சுவையான கோதுமை மாவு அப்பம் 10 நிமிடத்தில் மாலையில் இப்படி செய்தால் டீயுடன் ருசிக்கலாமே!

wheat-appam
- Advertisement -

கோதுமை மாவு கொண்டு செய்யப்படும் இந்த அப்பம் ரொம்ப ரொம்ப ஆரோக்கியமானதாக இருக்கும். மாலை நேரத்தில் டீயுடன் இந்த அப்பம் செய்து சாப்பிட்டால் போதும்! அந்த நாளே நிறைவடைந்தது போல் இருக்கும். ரெண்டு அப்பம் சாப்பிட்டால் கூட வயிறு நிரம்பிவிடும். இதில் தேங்காய் எல்லாம் சேர்ப்பதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். வீட்டிற்கு திடீரென யாராவது விருந்தாளிகள் வந்தால் கூட சுலபமாக இந்த அப்பம் செய்து கொடுத்தால் அவர்கள் வயிறார சாப்பிட்டு, மனதார வாழ்த்திவிட்டு செல்வார்கள். அத்தகைய கோதுமை அப்பம் செய்வது எப்படி? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

wheat-flour

கோதுமை அப்பம் செய்ய தேவையான பொருட்கள்:
ரவை – அரை கப், சர்க்கரை – அரை கப், ஒரு தண்ணீர் – 3 கப், கோதுமை மாவு – 2 கப், துருவிய தேங்காய் – கால் கப், உப்பு – 2 சிட்டிகை, ஏலக்காய்தூள் – அரை டீஸ்பூன், சமையல் சோடா – கால் டீஸ்பூன், முந்திரி, பாதாம் பொடித்தது – ஒரு டேபிள்ஸ்பூன், சமையல் எண்ணெய் – தேவையான அளவு.

- Advertisement -

கோதுமை அப்பம் செய்முறை விளக்கம்:
கோதுமை அப்பம் செய்ய முதலில் அரை கப் அளவிற்கு ரவை எடுத்துக் கொள்ளுங்கள். ரவையை வறுத்து சேர்த்தாலும் சரி, வறுக்காமல் சேர்த்தாலும் சரி பரவாயில்லை. அதனுடன் அரை கப் அளவிற்கு சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் எடுக்கும் கப் அளவு ஒரே கப்பாக இருப்பது நல்லது. அதே கப் அளவிற்கு ஒரு கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். ரவை நன்கு ஊறி சர்க்கரை கரைந்து விடும்.

appam7

அதன் பிறகு ரவையுடன் 2 கப் அளவிற்கு கோதுமை மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். கோதுமை மாவு கரைய அதே கப்பில் மீண்டும் 2 கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். மொத்தம் மூன்று கப் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ள வேண்டும். துருவிய தேங்காய் அரை கப் சேர்த்துக் கொள்ளுங்கள். எந்த இனிப்பு வகை செய்தாலும் அதில் 2 சிட்டிகை உப்பு சேர்த்து செய்தால் இன்னும் சுவை அதிகரிக்கும். எனவே இரண்டு சிட்டிகை அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் அதனுடன் ஏலக்காய்தூள் அரை டீஸ்பூன், சோடா உப்பு கால் டீஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். சமையல் சோடா சேர்த்தால் அப்பம் உப்பாலாக சூப்பராக வரும். சமையல் சோடா சேர்க்க விரும்பாதவர்கள் அதனைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. பின்னர் அதனுடன் முந்திரி, பாதாம் போன்ற நட்ஸ் வகைகளில் உங்களிடம் இருப்பதை கொண்டு அதனை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த நட்ஸ் வகைகள் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அப்பம் செய்ய மாவு தயாராகி விட்டது. அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள்.

appam

தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அடுப்பை மீடியமாக வைத்துக் கொண்டு மாவை குழி கரண்டியால் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றவும். நீங்கள் ஊற்றிய உடன் மேலே எழும்பி வரும். ஒருபுறம் பொன்னிறமாக வறுபட்டதும், திருப்பி போடுங்கள். இரண்டு புறமும் சிவக்க வெந்ததும் அப்பத்தில் இருக்கும் எண்ணெயை வடிகட்டி ஒரு டிஷ்யூ பேப்பரில் வைத்து பரிமாற வேண்டியது தான். சுட சுட டீ யுடன் இந்த அப்பத்தை சாப்பிடும் பொழுது அலாதியான சுகம் உண்டாகும். நீங்களும் வீட்டில் முயற்சி செய்து பார்த்து பயனடையலாமே!

- Advertisement -