உங்கள் அடிவயிற்றில் உள்ள கொழுப்பு குறைந்து சிக்கென அழகாக மாற தினமும் காலை இந்த கஞ்சியை மட்டும் குடித்து பாருங்கள். கிடைக்கும் பலனை பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்

soup
- Advertisement -

இன்றைய உணவுமுறை பழக்கவழக்கம் அனைவரின் உடல் நலத்தையும் மிகவும் பாதிக்கிறது. முன்பெல்லாம் காலை உணவு என்றால் அது உடம்பிற்கு சத்தான உணவாக இருந்தது. கம்பு, கேழ்வரகு இவற்றில்தான் காலை உணவு இருக்கும். அவ்வாறு கம்மங்கூழ், கேழ்வரகு கஞ்சி, கம்மங்கஞ்சி, கேப்பக் கூழ் இவ்வாறான உணவுகளை உண்பதன் மூலம் அன்றைய நாள் முழுவதும் உடல் மிகவும் சுறுசுறுப்புடன் இருக்கும். இவை நமது வாழ்நாளை அதிகரிக்கும் அளவிற்கு மிகுந்த ஊட்டச்சத்து மிக்கதாக இருக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் காலையில் எழுந்தவுடன் டீ குடித்து, பிரட் டோஸ்ட், இட்லி, தோசை என சாப்பிடுகின்றோம். இவை உடம்பில் தேவையில்லாத கொழுப்புகளை தான் சேர்க்கின்றன. இதனால் நமது உடல் விரைவில் களைப்படைந்து விடும். இவ்வாறு உடம்பில் சேர்ந்துள்ள நாள்பட்ட கொழுப்பை கரைக்க இந்த கஞ்சியை மட்டும் தினமும் காலையில் தொடர்ந்து குடித்து பாருங்கள். உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

idli-vadakari

தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு – அரை கப், கோதுமை ரவை – அரை கப், வெங்காயம் – 1, கேரட் – 1, பீன்ஸ் – 10, பச்சைப்பட்டாணி – 50 கிராம், பூண்டு – 10 பல், இஞ்சி சிறிய துண்டு – 1, எண்ணெய் – 2 ஸ்பூன் மிளகுத் தூள் – ஒரு ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் வெங்காயம், கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து, அரை கப் கோதுமை ரவை சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

vegetables

பிறகு அரை கப் கேழ்வரகு மாவு மற்றும் அரைத்து வைத்துள்ள கோதுமை ரவை பொடியையும் ஒன்றாக சேர்த்து, தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு பாத்திரத்தை வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

soup2

பின்னர் மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதனுடன் உப்பு சேர்த்து காய்கறிகள் அனைத்தையும் வேக வைக்கவேண்டும். காய்கறிகள் நன்றாக வெந்ததும் கரைத்து வைத்துள்ள மாவை இவற்றுடன் சேர்த்து கலந்து விட்டு கொதிக்க விட வேண்டும். பின்னர் ஒரு ஸ்பூன் மிளகு தூள் சேர்த்து ஒரு கொதி வந்த பிறகு இறுதியாக கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால் சுவையான சத்து நிறைந்த கஞ்சி தயாராகிவிடும்.

- Advertisement -