கோதுமை மாவில் சூப்பரான பஞ்சு போல ஆப்பம் சுட தெரியுமா உங்களுக்கு? ஈஸ்ட் போடாம, சோடா உப்பு போடாம, ஹெல்த்தியான ஆப்பம் ரெசிபி இதோ உங்களுக்காக.

wheat-appam1
- Advertisement -

கோதுமை மாவில் பஞ்சு போல ஆப்பத்தை ஒரு முறை இப்படி சுட்டுப் பாருங்க. இதில் ஈஸ்ட் போட வேண்டாம். சோடா உப்பு கூட போட வேண்டாம். ஆப்பம் பஞ்சு போல ஓட்டை ஓட்டையாக அழகாக சாஃப்டாக கிடைக்கும். வழக்கம்போல இந்த ஆபத்துக்கு தேங்காய்ப்பால் சைடிஷ் ஆக பரிமாறலாம். உங்கள் விருப்பம் போல சைவ குருமா, அசைவ கிரேவி எதை வேண்டும் என்றாலும் சைடிஸ் ஆக வைக்கலாம். நல்ல நிறைவான காலை உணவாகவும், இரவு உணவாகவும் இதை நாம் எடுத்துக் கொள்ளலாம். வாங்க அழகான ருசி தரக்கூடிய அந்த கோதுமை ஆப்பம் எப்படி செய்வது நாமும் தெரிந்து கொள்வோம்.

செய்முறை

இதற்கு நீங்கள் முதலில் 1 டேபிள் ஸ்பூன் அளவு உளுந்தை கழுவி விட்டு நல்ல தண்ணீரை ஊற்றி ஊற வைக்கவும். உளுந்து மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி தனியாக 1 மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். அது அப்படியே ஊறிக் கொண்டு இருக்கட்டும். அடுத்து 1 கப் அளவு கோதுமை மாவு எடுத்துக் கொள்ளுங்கள். 150 கிராம் அளவு கோதுமை மாவுக்கு பின் சொல்லக்கூடிய அளவுகள் சரியாக இருக்கும். இதில் 5 இலிருந்து 6 ஆப்பங்கள் உங்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -

ஒரு அகலமான பவுலில் கோதுமை மாவு 1 கப், துருவிய தேங்காய் 1/2 கப், வேகவைத்து சாதம் 1 கைப்பிடி அளவு, ஏற்கனவே ஊற வைத்திருக்கும் உளுந்து இந்த பொருட்களை எல்லாம் ஒன்றாக போட்டு 1 கப் அளவு தண்ணீரை ஊற்றி கட்டிகள் இல்லாமல் கரைக்கவும். நிறைய தண்ணீர் ஊற்றி விடக்கூடாது. தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் 1/4 கப் அளவு மட்டுமே தண்ணீரை ஊற்றி இந்த மாவை கரைத்து, அதை அப்படியே மிக்ஸி ஜாரில் ஊற்றிக் கொள்ளுங்கள்.

இதோடு 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியை ஓட விடுங்கள். மாவு நைசாக அரைபட்டதும் இதை தனியாக ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளவும். இந்த மாவுக்கு தேவையான அளவு உப்பு, போட்டு ஒரு ஸ்பூனை வைத்து நன்றாக கலந்து மூடி போட்டு அப்படியே வைத்து விடுங்கள். இந்த மாவு நன்றாக புளித்து வரவேண்டும்.

- Advertisement -

நல்ல வெயில் இருக்கும் இடத்தில் இருந்தால் மூன்று மணி நேரத்தில் மாவு புளித்து விடும். இல்லை என்றால் ஒரு இரவு முழுவதும் மாவை புளிக்க விட்டால் ஆப்பம் சூப்பராக கிடைக்கும். புளித்த மாவை ஒரு கரண்டியை வைத்து கலந்து கொள்ளுங்கள். மாவு தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும். மாவு ரொம்பவும் திக்காக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்க்கலாம். ரொம்பவும் தண்ணீர் ஆகிவிட்டால் ஆப்பம் கடாயோடு ஒட்டி பிடிக்கும். வழக்கம்போல ஆப்ப கடாயில் ஆப்பம் வார்க்க வேண்டியது தான். நாண் ஸ்டிக் தவா அல்லது இரும்பு தவாவில் கூட இந்த ஆப்பம் ஒட்டாமல் சூப்பராக வரும்.

இதையும் படிக்கலாமே: தட்டைப்பயிறு குழம்பை ஒரு முறை இந்த மசாலா அரைத்து ஊற்றி வைத்து பாருங்க. நல்ல கம கமன்னனு இருக்கும் இதோட வாசத்துக்கு பக்கத்து வீட்டுக்காரங்க கூட எனக்கும் கொஞ்சம் குழம்பு தாங்களேன் கேட்டு வந்துருவாங்க.

நாண்ஸ்டிக் தவா என்றால் அந்த ஆப்பக்கடாய் லேசாக சூடானதும் மாவை அப்படியே வார்க்கலாம். இரும்பு தவா என்றால் அதில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி நன்றாக துடைத்து விட்டு, மிதமான தீயில் ஆப்பத்தை சுட்டு எடுங்க. சூப்பராக ஆப்பம் கூடை கூடையாக கிடைக்கும். சுடச்சுட சாப்பிட்டால் நிறைவான காலை உணவு முடிந்தது. ரெசிபி பிடிச்சவங்க கட்டாயம் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -