கோதுமை மாவு இருந்தால் 10 நிமிடத்தில் இந்த கட்லெட்டை தயார் செய்துவிடலாம். ஈவினிங் டீ குடிக்கும் போது சாப்பிட பெர்ஃபெக்ட் ஹெல்தி ஸ்னாக்ஸ்.

cutlet
- Advertisement -

குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் இருந்து வந்த பிறகு அவர்களுக்கு சாப்பிட கொடுக்க இந்த கட்டலெட்டை செய்து பாருங்கள். இது சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும். அதே சமயம் நம் கையால் செய்த ஆரோக்கியமான சினேக் ரெசிபி. உங்க வீட்ல வெங்காயம், தக்காளி, கோதுமை மாவு இருக்கா. கண்ண மூடிக்கிட்டு இந்த ரெசிபியை நீங்க ட்ரை பண்ணி பார்க்கலாம். சப்பாத்தி செய்வதை விட இந்த கட்லட் செய்வது ரொம்ப ஈஸிங்க. வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த ரெசிபியை பார்த்து விடுவோம்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் – 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் சீரகம் – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை பொடியாக நறுக்கியது – 2 கொத்து, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது – 2, இந்த பொருட்களை எல்லாம் போட்டு முதலில் வதக்குங்கள்.

- Advertisement -

அதன் பின்பு மிகவும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன், இந்த பொருட்களை போட்டு வதக்க வேண்டும். பிறகு மிகவும் பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 2, கொத்தமல்லி தழை – 2 கைப்பிடி அளவு போட்டு, தக்காளி பழங்களையும் லேசாக ஒரு நிமிடம் வதக்கி விடுங்கள். பிறகு மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், மல்லித்தூள் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு, போட்டு எல்லா பொருட்களையும் நன்றாக கலந்து கொடுக்க வேண்டும். தண்ணீர் ஊற்ற வேண்டாம். உப்பு போட்ட பிறகு இதிலேயே தண்ணீர் விடும்.

இறுதியாக கோதுமை மாவு – 1 கப், அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன், சேர்த்து இந்த எல்லா பொருட்களையும் கட்டிகள் இல்லாமல் சூட்டிலேயே நன்றாக கலந்து விடுங்கள். பிசைந்த சப்பாத்தி மாவு போல நமக்கு இந்த மாவானது கிடைக்கும். அடுப்பை அணைத்து விடுங்கள். (ரொம்பவும் கட்டியாக இருக்குமாக மாவு இருக்கக் கூடாது. கட்லெட் மாவு போல இது கொஞ்சம் சாஃப்ட் ஆகத்தான் இருக்கும்.) கை பொறுக்கும் சூடு வரும் வரை மாவு  ஆறட்டும். உங்களுடைய கைகளில் நன்றாக எண்ணெய் தடவிக் கொண்டு இந்த மாவிலிருந்து சிறிய சிறிய உருண்டைகளாக எடுத்து உள்ளங்கையில் வைத்து கட்லெடை போல தட்டி தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு பேனை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். அந்த எண்ணெயில் தட்டி வைத்திருக்கும் இந்த கட்டிலட்டை போட்டு மிதமான தீயில் இரண்டு பக்கமும் பொன்னிறமாக சிவக்க வைத்து எடுத்தால் சூப்பரான ஸ்நாக்ஸ் தயார். (இந்த கட்லெட் மூழ்கும் அளவிற்கு கொஞ்சம் நிறைய எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.) ஒரு டொமேட்டோ சாஸ் இருந்தால் கூட அதை தொட்டு குழந்தைகள் சாப்பிட்டுக் கொள்வார்கள்.

பின்குறிப்பு: கடாயில் வெங்காயம் தக்காளி எல்லா மசாலா பொருட்களை சேர்த்ததும் இறுதியாக கோதுமை மாவு அரிசி மாவு சேர்ப்பீர்கள் அல்லவா. அப்போது உங்களுக்கு தண்ணீர் சேர்க்காமல் இது சப்பாத்தி மாவு பக்குவத்திற்கு வரவில்லை. மாவு ரொம்பவும் டிரை ஆக இருக்கிறது எனும்போது இதில் கொஞ்சம் நீங்கள் தண்ணீர் தெளித்து கூட கலந்து கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான்.

- Advertisement -