Whatsapp : வாட்ஸ்அப் பீட்டா அப்டேட் செய்தால் இவை அனைத்தும் அழியும் – புதிய சிக்கல்

Whatsapp
- Advertisement -

தற்போது அலசிப்பேசி இல்லாதவர்கள் என எவரையும் பார்க்க முடியாது. அதே சமயம் அந்த அலைபேசியில் வாட்ஸ்ஆப் இல்லாமலும் எவரும் இருப்பதில்லை. மெட்டா நிறுவனத்தின் இந்த வாட்ஸ்ஆப் செயலியானது ஆரம்பத்தில் தகவலை குறுஞ்செய்திகளாக பரிமாறிக்கொள்ள அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், இதன் அடுத்தடுத்த அப்டேட்டுகள் பல நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கி, பயனாளர்களின் பல தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது.

watsapp

இந்த வாட்ஸ்அப் செயலியில் அவ்வப்போது பயனாளர்களின் வசதிக்கு ஏற்ப புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப் அடுத்ததாக ஒரு அப்டேட்டை அறிமுகப்படுத்த உள்ளது. எப்போதும் ஒரு அப்டேட் அறிமுகப்படுத்தும் முன் அதனை பீட்டா பயனாளர்களுக்கு சோதனைக்காக அனுப்பப்படும்.அதனை பீட்டா டெஸ்டர்கள் டவுன்லோட் செய்து பயன்படுத்தி சோதனை செய்வார்கள்.

- Advertisement -

அவ்வாறு நடந்த சோதனைக்கு பின்பே வாட்ஸ்அப் செயலி பயனாளர்களுக்கு அப்டேட்டினை தரும். தற்போது வெளிவந்துள்ள அப்டேட்டை பயன்படுத்திய பீட்டா டெஸ்ட் உபயோகிப்பவர்கள் புதிய அப்டேட்டில் சில குறைபாடுகள் உள்ளது என்று அறிவித்துள்ளனர். அதன்படி புதிய அப்டேட்டினை நீங்கள் டவுன்லோட் செய்தால் உங்களின் சேட் ஹிஸ்டரி அழிந்துவிடும.

watsapp

மேலும் மீடியாவில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோ போன்றவைகள் அழிந்து விடுகின்றன. மேலும் சில வாட்ஸ்அப் பயன்படுத்தும் நம் நண்பர்களின் புகைப்படம் மறைந்து வெறும் நம்பர் மட்டும் தெரிகிறது. இது போன்ற பல குறைபாடுகள் இந்த புதிய அப்டேட்டில் உள்ளது. எனவே, இப்போது வந்திருக்கும் அப்டேட்டை வாட்ஸ்அப் செயலியில் செய்ய வேண்டாம் என்று பீட்டா பயனாளர்கள் கூறிவருகின்றனர்.

- Advertisement -