு என் அழகில் சொக்குகிறீர்களே இது நியாமா என்று கேட்கிறார். இதனால் ஆத்திரமுற்ற அந்த முனிவர் அந்த பெண் தன் அழகை இழக்கட்டும் என்று சாபமிடுகிறார். உடனே அந்த பெண் கோரமாக மாறிவிடுகிறார்.

ugly girl

கிருஷ்ணாபுரியை அடைந்ததும் பகலவனின் வீடு எங்கிருக்கிறது என்று ஒருவரிடம் வினவுகிறார். பகலவனின் வீட்டு சமையல் சுவையாக இருக்கும் என்பதற்காக இப்படி சாப்பாட்டிற்காக அவன் வீட்டை தேடி அலைகிறீர்களே ஒரு முனிவருக்கு இது தான் அழகா இன்று அவன் கேட்கிறான். இதை கேட்டு கோபம் கொண்ட அந்த முனிவர் அவனை ஊமையாய் போகட்டும் என்று சபித்துவிட்டு ஒருவழியாக பகலவனின் வீட்டை கண்டுபிடித்து உள்ளே செல்கிறார்.

village

முனிவரை நன்கு உபசரிக்கிறார் பகலவன். சிறிது நேரம் கழித்து முனிவர் பேச்சை ஆரமிக்கிறார். என்னுடைய குருநாதர், நீங்கள் ஒரு பெரிய புண்ணியவான் என்று கூறினார். எங்கு தவம் செய்து இவளவு புண்ணியத்தை பெற்றீர்கள் என்று கேட்கிறார். நான் எங்கும் தவம் எல்லாம் செய்யவில்லை ஐயா, என்னிடம் உதவி என்று கேட்டுவரும் அனைவருக்கும் என்னால் முடிந்த உதவிகளை நான் செய்துவருகிறேன். நான் இறைவனை வணங்குவதெல்லாம் கிடையாது. என்னை பொறுத்தவரை ஒவ்வொரு உயிருக்குள்ளும் இறைவன் இருக்கிறார். ஆகையால் நான் எல்லா உயிர்களையும் நேசிக்கிறேன் எல்லோரிடமும் அன்பு பாராட்டுகிறேன். தவம் பற்றி நான் அறியேன் என்கிறார்.

munivarபகலவன் தன்னுடைய தவத்தை பற்றி கேவலமாக பேசுகிறார் என்று எண்ணி அவருக்கு கை கால் விளங்காமல் போகட்டும் என்று முனிவர் சாபம் அளிக்கிறார். ஆனால் அவருடைய சாபம் இந்த முறை பலிக்கவில்லை. பகலவனோ, தங்கள் மனம் புண்படும் படி நான் பேசியது தவறு தான் என்னை மன்னியுங்கள் என்கிறார். ஆனால் முனிவர் மன்னிப்பதாக இல்லை மீண்டும் சாபம் அளிக்கிறார் ஆனால் சாபம் பலிக்கவில்லை. முனிவரிடம் பகலவன் மென்மையாக கூறுகிறார், ஐயா நீங்கள் எத்தனை முறை சாபம் அளித்தாலும் எனக்கு பலிக்காது. எனக்கு மட்டும் இல்லை இனி யாருக்கும் பலிக்காது. உங்கள் தவ வலிமை முழுவதையும் நீங்கள் அழகிய பெண்ணுக்கும், வழிப்போக்கனுக்கும், விறகுவெட்டிக்கும் சாபமிட்டே தீர்த்துவிட்டீர்கள் என்கிறார்.

 

munivar

முனிவர் தன் தவறை உணருகிறார். பின் பகலவன் தன் புண்ணியத்தில் ஒரு பாதியை அந்த முனிவருக்கு தானமாக தருகிறார். உடனே அவர் தன் தவ வலிமையை திரும்ப பெறுகிறார். அதோடு அவர் சாபமிட்ட அனைவரும் மீண்டும் பழைய நிலையை அடிக்கின்றனர். அங்கிருந்து முனிவர் விடைபெற்றுக்கொண்டு மீண்டும் தன் குருநாதரிடம் வருகிறார். குருநாதரிடம் நடந்த அனைத்தையும் விவரித்த பிறகு, எப்படி தவம் செய்யாமல் பகலவன் இத்தனை வலிமைகளை பெற்றான் ? இது எப்படி சாத்தியம் என்று கேட்கிறார். ஒருவர் செய்யும் தானமும் தர்மமும் தவத்தால் கிடைக்கும் விலைமயை விட அதிக வலிமை கொண்டது என்கிறார் குருநாதர். சரி இப்போது பகலவன் தன் புன்னியத்தின் ஒரு பாதியை தானம் அளித்துவிட்டதால் அவன் வலிமை குறைந்திருக்காதா என்று கேட்கிறார். நிச்சயம் குறையாது. அவன் தன் புன்னியத்தையே தானம் செய்ததால் அவனுடைய வலிமை இதனால் பன் மடங்கு அதிகரித்துள்ளது என்றார் குருநாதர்.

இதையும் படிக்கலாமே:
நம் கஷ்டங்களுக்கெல்லாம் யார் காரணம் ? – குட்டி கதை

தவத்தை விட தானம் தான் இறைவனை அடைய சிறந்த வழி என்பதை முனிவர் அறிந்துகொண்டு அன்று முதல் தன்னால் முடிந்ததை மற்றவர்களுக்கு தானமாக வழங்கினார். அதோடு கோபத்தை விட்டு அனைவருக்குள் இருக்கும் இறைவனை அவர் காண தொடங்கினார்.