எந்த நாளில் விளக்கை துலக்கினால் என்ன நடக்கும் தெரியுமா ?

vilaku-1

பொதுவாக வீட்டில் உள்ள விளக்கை செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் துளக்கக்கூடாது என்பதை பலரும் அறிந்திருப்பர். அதை தவிர்த்து மற்ற நாட்களில் விளக்கை துலக்கினால் என்ன பலன் என்று இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

vialku

ஞாயிறு
ஞாயிற்று கிழமை பலரது வீடுகளில் அசைவ உணவை சமைப்பது வழக்கம். அப்படி அசைவ உணவை சமைத்தால் அன்று விளக்கை துளக்கக்கூடாது. அசைவ உணவை சமைக்காத வீடுகளில் அன்று விளக்கை துலக்குவதால் கண் சம்பந்தமான நோய்கள் தீரும்.

திங்கள்
திங்கட் கிழமைகளில் விளக்கை துலக்குவதால் மனமானது கண்டதை நினைக்காமல் அமைதிகொள்ளும்.

vilaku

புதன்
புதன் கிழமைகளில் விளக்கை துலக்குவது சிறந்ததாகாது. திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி குடியிருக்கிறாள். ஆகையால் புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் தனயட்சணி வெளியேறிவிடுவாள்.

- Advertisement -

venkala vilaku

வியாழன்
வியாழக்கிழமைகளில் விளக்கை துலக்குவதால் குருபகவானின் அருளால் மனக்கவலைகள் தீரும்

சனி
சனிக்கிழமைகளில் விளக்கை துலக்கினால் வாகன விபத்துகள் ஏற்படாது.

பெண் குழந்தை பெயர்கள் பலவற்றை அறிய இங்கு கிளிக் செய்யவும்

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.