தக்காளியே இல்லாமல் இவ்வளவு ருசியாக கார சட்னி அரைக்க முடியுமா? இந்த ரெசிபி கூட நல்லா தான் இருக்கு.

chutney10
- Advertisement -

தக்காளி என்று சொன்னாலே எல்லோருக்கும் ஒரு பயம். காரணம் தக்காளியின் விலைவாசி இன்று ஆப்பிளுக்கு சமமாக விற்கின்றது. எல்லாரும் தக்காளி சட்னிக்கு பதில் ஆப்பிள் சட்னியை அரைத்து சாப்பிடலாம் போல. சரி சரி தக்காளி இல்லாமல் ஏதாவது காரச் சட்னி அரைக்க முடியுமா. நாவிற்கு ருசி தரும் அளவில் அது இருக்க வேண்டும். அதேசமயம் சுலபமாகவும் செய்ய வேண்டும். தக்காளியே சேர்க்காமல் பூண்டை வைத்து சூப்பரான ஒரு கார சட்னி ரெசிபி வித்தியாசமான முறையில் எப்படி அரைப்பது? ரெசிபியை படித்து தெரிஞ்சுக்கலாம் வாங்க.

செய்முறை

இந்த சட்னிக்கு நமக்கு 100 கிராம் அளவு பூண்டு தேவை. முதலில் தோலை உரித்து பூண்டை தயாராக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு சின்ன கிண்ணத்தில் மிளகாய்த்தூள் 1 டேபிள் ஸ்பூன், மல்லித்தூள் 2 டேபிள் ஸ்பூன், சீரகத்துள் 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், உப்பு தேவையான அளவு போட்டு, இதில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தோலுரித்து வைத்திருக்கும் 100 கிராம் அளவு பூண்டு, சின்ன நெல்லிக்காய் அளவு புளி, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மிக்ஸியை ஓட விட்டால், இது அறைபடும். விழுதாக அரைத்தவுடன் இதுவும் அப்படியே இருக்கட்டும்.

இப்பொழுது சட்னியை தாளித்து விடலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு 1/2 ஸ்பூன், போட்டு கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். இப்போது மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் பூண்டு பேஸ்ட்டை இதில் போடுங்கள். பூண்டின் பச்சை வாடை போகும் அளவுக்கு இதை எண்ணெயிலேயே வதக்க வேண்டும். அடுப்பு கட்டாயம் சிம்மில் இருக்க வேண்டும். பூண்டு கருகி விடக்கூடாது.

- Advertisement -

பூண்டின் பச்சை வாடை போன பிறகு, நாம் ஏற்கனவே கிண்ணத்தில் கரைத்து வைத்திருக்கிறோம் அல்லவா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், சேர்த்த கலவை அதை அப்படியே எடுத்து கடாயில் சிவந்து கொண்டிருக்கும் பூண்டில் ஊற்றி விடுங்கள். இப்போது மீண்டும் ஒரு கரண்டியை வைத்து நன்றாக கலந்து கொடுங்கள். எல்லா மசாலா பொருட்களும் எண்ணெயிலேயே வதங்கி வெந்து, எண்ணெய் திரிந்து வரும் வரை இந்த சட்னி அடுப்பில் இருக்கட்டும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் விசேஷ நாட்களில் இட்லிக்கு செலவு கம்மியா அதே சமயம் டேஸ்டா சட்னி அரைக்கணும் நினைச்சா இந்த சட்னி அரைங்க எவ்வளவு கெஸ்ட் வந்தாலும் அசால்டா சமாளிக்கலாம்.

பச்சை வாடை போன பிறகு எண்ணெய் பிரிந்து வந்த பிறகு, அடுப்பை அணைத்துவிட்டு சுடச்சுட இட்லி தோசை சப்பாத்தி எதற்கு வேண்டும் என்றாலும் இதை சைடிஷ் ஆக பரிமாறலாம். இரண்டு நாள் வரை வைத்து சாப்பிடலாம் கெட்டுப் போகாது. தக்காளி சேர்க்காத இந்த கார சட்னி ரெசிபி பிடிச்சவங்க ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -