மேல்நோக்கு மற்றும் கீழ்நோக்கு நாளில் எந்தெந்த வேலைகள் செய்வது சிறந்தது?

0
1143
calendar

தினந்தோறும் காலண்டர் பார்பவர்களா நீங்கள்? அப்படியானால் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் இப்படியான வார்த்தைகள் உங்கள் கண்களில் நிச்சயம் பட்டிருக்கும். சரி எதிர்காக சில நாட்களை மேல்நோக்கு நாட்கள் என்றும், சில நாட்களை கீழ் நோக்கு நாட்கள் என்றும் மேலும் சில நாட்களை சமநோக்கு நாட்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று யோசித்தது உண்டா? அந்த நாட்களில் என்னென்ன வேலைகள் செய்யலாம் தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்.

calendar

மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் ஆகிய மூன்றும் அந்த நாளுக்குரிய நட்சத்திரத்தின் அடிப்படையிலேயே கணிக்கப்படுகிறது.

மேல்நோக்கு நாள்:
உத்திரம், உத்திராடம், ரோகிணி, பூசம், திருவாதிரை , அவிட்டம்தி, திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் மேல்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே மேல்நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாட்களில் மேல்நோக்கி செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது. உதாரணத்திற்கு கட்டிடம் எழுப்புவது, மரங்களை நடுவது, மேல்நோக்கி வளரக்கூடிய விதைகளை விதைப்பது போன்றவற்றை செய்யலாம்.

calendar

கீழ்நோக்கு நாள்:
கிருத்திகை, பரணி , பூரம், ஆயில்யம், விசாகம், மகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் கீழ்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே கீழ்நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாட்களில் கீழ் நோக்கி செய்யும் வேலைகளை துவங்குவது சிறந்தது. உதாரணத்திற்கு கிணறு தோண்ட ஆரமிப்பது, வீட்டில் போர் வெல் போடுவது, சுரங்கம் தோண்டுவது, மண்ணிற்கு கீழ் வளரக்கூடிய காய்கறிகள் கிழங்குகளை பயிரிடுவது போன்றவற்றை செய்யலாம்.

calendar

சமநோக்கு நாள்:
அஸ்தம், அஸ்வினி, அனுஷம், மிருகசீரிஷம், சுவாதி, புனர்பூசம், சித்திரை, கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் சமநோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே சமநோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாட்களில் ஓரளவிற்கு சமமாக செய்யும் வேலைகளை துவங்குவது சிறந்தது. உதாரணத்திற்கு சாலை அமைப்பது, சமமான சாலையில் ஓட்டக்கூடிய வாகனங்கள் வாங்குவது, வீட்டிற்கு தளம் அமைப்பது, வயல்களை உழுவது போன்றவற்றை செய்யலாம்.