உங்களுடைய பர்ஸ் எப்படி இருக்கும்? இந்த மாதிரி பர்ஸ் உபயோகித்தால் வீண் விரயம் ஆகாமல் பணம் அதிகம் சேருமாம்!

purse-cash
- Advertisement -

நாம் பயன்படுத்தும் மணி பர்ஸ் கூட நம்முடைய பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் என்பது எவ்வளவு பேருக்கு தெரியும்? கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும், அதில் இருக்கும் தொகை தேவையில்லாத செலவு ஏற்படுகிறதா என்பதை பார்க்க வேண்டும்? ஒரு நல்ல விஷயத்திற்காக நாம் செலவு செய்வது பரவாயில்லை. ஆனால் அதுவே தேவை இல்லாமல் செலவு செய்ய நேர்ந்தால் அது வீண் விரயம் தான். உதாரணத்திற்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்காக நாம் செலவிடும் தொகை வீண்விரயம் தான்.

purse

நம் உடல் ஆரோக்கியமாக இருந்தால் அந்த தொகையை நாம் செலவு செய்ய வேண்டிய அவசியம் வந்திருக்காது. இது ஒரு உதாரணம் தான். இது போல் எவ்வளவு தேவையற்ற செலவுகளை, நமக்கே தெரியாமல் கூட வீணாக நாம் செய்து கொண்டிருப்போம். சிறு சிறு தொகை கூட ஒரு மாதத்தில் எடுத்துக் கொண்டால் மிகப் பெரிய செலவாக வந்து நிற்கும். அந்த தொகை உங்களிடமிருந்து இருந்தால் நல்ல விஷயத்திற்கு பயன்படுத்தி இருக்கலாம் என்ற எண்ணம் வரும்.

- Advertisement -

சுபகாரியங்களுக்கு பயன்படுத்தி இருக்கலாம் அல்லது நமக்கு பிடித்த ஏதாவது ஒரு பொருளை வாங்கி இருக்கலாம். ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு இருக்கலாம். இப்படி நிறைய விஷயத்திற்கு அந்த தொகையை நாம் உபயோகப்படுத்தி இருக்கலாம். ஆனால் நம்மால் அதை நல்ல விஷயத்திற்கு செய்ய முடியாமல், வீண் விரயமாக செய்கிறோம் என்றால் அது அவ்வளவு நல்லதல்ல. இதை சரி செய்ய உங்களுடைய மணிபர்ஸ் இப்படி இருந்தால் நிச்சயமாக விரைவில் சரி செய்து விட முடியும். நம்முடைய மணிபர்ஸ் எப்படி இருக்க வேண்டும்? என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம் வாருங்கள்.

cash-counter

பெரிய பெரிய தொழில் நிறுவனங்கள், வியாபார ஸ்தலங்கள், பிரம்மாண்ட கடைகள் போன்ற இடங்களில் அவர்கள் பணம் வைத்திருக்கும் அந்த இடமானது பிரத்தியேகமான வடிவத்தில் அமைந்திருக்கும். அதாவது அவர்கள் பணம் வைக்க பயன்படுத்தும் பெட்டி, அல்லது இடம் சதுர வடிவில் இருப்பதை பார்த்திருப்போம். பார்க்காதவர்கள் இனி கவனித்து பாருங்கள். ஏன் சதுர வடிவில் அமைத்திருக்கிறார்கள் தெரியுமா? பணம் வைக்கும் இடம் மற்ற வடிவங்களை காட்டிலும், சதுர வடிவத்தில் இருந்தால் வீண் விரயங்கள் தடுக்கப்படும். சுப விரயங்களுக்கு அந்த தொகை பயன்படுமாறு வாய்ப்புகள் உண்டாகுமாம். அதனால் தான் சதுர வடிவத்தில் அமைத்து வைத்திருப்பார்கள்.

- Advertisement -

இதே லாஜிக் தாங்க மணி பர்ஸ்களிலும் பயன்படுத்த வேண்டும். நாம் உபயோகிக்கும் மணிபர்ஸ் செவ்வகமாக இருக்கும். இது பெரும்பாலும் அனைவராலும் பயன்படுத்தப்படும் வடிவம். இதன் நிறைய பேருக்கு தேவையற்ற விரயங்கள் செய்ய கூடிய வாய்ப்புகள் உருவாகிறது. ஒன்றாம் தேதி சம்பளம் வாங்கும் பொழுது மணி பர்ஸ் புஷ்டியாக தான் நிறைந்திருக்கும். ஆனால் 15ஆம் தேதிக்குள் மெலிந்து போய் விடும். உங்களுடைய மணி பர்சை செவ்வக வடிவில் இருந்து சதுர வடிவத்திற்கு மாற்றி பாருங்கள். தேவையற்ற செலவுகள் தவிர்த்து, நல்ல செலவுகள் செய்வதற்குரிய வாய்ப்புகள் உங்களுக்கும் உருவாகும்.

purse

எவ்வளவு தான் கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும், அதை சரியான விஷயத்திற்கு பயன்படுத்த வேண்டும். தாம்தூம் என்று தேவையில்லாத செலவு செய்தால், பின்னாடி நாம் தான் கஷ்டப்பட வேண்டியிருக்கும். நமக்காக யாரும் கஷ்டப்பட போவதில்லை. எந்த செலவையும் திட்டமிடலுடன் செய்ய வேண்டும். முதலில் உங்கள் பர்சில் இருந்து ஒரு ரூபாய் செலவு செய்தாலும் அதை எழுதி வைப்பதை பழக்கமாக வைத்துக் கொள்ளவும். இப்படி எழுதி வைப்பதால் எந்த விஷயத்திற்காக தேவையில்லாமல் நீங்கள் செலவு செய்கிறீர்கள் என்கிற உண்மையான விஷயம் உங்களுக்கு விரைவில் தெரியவரும் என்பதைக் கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
பண தடையை உண்டாக்கும் இந்த பொருட்களெல்லாம் உங்கள் பீரோவில் இருந்தால் உடனே வெளியே எடுத்து வைத்து விடுங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -