எந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்சனை தீரும் தெரியுமா?

amman-3

உலகின் ஆதார சக்தியாக திகழ்பவள் அன்னை ஆதிபராசக்தி. அவளிடம் இருந்துதான் மும்மூர்த்திகளும் தோன்றினர். உலக மக்களை காத்து ரட்சிக்கவே பல ஊர்களில் பல பெயர்களில் அன்னை ஆதிபராசக்தி கோயில் கொண்டிருக்கிறார். அதில் எந்த அம்மனை வழிபட்டால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம் வாருங்கள்.

மதுரை மீனாட்சி அம்மன்

madurai meenatchi amman

மதுரையில் ஆட்சி செய்யும் மீனாட்சி அம்மனை வழிபட்டால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும். திருமணத் தடை அகலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் வேண்டிய வரமெல்லாம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

காஞ்சி காமாட்சி அம்மன்

kanji kamatchi amman

- Advertisement -

அன்னை காமாட்சி நம்முடைய விருப்பங்களை எல்லாம் பூர்த்தி செய்பவள். கமாட்சி அம்மனை வழிபட்டால் குடும்பத்தில் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி, மகிழ்ச்சி ஏற்படும். இந்த அம்மனுக்கு விருச்சிப்பூவால் மாலை கட்டி வணங்கிவிட்டு வந்தால் சகல நலன்களும் உண்டாகும்.

இருக்கன்குடி மாரியம்மன் 

irukankudi mari amman

விருதுநகர் மாவட்டம்  இருக்கன்குடியில் உள்ள மாரியம்மனை வழிபட்டால், தீராத வயிற்று வலி, கை, கால் வலி ஆகியவை குணமாகும். கண் நோய் உள்ளோர்கள் தேவிக்கு அபிஷேகம் செய்த நீரால் கண்களைக் கழுவ நோய் நீங்குகிறது என்பதும் நம்பிக்கை.

சமயபுரம் மாரியம்மன்

samayapuram mari amman

திருச்சிராப்பள்ளியிலிருந்து 17 கி.மீ தொலைவில் உள்ளது சமயபுரம் மாரியம்மன் கோயில். ஆதிபராசக்தியாக இருக்கும் சமயபுரம் மாரியம்மனுக்கு, ‘மகமாயி・என்ற இன்னொரு பெயரும் உண்டு. இங்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கோயில் வளாகத்தில், காலையில் புனித நீராடி அம்மனை வழிபட்டுச் சென்றால் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம்.

வெக்காளி அம்மன்

vekkali amman

வெக்காளி அம்மன், பக்தியுடன் வேண்டுவோரது குறைகளைத் தீர்ப்பவள்; தீயவர்களிடம் வெம்மை காட்டி அவர்களை அழிப்பவள்; பக்தர்களிடம் தாய்க்குத் தாயாக, சேய்க்கு சேயாக இருப்பவள்; வெக்காளி அம்மனை வெள்ளிக்கிழமைகளில்  மனதார வழிபட்டு, அர்ச்சனை செய்தால் குடும்ப ஒற்றுமை, குழந்தை பாக்கியம், உடல் ஆரோக்கியம் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.

துர்கை அம்மன்

durgai amman

துர்கை என்பவள் துக்கம் தீர்ப்பவள். ராகுகால பூஜைக்கு உரியவள்.  ஒருவருக்கு ராகு திசையோ அல்லது ராகு புத்தியோ நடைபெறும்போது, துர்கைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், ராகுவினால் ஏற்படக்கூடிய அசுப பலன்கள் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.